டில்லி காவல்துறையில் தலைமைக் காவலர் அமைச்சுப்பணி)க்கான தேர்வு 2022 அறிவிப்பு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்
தில்லி காவல்துறையில் தலைமைக் காவலர் (அமைச்சுப்பணி) க்கான தேர்வு குறித்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான எஸ்எஸ்சி கடந்த 17.05.2022 அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்படவுள்ள போட்டித் தேர்வுக்கு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தகுதியுடைய நபர்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு கடைசி தேதி 16.06.2022 (இரவு 11.00 மணி) தேர்வுக் கட்டணத்தை செலுத்துவதற்கு கடைசி தேதி 17.06.2022 (இரவு 11.00 மணி)
இதற்கான தேர்வுகள் கணிணி அடிப்படையில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும். தென்பிராந்தியத்தில் ஆந்திர மாநிலத்தில் 10 மையங்கள், தெலங்கானாவில் 3 மையங்கள், தமிழகத்தில் 3 மையங்கள் என 20 இடங்களில் நடைபெறும்.
விண்ணப்பதாரர்களின் நலன் கருதி இந்த அறிவிப்பு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தென்மண்டல துணைஇயக்குநர் T.A.கந்தன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள்