'பப்ளிக் ஜஸ்டிஸ்':இதழ் வாசகர்கள் இணையத்தில் வாசிப்பாளர்கள் வெளியீட்டுக் குழுமத்தினர் மற்றும் சிறப்புச் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் விளம்பரதாரர்கள், மற்றும் தகவல் தரும் அன்பர்கள் உள்ளிட்ட அணைவருக்கும் தமிழ் புது வருடம் சுபகிருது வாழ்த்துக்கள்;-
கால அட்டவணை முறையில் அறுபதாண்டு வட்டம் கொண்டது. அது பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் நிறைவுற மீண்டும் அடுத்த பிரபவ ஆண்டு சுழற்சியாகிறது. சிலர் இவ்வாறு ஒரே வருடத்தின் பெயர்கள் திரும்பத் திரும்ப வருவதால் பிற்காலத்தில் பழைய நிகழ்வுகளைச் சரியாக நிர்ணயிப்பதில் குழப்பமேற்படுகிறதென்றும் கூறுகிறார்கள். ஆனால் இந்த ஆண்டுகளின் கால அளவைகள் வானியல் விஞ்ஞானத்தை ஆதாரமாகக் கொண்டு கச்சிதமாகக் கணித்து வரையறுக்கப்பட்டவை.
ஒவ்வொரு தமிழ் வருடமும் சூரியன் பனிரெண்டு ராசிகளில் சஞ்சரிக்கும் கால அளவேயாகும். சூரியன் முதல் இராசியான மேஷ இராசியில் பிரவேசிப்பதே புது வருடப்பிறப்பாகும். இவ்வாறு ஒவ்வொரு பனிரெண்டு இராசிகளிலும் ஒன்றன் பின் ஒன்றாக சூரியன் பிரவேசிக்கும் காலம் பன்னிரு தமிழ் மாதப்பிறப்பு அல்லது மாதத்தின் முதல் நாளாகும். இவ்வாறு சூரியன் மேஷம் முதல் மீனம் வரையுள்ள இராசிகளில் சஞ்சரிக்கும் காலம் ஒரு தமிழ் வருடமாகும். இது வானியல் விஞ்ஞான ரீதியாக 365 நாள் 6 மணித்தியாலம் 11 நிமிடம் 48 விநாடி எனக் கச்சிதமாகக் கணிக்கப்பட்ட ஒன்று. இதையே பஞ்சாங்க கணக்கில் 365 நாள் 15 நாழிகை 31 விநாடி 15 நொடி என்று கூறுவார்கள். இதையே வானியல் விஞ்ஞானத்தில் வானியல் வருடம் (Astronomical Year) என்று சொல்லுவார்கள். அதற்கான நடைமுறையில் பஞ்சாங்கம் படித்தல் நடக்கிறது அதை வைத்துத் தான் ஜாதகத்தில் கணிப்பு எனும் கணிதம்.
நாம் முன்னோர் தமிழ் வருடம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பெயர்களும் வைத்துள்ள நிலையில். இது முயல், வேதாளம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி, எலி, காளை, புலி என்ற பன்னிரண்டு வருடங்களைக் கொண்ட சீனர்களின் கால வட்டத்தைப் போன்றது. ஆனால் அதைவிட ஆழமான வானியல் விஞ்ஞான கணிப்பீடுகளை ஆதாரமாகவும், அடிப்படையாகவும் கொண்ட அறுபது வருடங்களைக்கொண்ட காலவட்டத்தின் வருடங்கள் தமிழ் வருடங்கள் என்றும் இந்த வருடங்களின் தொடக்கம் தமிழ் வருடப்பிறப்பு என்றும் வழங்கும் வழமையே நம் மரபு பிரபவ முதல் அட்சய வரை உள்ளனவாம்.
வருடங்களின் கணிப்பிலுள்ள சில பிழைகள்:-நடப்பில் உள்ள ஆங்கில வருடம் 365 நாட்களை மட்டுமே கொண்டது. அது டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குப் பின் தொடங்கி அடுத்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நள்ளிரவு பன்னிரண்டு மணியுடன் முடிகின்றது. இதற்கு எந்தவிதமான வானியல் விஞ்ஞான ஆதாரமோ அடிப்படையோ இல்லை.
365 நாட்களைக்கொண்ட இந்த ஆங்கில வருடக்கணக்கின்படி, வானியல் விஞ்ஞானரீதியாக உள்ள 365 நாட்கள் 6 மணித்தியாலங்கள் 43 விநாடிகள் கொண்ட வானியல் வருடத்தில் ஒவ்வொரு ஆண்டும் மேலதிகமாக 6 மணித்தியாலங்கள் மிகுதியாகும். இந்த ஆறு மணித்தியாலங்களை நான்கு ஆண்டுகளுக்குச் சேரவிட்டு நான்காம் ஆண்டில் ஒரு முழு நாளாகின்றது. இதை பிப்ரவரி மாதத்தில் ஒரு மேலதிக நாளாக இணைத்து விடுவார்கள். சாதாரணமாக 28 நாட்களை மட்டுமே கொண்ட பிப்ரவரி மாதம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 29 நாட்களைக் கொண்டிருக்கும். இதுவே லீப் வருடம்.
இப்படியாக 365 நாட்கள் 6 மணித்தியாலங்கள் சரி செய்யப்பட்டாலும் இன்னமும் 11 நிமிடங்கள் 48 வினாடிகள் மிகுதியாகிறதே அவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு நூற்றாண்டுக்கு ஒரு நாளைக்கூடுதலாகச் சேர்த்து சரிசெய்வார்கள். இப்படி சரிசெய்யும்பொது கொஞ்சம் அதிகமாக ஆகிவிடுகின்றது. இதற்காக நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளை நழுவவிட்டு விடுவார்கள். இவ்வாறு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு நாளையும் ஒவ்வொரு நூற்றாண்டுக்கு ஒரு நாளையும் கூட்டி நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளைக் கழிப்பதனால் தான் நமது தமிழ் மாதப்பிறப்புடன் கூடிய தைப்பொங்கல் சித்திரை வருடப்பிறப்பு என்பன 13, 14, 15, 16 ம் ஆங்கிலத் தேதிகளில் மாறி மாறி வருகின்றன. இது நமது குற்றமல்ல; நாம் பாவிக்கும் நம்மை ஆட்சி செய்த ஆங்கில நடைமுறை வழமையில் உள்ள ஆங்கிலக் கலண்டர் வழி குற்றம்.
தமிழ் வருடங்களில் இந்த வம்பு தும்பெல்லாம் கிடையாது. சரியாக 365 நாள் 6 மணித்தியாலம் 11 நிமிடம் 48 வினாடி தான் கணக்கு. ஒவ்வொரு தமிழ் வருடமும் அதற்கு முந்திய வருடம் எந்த வாரத்தில் பிறந்ததோ அதற்கடுத்த வாரத்திலும், எந்த தேதியில் பிறந்ததோ அதற்கு பன்னிரண்டாவது தேயிலும், எந்த நட்சத்திரத்தில் பிறந்ததோ அதற்கு பதினோராவது நட்சத்திரத்திலும், எந்த நேரத்தில் பிறந்ததோ அதற்கு 6 மணித்தியாலம் 11 நிமிடம் 48 விநாடி (15 நாழிகை 31 விநாடி 15 நொடி) பின்னராகவும் பிறக்கின்றது. உலக அளவில் சுமேரிய மக்களும் 60 வருடங்கள் கொண்ட முறையில் 12 மாதங்களையும் பயன்படுத்தியுள்ளனர்.அவர்களின் மாதங்களில் வாரங்களே கிடையாது. ஒரு நாளுக்கு 12 மணிநேரம் என்ற கணக்கும் அவர்களிடமிருந்தது.
அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த மாயன் நாகரிக மக்கள் ஒரே நேரத்தில்இரண்டு காலண்டர்களைக் கையாண்டுள்ளனர். புனிதமான சடங்குகளுக்காக 260 நாட்கள் கொண்ட ஒரு புனித நாட்காட்டியும் மற்ற விஷயங்களுக்காக 365 நாட்கள் கொண்ட ஒரு நாட்காட்டியும் வைத்துள்ளனர்.
அதில் 20 நாட்கள் கொண்ட 18 மாதங்களிருந்துள்ளன. மாயன் மக்களின் வாழ்வில் இந்த இரண்டு நாட்காட்டிகளும் ஒன்றின் மீது இன்னொன்று தொற்றிக்கொண்டு பயணம் செய்தன. (நம்ம ஊர் தமிழ் வழி பஞ்சாங்கத்தையும் ஆங்கில வழி காலண்டரையும் போல) அவையும் 60 ஆண்டுகள் சுழற்சி முறையைப் பயன்படுத்தியுள்ளன எனலாம்
சீன தேசத்திலும் இந்த 60 வருட சுழற்சி முறை இன்னமும் நடைமுறை புழக்கத்திலுள்ளது. நமது நாட்டில்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே, சூரியனை அடிப்படையாகக்கொண்ட 360 நாட்களும் 12 மாதங்களோடு ஒரு நாட்காட்டியும் கிருஷ்ணர் பிறப்பு மையமாக வைத்து ஒரு நாட்காட்டி எனவும் இருந்துள்ளதாக அறியலாம். ஆங்கில வருடம் 2015 என்பது கிருஷ்ண வருடம் 5117 ஆகும்.
தமிழ மரபினர் காலத்தைப் பெரும்பொழுது, சிறுபொழுது என இரண்டாகப்பிரித்தனர்.
ஒரு வருடத்தை இளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி), கார்(ஆவணி, புரட்டாதி) கூதிர் அல்லது குளிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, )பின்பனி ( மாசி, பங்குனி) என்று ஆறாகப் பிரிப்பது தான் பெரும் பொழுது.
ஒரு தினத்தை வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று ஆறாகப் பிரிப்பதுதான் சிறுபொழுது. அதுவே அணைத்து ஆலயங்களில் ஆறுகால பூஜை
ஒரு தினம் 60 நாழிகை கொண்டதாக கணக்கிட்டு ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள். இன்றைய 24 மணிநேரம் கொண்ட ஒருநாள் இந்தக் கணக்குக்கு மிகச் சரியாகப் பொருந்தும்.
தமிழில் நாட்களுக்கு ஞாயிறு என்றால் சூரியனின் பெயருடன் கிரகங்களின் பெயரும் வைக்கப்பட்டுள்ளன.
நட்சத்திரங்களை முன்வைத்தும் பூமியின் சுழற்சியை அடிப்படையாக வைத்தும் உருவாக்கப்பட்டதாகத் தமிழ் காலண்டர் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று புத்தாண்டு தொடங்குவது என்பது தமிழில் அல்லது தமிழகத்ல் மட்டுமல்ல. அஸ்ஸாம், வங்காளம், கேரளம் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ஏப்ரல் 14 ஆம் தேதி தான் புத்தாண்டு.
இந்தியாவுக்கு வெளியிலும் பர்மா,கம்போடியா, லாவோஸ், நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்தத் தேதி தான் புத்தாண்டு.
பழமையான வான சாஸ்திரமான சூரிய சித்தாந்தமெனும் சமஸ்கிருத நூலில் நட்சத்திரங்களின் சுற்றுப்பாதையின் காலமாக 60 வருடங்கள் கணிக்கப்பட்டுள்ளதில்தான் இன்று நாம் கடைப்பிடிக்கும் தமிழ் வருடங்களின் பெயர்ப் பட்டியல் முதலில் காணப்பட்டுள்ளது.60 வருடங்கள் முடிந்த பிறகு மீண்டும் முதல் ஆண்டிலிருந்து மறுபடி தொடங்கினாலும் இந்த ‘ஒரு 60 வருட சுற்று’ என்பது தற்போதைய ‘ஒரு நூறாண்டு’ எனும் சுற்றுக்கு சமமானது.
‘60 ஆண்டுகள் கணிப்பு’ என்பதை பூமியோடு தொடர்புடையதாக மற்ற கிரகங்கள் வானத்தில் இருக்கிற நிலையோடு தொடர்புபடுத்தி நமது முன்னோர்கள் கணித்துள்ளனர். சூரியனை ஒரு முறை சுற்றுவதற்கு 30 வருடங்களை எடுத்துக் கொள்கிற சனிக் கிரகமும் 12 வருடங்களை எடுத்துக்கொள்கிற வியாழன் கிரகமும் 60 வருடங்களுக்கு ஒரு முறை குறிப்பிட்ட ஒரே நிலைக்கு வருவதை இந்த 60 ஆண்டுகள் சுழற்சி முறை குறிக்கிறது.
‘60 ஆண்டுகள் கணிப்பு’ என்பதை பூமியோடு தொடர்புடையதாக மற்ற கிரகங்கள் வானத்தில் இருக்கிற நிலையோடு தொடர்புபடுத்தி நமது முன்னோர்கள் கணித்துள்ளனர்.
பழைமையான ‘60 ஆண்டுகள் சுழற்சி முறை’ காலப்போக்கில் மாறிவிட்டது. புத்தர் பிறந்த நாளிலிருந்து புத்த மதத்தவரும், மகாவீரரை வைத்து சைன மத சமணர்களும் தொடர் ஆண்டு முறையைப் பின்பற்றுகிறார்கள். மலையாளிகள், வங்காளிகள், உள்ளிட்டோரும் தொடர் ஆண்டு முறைக்கு மாறியுள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே தமிழகத்திலும் தொடர் ஆண்டு தேவை எனும் கோரிக்கையும் எழுந்தது.
இதுவே தற்போதைய வரிசை முறையில் 36 ஆன சுபகிருது வருடம்.சுபகிருது தமிழ் புத்தாண்டில் பஞ்சாங்கக் கணிப்பின் படி . சுபிட்சங்கள் நிறைந்தாண்டாக அமைந்துள்ளது. சுபகிருது என்றாலே நற்செய்கை என்ப் பொருளாகிறது. கிரகங்களின் பயணத்தால் இந்த ஆண்டு
மங்களகரமான சுபகிருது தமிழ் புதுவருடம் சித்திரை மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை சிம்ம ராசியில், ரிஷப லக்னத்தில் பிறக்கிறது. மேஷ ராசியில் சூரிய பகவான் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் போது மங்களகரமான சுபகிருது வருடம் பிறக்கிறது.ஆண்டு பிறக்கும் போது கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் மேஷ ராசியில் சூரியன், ராகு, புதன், சிம்ம ராசி பூரம் நட்சத்திரத்தில் சந்திரன், துலாம் ராசியில் கேது, மகர ராசியில் சனிபகவான், கும்ப ராசியில் செவ்வாய் சுக்கிரன், மீன ராசியில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.லக்னாதிபதி சுக்கிரன் செவ்வாயுடன் சேர்ந்து பத்தாம் இடம் இருந்து சந்திரன் பார்வை பெறுவதால் இந்த ஆண்டு அனைத்து துறைகளிலும் விருத்தியாகும். இரண்டாம் இடத்திற்கு உரிய புதன் 12 ஆம் இடம் சூரியன் ராகுவுடன் சேர்ந்து கேது பார்வை பெறுவதால் நன்மை உண்டாகும்.
கருத்துகள்