சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் ரூ.72.4 லட்சம் மதிப்புள்ள 1.6 கிலோகிராம் தங்கக் கட்டி, மற்றும் நகைகளைக் கைப்பற்றினர்
சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் ரூ.72.4 லட்சம் மதிப்புள்ள 1.6 கிலோகிராம் தங்கக் கட்டி, தங்கச் சங்கிலி, தங்க நகைகள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்
கொழும்பிலிருந்து சென்னை வந்த மூன்று பயணிகளிடம் மேற்கொண்ட விசாரணையின்போது அவர்கள் தங்கக் கட்டி (24 காரட்) தங்கச் சங்கிலி (22 காரட் ), தங்க நகைகள் ( 24 காரட்) ஆகியவற்றைத் தங்களின் உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றின் மொத்த எடை 1.6 கிலோகிராம், மொத்த மதிப்பு ரூ.72.4 லட்சம். இது தொடர்பாக புளோரிடா பத்மஜோதி, நோனா பரினா ஆகிய இலங்கைப் பயணிகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள்