35 ஆண்டுகளாக சென்ற காரைக்குடி -திருமயம் நகரப் பேருந்து திடீரென்று நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதி
மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு போக்குவரத்து கழக அலுவலகம் மூலம் பேருந்துகளின் இயக்கங்கள் பொது மேலாளர் தலைமையில் கண்காணிக்கப்படுகின்றன.
காரைக்குடியிலிருந்து பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள்; கோட்டையூர், பள்ளத்தூர், கானாடுகாத்தான், நேமத்தான்பட்டி, சவேரியார்புரம், ஊனையூர்,பாரத மிகு மின் நிறுவனம்; குளத்துப்பட்டி விளக்கு; வழியாக திருமயம் பேருந்து நிலையம் வரை சென்ற அரசு நகரப் பேருந்து தடம் எண் 8 A
நல்ல வருமானம் ஈட்டித் தந்த நிலையில் இந்தப் பேருந்து கடந்த 60 நாள்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டு மாற்றுப் பேருந்தாக பல ஊர்களுக்கு தவணை முறையில் இயக்கப்படுகிறது .
35 ஆண்டுகளாக இயங்கிய 8 A நகரப் பேருந்து நிறுத்தப்பட்டிருப்பது அப்பகுதியில் இருக்கக்கூடிய பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் தினந்தோறும் வேலைக்குச் சென்று வரக்கூடிய இதர கூலி பணியாளர்கள் போன்ற குறைந்த வருவாய் ஈட்ட கூடியவர்கள் வெகுவாகவே பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர், உடனடியாக கவனம் செலுத்த ,நிறுத்தப்பட்ட 8 A., நகரப் பேருந்து மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுத்து உத்தரவு கேட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் பேருந்து மீண்டும் இயக்கப்படுமா எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கருத்துகள்