முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மங்கலதேவி கண்ணகி கோட்டம் சித்ரா பௌர்ணமி விழா

 "அரசியல் பிழைத்தோர்க் கறங்கூற்றாவதூஉம்

உரைசால் பத்தினிக் குயர்ந்தோரேத்தலும்

ஊழ்வினையுருத்துவந் தூட்டும் என்பதூஉம்"                                                                          நம் சூழ்வினைச் சிலம்பு காரணமாக


சிலப்பதிகாரம் சேரநாட்டு மன்னரின் சகோதரர் பட்டம் துறந்து துறவறம் பூண்ட

இளங்கோவடிகள்  மூன்று  காண்டத்தில் கூறும் உண்மைகளிலும் தமிழகத்தின் பண்பாட்டை நிலைநாட்டியுள்ளார் .

வேறெந்தத் தமிழ் இலக்கியத்திலுமில்லாத வகையில் முடியுடை மூவேந்தரையும் அவர் தம் ஆளுகைக்குட்பட்ட சேர சோழ பாண்டிய தமிழ் நிலத்தையும் சமநோக்கோடு காண்கிறார்.

சங்ககாலத்தில் கன்னிப்பெண்களின் காலில் சிலம்பணிவது வழக்கம். ஆனால் சற்று பின்வந்த சிலப்பதிகாரக் காலத்திலே மணமான பெண்கள் மெட்டி போல சிலம்பணிந்தார்கள். அச்சிலம்பிலே ஒரு சிலம்பு கழன்றாலோ  அல்லது உடைந்தாலோ கழட்டினாலோ அபசகுணமாய் அங்கு விபரீதம் நிகழும் என்பது அப்போது ஐதீகம் அல்லது நம்பிக்கை. அவ்வகையிலே வணிகக்குடி  வழி வந்த  கண்ணகியினதும் அரசாட்சி செய்யும் பாண்டிய கோப்பெருந்தேவியினதும் ஒற்றைச்சிலம்புகளே, சிலப்பதிகாரமாயின. 

கண்ணகி தமிழரிடையே ஒரு புதுத்தெய்வமாக உருப்பெற்ற உண்மைக் கதையை (காதையை) சிலப்பதிகாரம் சுவைபடக்கூறுகிறது.

வானோர் வடிவில் வந்த கோவலனோடு பூந்தேர் தெய்வ விமானமேறி கண்ணகி வானகம் சென்ற காட்சியைக் கண்ட பளியங்குடி பழங்குடியினரான பளியரின் மக்கள் கண்ணகியை பூந்தேரில் வந்து அழைத்துச் சென்ற நிகழ்வ அந்த அரிய காட்சியைக் கண்டு  தெய்வமாகப் போற்றினார்கள். அதை அப்படியே சேரமான் செங்குட்டுவனுக்கும் கூறினார்கள்  அவர்கள் இன்றுவரை காப்புக் கட்டி ஆண்டு தோறும்  விழா எடுக்கிறார்கள்.

சிறு குடியீரே சிறு குடியீரே ....என்ற சிலப்பதிகாரத்தில் குன்றக்குரவைப் பாடலைப் பாடி வேங்கை மரத்தின் கீழ் எடுத்த முதற் சடங்கு கண்ணகி சடங்காகும்.  அதனையொட்டி கண்ணகி சடங்கு முறை வழக்கிற்கு வந்தது. 



சேர மன்னன் செங்கூட்டுவன் இமயத்திலிருந்து கணகதிவிஜயனை வென்று அவன் தலையில் சுமக்கவைத்து கல்லெடுத்து வந்து கங்கையில் நீராட்டிக் கொண்டுவந்த அக்கல்லிலிருந்து கண்ணகியின் சிலை வடித்து தனது சேரநாட்டுத்  தலைநகராம் வஞ்சிமாநகரில் அமைத்த கோட்டம் (ஆலயம் அல்லது கோவில்) மங்கலதேவியில் கண்ணகி கோட்டம்  பிரதிஸ்டை செய்தான். குடமுழுக்கு விழாவிற்கு குடகக்கொங்கரும், மாளுவவேந்தனும், கடல்சூழிலங்கை, கயவாகு வேந்தனும் வந்திருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

1892  ஆம் ஆண்டில் தான் சிலப்பதிகாரமும் முதன்முதலில் அச்சிடப்பட்டது.        அதன் பின்பே அதன் புகழ் கற்றவர் மத்தியில் பரவியது.



சிலப்பதிகாரம்  மானுடப்பெண்ணை தெய்வமகளாகச்செய்து நிற்க வழக்குரைப் பனுவல் தெய்வமகளை மானுடப் பெண்ணாகக் காட்டிச் செல்கின்றது.

கண்ணகி வழிபாட்டின் தோற்றம் பற்றி தமிழ் இலக்கிய நூல்கள் மட்டுமல்ல இலங்கை வழி  சிங்கள இலக்கிய நூல்களும் காணப்படுகின்றன. ராஜாவலிய ராஜரத்தினாகார பத்தினிக்கத்தாவ முதலிய சிங்கள நூல்கள் அவை.

வழக்குரைநூல்  சிறிய மணிப்பரல் காரணமாகப் பெரிய போரினைக் கிளப்பிவிட்டுத் தமிழனைத் தமிழன் வென்ற செய்தியினை விரித்துச் செல்கின்றது. ஈழநாட்டிற்கும் சோழநாட்டிற்குமிடையே நடந்தேறிய இச் சண்டையில் திழன் தமிழனோடு சமாதானப்பட்டு வாழ்ந்த செய்தியினை ஈற்றில் நமக்குத் தெரிவித்து நம்மை மகிழ்விக்கிறது.

வழக்குரை நூலில் வருகின்ற அணிகலன்கள் பலவற்றின் பெயர்கள் கிழக்கோடு தொடர்புடையவை. கொப்புவாழி தண்டை காலாழி பீலி உட்கட்டு மேல்வாளி கொப்புவாளி காறை கைக்கட்டு போன்ற நகைகளை அணிகின்ற வழக்கம் இன்றும் நடைமுறையிலிருக்கின்றது.

நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டில் கண்ணகி வணக்கம் பற்றி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கண்ணகி வணக்கம் இலங்கையின் இரண்டு இனத்தாரிடையே (தமிழர் சிங்களவர்) வளர்க்கப்பட்டு வந்தது. கண்ணகை அம்மன் என்றும் பத்தினி தெய்யோ என்றும் வழங்கப்பட்டுவந்தது.

சிலம்புக்காதை பற்றியபாடல்களை


மட்டக்களப்பிலே கண்ணகி வழக்குரை என்றும் திருமலையிலே கோவலன் காதை என்றும் வவுனியாவிலே சிலம்பு கூறல் என்றும் பாடுவர்.

கிழக்கில் காலங்காலமாக வணங்கப்பட்டு வரும் காளி துர்க்கை மாரி பேச்சி முதலிய பெண் தெய்வ வழிபாடுகளில் இறுதியில் வந்து சேர்ந்த தெய்வம் கண்ணகி கண்ணகை என்றும் அழைக்கப்படுவதுண்டு.சித்திரை விழா தமிழக கேரளா எல்லையில் முடிந்து பின்னர்

வைகாசி பிறந்துவிட்டால் இலங்கை கிழக்கின் பட்டிதொட்டியெல்லாம் பறையொலி முழங்க குழல்நய ஓசையெழுப்ப வைகாசிப் பொங்கல் நடைபெறுவது வழமையாகிவிட்டது.


இலங்கை மன்னன் கயவாகு காலத்தில் அதாவது கி.பி.2 ஆம் நூற்றாண்டில் கண்ணகி வழிபாடு இலங்கைக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. இன்று கிழக்கில் 60 க்கு மேற்பட்ட கண்ணகை அம்மன் ஆலயங்கள் இருந்த போதிலும் முதல் ஆலயம் தமிழகத்தின் சேரநாட்டு மங்கலதேவி ஆலயமே  

கயவாகு வேந்தனும் இலங்கையில் முதலில் எங்கு கண்ணகிக்கு கோயில் எடுப்பித்தான் என்பதில் ஜயமிருக்கிறது.

அனுராதபுரத்தில் அல்லது யாழ்.கந்தரோடைக்கு அருகிலுள்ள அங்கணாமைக்கடவையில் கட்டப்பட்டது என்றே அறியலாம்.

கண்டி அரசன் இரண்டாம் இராசசிங்கன் காலத்தில் (1629-1637) பாடப்பெற்ற தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஊர்சுற்றுக் காவியத்தில் மட்டக்களப்புப் பிராந்தியத்தில் 30 கண்ணகை அம்மன் ஆலயங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.அவற்றில் அங்கணாமைக்கடவை (வெளியிலிருந்தும்) முதலூராகக் குறிப்படப்பட்டு;ள்ளது. எனவே அதுவே இலங்கையில் முதல் ஆலயமாகக் கொள்ளலாம்.


தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஊர்சுற்றுக் காவியத்தில் கூறப்படாத ஆறு ஊர்களின் பெயர்கள் பட்டிமேட்டுக் கண்ணகியம்மன் காவியத்திற் காணப்படுகின்றன.

பட்டி நகர் தம்பிலுவில் வீரமுனை காரைநகர் பவுசுபெறு கல்முனை கல்லாறெருவில் மகிளுர்,செட்டிபாளையம், புதுக்குடியிருப்பு,   செல்வமுறு ,மகிழடித்தீவு, முதலைக்குடா, அட்ட திக்கும் புகழும் வந்தாறுமூலை நகர், மட்டவிழ் பூங்குழல் மண்முனைக் கண்ணகையை மனதில் நினைக்க வினை மாறி ஓடிடுமே."   என ஊர்சுற்றுக்காவியம் கூறுகிறது.

நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டுக்குறிப்புகளின்படி பட்டிமேட்டுக் கண்ணகியம்மன் ஆலயம் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 19 ஆம் நூற்றாண்டின் முதற்கூற்றில் கட்டப்பட்டிருக்கலாம் .

கண்ணகி வணக்கம் முதலில் தனிப்பட்ட குடும்பங்களின் சொத்தாக பூசிக்கப்பட்டுவந்த போதிலும் கண்ணகையை வழிபடுவோர் தொகை அதிகமாக கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர்.அதற்கு அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களும் படையெடுக்கத்தொடங்கினர்.

உதாரணமாக செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலயத்தைக் குறிப்பிடலாம்.இவ்வாலயத்தில் கிரான்குளம் களுதாவளை குருக்கள்மடம் மாங்காடு அம்பிலாந்துறை பழுகாமம் தேத்தாத்தீவு ஆகிய ஏழு ஊர்களைச்சேர்ந்தவர்களுக்கு உரிமை இருந்தது.  என்பதே வரலாறு.          தமிழ்நாடு கேரளா எல்லையில் சேரநாட்டு தலைநகர் வஞ்சி இன்று மங்கல தேவி இந்த ஆண்டும் கண்ணகி கோட்டம் (கோவில்) சித்திரா பௌர்ணமி முழுநிலவு விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் தேனி மாவட்ட ஆட்சியர் தேக்கடியில் செய்தியாளர் சந்திப்பில் 

கண்ணகி கோவில் விழாவிற்கு நேரக் குறைப்பு செய்துள்ளதாக கண்ணகி அறக்கட்டளையினர் குற்றச்சாட்டு இருந்தது

 இந்த ஆண்டும் கண்ணகி  சித்ரா பௌர்ணமி முழு நிலவு விழாவை சுமுகமான முறையில் நடத்த அனைத்து துறைகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் தேக்கடியில் செய்தியாளரிடம் தெரிவித்தார். இரு மாநில எல்லையில் 

கண்ணகி கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கான நேரம் ஒரு மணி நேரம் குறைத்தது கண்ணகி பக்தர்களுக்கு மிகவும் ஏமாற்றமளிப்பதாக    கண்ணகி அறக்கட்டளையின் குற்றச்சாட்டை

முன் வைத்தனர்.  தமிழக-கேரள வன எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோட்டம் (கோயில்)

கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரம் அடி உயரம் கடந்த 1900 ஆண்டுகளுக்கு முன் சேர மன்னன் செங்குட்டுவன் கட்டியது.

ஆண்டுதோறும் சித்திரை மாதத்தின் பௌர்ணமி தினத்தன்று மங்கலதேவி கண்ணகி கோட்டம் -கோவிலில் அன்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தின் மக்கள் வழிபடலாம். சித்திரா பௌர்ணமி முழு நிலவு விழா நடத்தப்படுவது வழக்கம்

இரண்டு ஆண்டுகளாக தமிழகம் கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் கண்ணகி கோட்டம்- கோயில் விழாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது

தற்போது இரு மாநிலங்களிலும் நோய்த்தொற்று பரவல் குறைந்த காரணமாக இந்த ஆண்டு கண்ணகி கோட்டம் -கோவில் விழா நடத்த முடிவு செய்யப்பட்ட வகையில் இந்த ஆண்டு  ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி சித்திரா பௌர்ணமி தினம் வரும் சித்திரை முழு நிலவு விழாவை முன்னிட்டு, தேக்கடி பெரியார் புலிகள் வனக் காப்பக வளாகத்திற்குள் அமைந்துள்ள  ராஜீவ்காந்தி கலையரங்கில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.வி. முரளீதரன் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷீபா ஜார்ஜ்  ஆகியோர் தலைமையில் சித்திரா பௌர்ணமி முழு நிலவு விழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம நடந்தது

தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ்,  காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா கோட்டாட்சியர் கௌசல்யா, மேகமலை வன உயிரியல் காப்பக இணை இயக்குனர் ஆனந்த் மற்றும் இடுக்கி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கருப்புசாமி தேக்கடி  பெரியார் புலிகள் வன காப்பக இணை இயக்குநர் சுனில் பாபு ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடந்தது


இரு மாநில வனத்துறை, காவல்துறை, போக்குவரத்து துறை பொது மருத்துவம் மற்றும் சுகாதார துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக-கேரள கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகளும் பங்கேற்றனர்

கூட்ட முடிவிற்குப் பின்னர் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் செய்தியாளர்களிடம் கூறும்போது முந்தைய ஆண்டுகளை போல் இந்த ஆண்டும் கண்ணகி கோயில் விழாவை சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக தெரிவித்தார்.

கண்ணகி கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கான நேரம் மாலை 3 மணியிலிருந்து ஒரு மணி நேரம் குறைத்து 2 மணியோடு  முடிக்கப்பட்டுவதாக ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதெனவும் இது கண்ணகி பக்தர்களுக்கு மிகவும் ஏமாற்றமளிப்பதாகவும் கண்ணகி அறக்கட்டளையினர் குற்றச்சாட்டை. முன் வைத்தனர்

பக்தர்களின் பாதுகாப்புக் கருதியும் வனவிலங்குகள் உள்ளிட்டவைகளின் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காகவும் நேரக் குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் குமுளி பகுதியிலிருந்து  கண்ணகி கோட்டம்- கோவிலுக்குச் செல்லும் பாதையில் ஏற்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும், குடிநீர், கழிப்பிடம், சுகாதார வசதிகள் ஏற்படுத்தித் தருவது குறித்தும் வலியுறுத்தப்பட்டது. மேலும், பக்தர்களை ஏற்றிச்செல்வதற்கு வாடகை ஜீப், கார்களை அனுப்பவும், அவற்றுக்கு வாடகை நிர்ணயிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.                          “கைவினை முற்றிய தெய்வப் படிமத்து

வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து

முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப்

பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி

வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்துக்

கடவுண் மங்கலம் செய்கென ஏவினன்"...... சிலப் 28: 288-33....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...