முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மஹா சிவராத்திரி விரதம் மஹிமை

மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி .


அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் நீங்கி காரிய வெற்றி ஏற்படும். 'சிவாய நம' எனச் சிந்தித்தால் 'அபாயமின்றி 'உபாயம்' ஏற்படும் என்று முன்னோர்கள் கூற்று. அப் புனிதமான நாளில் விரதமிருந்தால் புண்ணியம் கூடும்.

பொருளாதார நிலையுயரும். ஒரு நாள் முழுவதும்,ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிபட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும். அதனால் தான் "சிவராத்திரி" விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது. விரதம் ஐந்து வகைப்படும்.

நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடிக்கின்றனர்.


விரதம் கடைப்பிடிப்போர் முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்ய வேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.


சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்ப பொருள்களைக் கொடுத்துதவலாம்.மஹா சிவராத்திரி வியாதன் எனும் வேடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான் அதிலிருந்து தான் குல தெய்வ வழிபாடு மற்றும் பாரி வேட்டை முறை ஏற்பட்டது சிவராத்திரியைப் பற்றி அவனுக்குத் தெரியாது.


நாள் முழுவதும் அலைந்தும் ஒரு மிருகமும் அவனுக்குக் கிடைக்கவில்லை. பசியால் வாடிக்கொண்டிருக்கும் தன் குடும்பத்தினரை எண்ணி வருந்தி திரும்பிக்கொண்டிருந்தவன், வழியில் நீரோடையில் நீர் அருந்தி  ஏதாவது மிருகம் அந்த நீர்நிலைக்கு வரும். அதைக்கொன்று எடுத்துச்செல்லலாம் என்ற நம்பிக்கையுடன், சிறிது நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அருகிலிருந்த மரத்திலேறி அமர்ந்துகொண்டான். அது வில்வ மரம் என்பதோ அதன்கீழாக சிவலிங்கம் இருப்பதும் அவனுக்குத் தெரியாது. வேடன் உறங்காமல் மிருகத்துக்காகக் காத்திருந்த  போது ஒரு பெண்மான் நீர்நிலைக்கு வர அது முதல் ஜாமம் முடிவடையும் நேரம். மானைக் கண்ட வேடன் அம்பை எடுத்து நானேற்றி வில்லில் பூட்ட. அவனது அசைவினால் ஒரு வில்வ இலையும் சிறிது தண்ணீரும் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தின்மீது விழுந்தன.

வேடன் தன்னை குறிபார்ப்பதை அறிந்த மான், ""வேடனே, என் இளம்குட்டிகள் என்னை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும். தயவுசெய்து என்னைக் கொல்லாதே'' என்றதாம்.


""மானே, என் குடும்பத்தினரின் பசியைப் போக்கவேண்டியது எனது கடமை. உன்னைக் கொல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை'' என்றான் வேடன். 


அதற்கு அந்தப் பெண்மான், ""அப்படியென்றால் எனக்கு கொஞ்சம் அவகாசம் தாருங்கள். என் குட்டிகளை இளைய பெண்மானிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிடுகிறேன். என்னை நம்புங்கள். என் குட்டிகள்மீது சத்தியம்'' என்றது.

மானின் வேண்டுகோளுக்கு வேடன் இசைந்தான். மான் தன் இருப்பிடம் நோக்கி ஓடியது.

அந்த மானை எதிர்பார்த்து தூங்காமல் காத்துக்கொண்டிருந்தபோது, மற்றொரு பெண் மான் தண்ணீர் பருக வந்தது 


அதைக்கொல்ல அம்பை எடுத்த போது வில்வ இலையும் தண்ணீரும் லிங்கத்தின் மீது விழுந்தன. அது இரண்டாம் ஜாமம் முடிவடையும் நேரம். ஓசையைக் கேட்டு நிமிர்ந்து பார்த்த மான் வேடன் தன்மீது குறிவைப்பதைக் கண்டு திகைத்து, ""வேடனே, என்னைக் கொல்லாதீர்கள். என் மூத்தாளைத் தேடி இங்குவந்தேன். அவள் குட்டிகள் என் பொறுப்பில் இருக்கின்றன. 


அவற்றை அவளிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிடுகிறேன். பிறகு நீங்கள் என்னைக் கொல்லலாம்'' என்றது. வேடன் அதற்கும் அனுமதித்தான்.


மூன்றாம் சாமம் முடியும் வேளையில் ஒரு ஆண் மான் நீர் பருக வந்தது. அதைக்கண்ட வேடன் வில்லை எடுத்தபோது, வில்வ இலையும் சிறிது நீரும் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தின்மீது விழுந்தன.


வேடன் தன்னைக் கொல்லப் போவதை அறிந்த ஆண் மான், ""ஐயா, என் இரு மனைவிகளையும் குட்டிகளையும் தகுந்தவரிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிடுகிறேன். பிறகு என்னைக் கொல்லுங்கள்'' என்று கெஞ்சியது. அதற்கும் அனுமதியளித்த வேடன், அந்த மான்கள் ஒன்றின் மீது ஒன்று வைத்திருக்கும் பாசத்தை எண்ணி வியந்தபடி, மான்களை எதிர்பார்த்து உறங்காமல் மரத்தில் அமர்ந்திருந்தான்.

தங்கள் இருப்பிடம் திரும்பிய மான்கள் நடந்த நிகழ்ச்சியைத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டன. ""வேடனுக்கு பலியாக நான் செல்கிறேன்'' என்று ஒரு மான் சொல்ல, ""இல்லை, நான்தான் போவேன்'' என்றது இன்னொன்று. இப்படி மூன்று மான்களுமே விவாதித்தன.

ஒருவர் உயிரைத் தியாகம் செய்து மற்ற இருவர் உயிர் வாழ்வதைவிட தங்கள் சத்தியத்தைக் காப்பாற்ற மூவருமே வேடனிடம் செல்வதென்று தீர்மானித்தன.

பெற்றோர்கள் பலியாகச் செல்லும்போது தாங்களும் உயிர்வாழ விரும்பவில்லை எனக்கூறி, குட்டி மான்களும் அவற்றைப் பின்தொடர்ந்தன.

நான்காவது ஜாமம் முடிவடையும் நேரம். மான்கள் கூட்டமாக வருவதைக் கண்ட வேடன் மகிழ்ந்து வில்லையும் அம்பையும் எடுத்தபோது, சிவலிங்கத்தின் மீது தண்ணீரும் வில்வ இலையும் விழுந்தன.

நான்கு ஜாமங்களிலும்




 மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்கிறோம் என்றோ, பூஜையின் மகிமை பற்றியோ அறியாமல் வேடன் பூஜை செய்திருக்கிறான்.

நித்திரையின்றி செய்த இந்த பூஜையின் காரணமாக சிவனருள் கிட்டி, அவனுக்கு ஞானம் பிறந்தது.

வேடன் இருக்குமிடத்துக்கு வந்துசேர்ந்த மான்கள் அவனிடம், ""எங்களைக் கொன்று உங்கள் குடும்பத்தினருடன் பசியாறி மகிழவேண்டும். நாங்கள் செய்த சத்தியத்தின்படி திரும்பி வந்திருக்கிறோம்'' என்றன.

ஞானம் பிறந்துவிட்டபின் வேடனுக்கு மான்களைக் கொல்ல மனம் வரவில்லை ஐந்தறிவு படைத்த அந்த மிருகங்களின் பண்புக்குமுன் ஆறறிவு படைத்த தான் தாழ்ந்துபோனதை எண்ணி வெட்கித் தலைகுனிந்தான். அந்த மான்களின் சத்தியம் தவறாத தர்மத்திற்கு அடிபணிவதாகக் கூறினான்.


அப்போது சிவபெருமான் அங்கு காட்சியளித்து, ""வேடனே, உன்னையறியாமல் செய்திருந்தாலும், சிவராத்திரி விரதமிருந்த பலன் உன்னைச் சேரும். அதன்காரணமாக உனக்கு தரிசனம் தந்தேன். நீ வேண்டும் வரத்தைக் கேட்கலாம்'' என்றார். ஈசனைப் பணிந்த வேடன், ""ஐயனே, என் பாவங்களைப் போக்கியருள வேண்டும்'' என்றான்.

அவ்வாறே அருளிய சிவபெருமான், பல செல்வங்களையும் அவனுக்கு வழங்கி, ""வேடனே, இனி உன் பெயர் குகன் என்று வழங்கப்படும். ஸ்ரீமந் நாராயணன் சிறிதுகாலத்தில் இப்பூவுலகில் பிறந்து இங்கு வருவார். அவர் உன்னை சகோதரராக ஏற்றுக்கொள்வார்'' என்று ஸ்ரீராமர் அவதாரத்தை குறிப்பிட்டுக் கூறி, சிவராத்திரி விரதத்தின் மகிமையை விவரித்து மறைந்தார்.

சிவ தரிசனம் கிட்டிய அந்த மான்களும் மிருக உடலை விடுத்து திவ்ய ரூபம் பெற்று சிவபதவி அடைந்தன. வியாதன் என்ற வேடன் பூஜித்த லிங்கம் வியாதேஸ்வரர் என்று பெயர் பெற்றதாக வரலாறு.மகாசிவராத்திரியை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து.

மகாசிவராத்திரியையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;           “மகாசிவராத்திரி என்னும் புனிதமான நாளில் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள். கடவுள்களுக்கெல்லாம் கடவுளாகிய, மஹாதேவர் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். ஓம் நமச்சிவாய."பறம்பு மலையைத் தலைமையிடமாகக் கொண்டது பறம்பு நாடு சங்ககாலத்திற்கு (300 AD முதல் 300 BC வரை) பாரி உள்ளிட்ட குறுநில மன்னர்கள் ஆண்ட நிலையில்  இது மதுரை பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. இந்நாடு பறம்புநாடு, பாரிநாடு, [ எனவும் வழங்கப்படும். இது சங்க காலத்திலிருந்து புகழ் பெற்றிருந்தது. இந்த நாட்டை வேள்பாரி. பொது ஆண்டு  2 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆண்ட் நிலையில் வேளிர் குலத் தலைவனாக விளங்கியவன் ஈரத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவன் வேல்பாரி மன்னன். அதனுடைய எல்லைகளாக,

தெற்கு - திருமோகூர் முதல் கீழ் மேலோடிய வையையாற்றங்கரை -  பரமக்குடி வரை

கிழக்கு - பரமக்குடி- காளையார் கோயில் - முத்து நாடு - அனுமந்தக்குடி- வரை

வடக்கு -- கானாடுகாத்தான், கோனாபட்டு - திருக்கோளக்குடி - பூலாங்குறிச்சி - இடையாத்தூர்  குடுமியான் மலைப்புறம் - பரம்பூர்

மேற்கு - பரம்பூர் - மருங்காபுரி - துவரங்குறிச்சி - நத்தம் மலைகளின் கிழக்குப் பகுதி - அழகர் மலைக் கிழக்குப் பகுதி  - திருமோகூர்

எனக் கூறலாம். பிற்காலத்தில் இப்பரம்பு நாடு பாண்டிய நாடு சார்ந்த மண்டலத்தின் ஒரு பகுதியானது இப்பரம்பு மலை தற்காலத்தில் மங்கைபாகரான சிவ பிரான் குடி கொண்டமலை என்று பிரான் மலை என வழங்கப் பெறுகிறது. இங்குள்ள மங்கைபாகர் கோயில் கருவறை வடக்குப்புற அடிப்படைச் சுவரில்,

...... இந்நாட்டு அறுநூற்றுவனேரிப் பற்றில்

பாரிசுரமும் இக்களங்களில்

என்று குறிக்கப் பெற்றுள்ளது.

அதே கோயில் பின்புறம் முகப்பு அடிப்படை முகப்புப் பட்டைத் தொடரில்,

..... இந்நாட்டு அறுநூற்றுவனேரிப் பற்றில்

பாரிசுரமும் இவ்ஊர்களில் ....பாரி ஆண்ட முன்னூறு ஊர்களை அடங்கிய முதல் ஊர் சிங்கம்புணரி ஆகும்   என்றும் இரு கல்வெட்டுகள் இருக்கின்றன.

இத்தலத்தைப் பற்றியனவாக இருபத்தொரு கல்வெட்டுக்கள் பொது ஆண்டு 1903 ல் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் எட்டுக் கல்வெட்டுகள் ஆராய்ந்து முடிவுகட்டப்பெற்றன. ஏனையவை அறியப் பெறாதன. நான்கு கல்வெட்டுக்கள் மன்னர் குலசேகர பாண்டியனுடைய ஆட்சியில் 10, 13 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தவை. இவற்றை இங்ஙனம் வரையறுத்து எழுதியவர் ஸெவல் எனும் கிருஸ்த்தவ பாதிரியார்.

இத்தலத்தில் மன்னர் சுந்தரபாண்டியன் மண்டபம் (இது  ஆறுகால் மண்டபம் (-144 /1903), லக்ஷ்மி மண்டபம்(-142 /1903), முதலிய மண்டபங்களும் , மங்கைபாகர் கோவில்(-146 /1903), சுப்பிரமணிய சுவாமி கோவில் (-152 /1903) முதலியனவும் கோவிலுக்குள் இருக்கின்றன. பிரான்மலைக் சொக்கநாதர் கோயில் உள்ளது(-154 / 1903). இறைவன் மங்கை பாகர்(-138 /1903) எனவும், கொடுங்குன்றமுடைய நாயனார்(-140 /1903) எனவும், கொடு என்றால் வளைவு அல்லது வளைந்த பகுதி உடைய மலை கொடுங்குன்றம்  அதுவே பரம்பு மலை அது நல்லமங்கைபாகர் எனவும், (-154 /1903) குன்றாண்ட நாயனார் எனவும்,( -202 /1924) குறிப்பிடப்பெறுகின்றார்.

பாண்டிய மன்னர்களில் சுந்தரபாண்டியன் I,சுந்தரபாண்டி யன்II, பராக்ரம பாண்டியன், குலசேகர பாண்டியன், வீரபாண்டியன் இவர்கள் விளக்குக்காகப் பசுக்களும், பொன்னும், சேவார்த்திகட்கு உணவிற்கும், விளக்குத் தண்டு செய்தற்குமாகப் பொன்னும் நிலமும் அளித்த நிவந்தம் குறித்து செய்திகளை அறிவிக்கின்றன; பல கல்வெட்டுக்கள். பொது ஆண்டு 1251 – 1264 க்குள் ஆண்ட கோனேரின்மைகண்டான் காலத்தில் துவராபதி வேளார், பிரபாவபுரந்தரன் ஆகிய இருவருக்கும் நிலம் கொடை அளித்தனர். இம்மடி நரசிங்கராயர் காலத்தில் பிரான்மலைச்சீமை என்றும், திருமலை (நாயக்கர் ஆட்சி காலத்தில் )நாட்டுப்பகுதியான பிரான்மலை என்றும் குறிக்கப் பெறுகின்றது. திப்பரசரையன் நன்மைக்காகக் கேரளசிங்க வளநாட்டு இப்புலி நாயகர் நிலம் அளித்தார். இங்கு ஒரு வியாபாரிகள் சங்கம் இருந்ததாகவும் கல்வெட்டுக் கூறுகிறது(-154 / 1903).

1924 ஆம் ஆண்டில் படியெடுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் 16. அவற்றுள் ஐந்து, பாண்டியர்கள் காலத்தன. ஏனையவை விசயநகர மத்திய பார்வையில் நடந்த மதுரை நாயக்க அரசர்கள் காலத்தன. சடாவர்மன் வீரபாண்டியன் ஆட்சி 9ஆம் ஆண்டில், திருஞானம் பெற்ற பிள்ளையார் படிமத்தை எழுந்தருள் வித்துக் கேரளசிங்க வளநாட்டுக் குலசேகரன் பட்டினத்து அருவியூரானான கொடுங்குன்றமுடையான் பூசைக்கு நிவந்தம் அளித்தான்(-208 /1934). மன்னர் குலசேகர பாண்டியன் காலத்தில் கீழ்வேம்புநாட்டு இராசவல்லி புரத்துக் கொன்றைசேர் முடியானும், திருநெல்வேலி யுடையானும் விளக்குக்கு ஆடுகள் அளித்தனர் (-194 / 1924) . கண்ணமங்கலமான திருவெங்கா உடைய நல்லூர்; அமோகமங்கலமான முதலி நாயக நல்லூர் உடையான் இருவரும் அர்த்தஜாம பூசைக்கு நிலமளித்தனர். அந்தப் பூசைக்குத் தாழ்வுசெய்யாதான் சந்தியென்று பெயர் (-202 / 1924). காரைக்குடியான் ஒருவன் மங்கைநாயகர் வசந்த உற்சவத்திற்காக வாணராய நல்லூரை இறையிலி செய்து அளித்தான் (-203 /1924). விஜயநகர அரசர்கள் வேதபாராயணத்திற்காகவும்(-207 /1924), உற்சவத்திற்காகவும் (-196 /1924), காவனூர் முதலிய இடங்களை தானமளித்தனர்.சிவராத்திரி பாரி வேட்டை நடத்துவதைத் தடுக்க வனத்துறை ரோந்து. சிவராத்திரியை முன்னிட்டு 'பாரி வேட்டை' பூஜைக்கு விலங்குகளை வேட்டையாடி பயன்படுத்துவதைத் தடுக்க வனத்துறையினர் தீவிர ரோந்து செல்கின்றனர். மஹா சிவராத்திரியை முன்னிட்டு சில இடங்களில் பாரி வேட்டை நடக்கிறது. குறிப்பிட்ட கிராம, சமுதாயம் சார்ந்த மக்கள், இரவு முழுவதும் வனப்பகுதியில் மான், முயல், நரி, மான் உடும்பு, ஆகியவற்றை வேட்டையாடுவதையும், மறுநாள் அவற்றை ஊர் மக்கள் ஒரு மிருகம் கிடைத்ததும்  ஊரோடு அவர்களை வரவேற்று ஊரில் வளர்க்கும் ஆடுகளை பலியிட்டு பகிர்ந்து வழங்கிய பின்னர் உண்பதையும் வழக்கத்தில் வைத்துள்ளனர். தற்போது வனத்துறையின் சட்டங்கள் கடுமையான நிலையில் இதைத் தடுக்க வனச்சரகர் கணேஷ்ராம் தலைமையிலான வனக்குழுவினர் பழனி குதிரையாறு அணைப்பகுதி, பாலாறு ஜீரோ பாயின்ட் உள்ளிட்ட பகுதிகளில் 24 மணிநேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக மலைக் கிராமங்களிலும் பாரி வேட்டை தடை, வன உயிர்களை காப்பதன் முக்கியத்துவம், வேட்டையில் ஈடுபடுட்டால் தண்டனை குறித்து எச்சரிக்கை செய்தனர்.   அதுகுறித்து  கணேஷ்ராம் கூறுகையில், 'வனப்பகுதியில் வேட்டையாடுதல், இறந்த விலங்குகளைச் சேகரித்தல் தண்டணைக்குரிய குற்றமாகும். ரூபாய்.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். ஏழு பேர் குழுவாக கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகிறோமென்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...