இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ்குமார் நியமனம்
மிக மூத்த தேர்தல் ஆணையரான ராஜீவ்குமாரை இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். திரு ராஜீவ்குமார் 2022 மே 15 அன்று தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்று கொள்வார். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக உள்ள திரு சுசில் சந்திரா இதே நாளில் பணியில் இருந்து ஓய்வு பெறுவார்.
சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்டத்துறை செய்திக்குறிப்பில் தெரிவித்த தகவல்..
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக உள்ள சுஷில் சந்திராவின் பதவிக்காலம் மே மாதம் 14 ஆம் தேதியுடன் முடிவடைகிற நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் மே மாதம் 15 ஆம் தேதி முதல் இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றுவார்
1984 ஆம் ஆண்டு ஜார்க்காண்ட் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக ராஜீவ் குமார் பணியைதா தொடங்கினார். பின்னர் அவர் பல்வேறு முக்கியமான பணிகளிலிருந்தார். 2019 ஆம் ஆண்டு மத்திய நிதித்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவருடைய பதவிக்காலத்தில் 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டன. அதன்பின்னர் இவர் மத்திய மனிதவள பிரிவிலும் பணியாற்றியவர். 2020ஆம் ஆண்டு தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவாசா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த பின்னர் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அது முதல் இவர் தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்தார். தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள்