முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தில்லை கூத்தர் ஆலயத்தில் ஊழல் கூத்துக்கள் தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை நோட்டீஸ்

கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர்(சபாநாயகர்) கோவில்


அந்தணர்களான பொது தீட்சிதர்களுக்கு,      தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறை யின் துணை ஆணையரும், விசாரணைக்குழு ஒருங்கிணைப்பாளருமான ஜோதி அனுப்பிய நோட்டீஸ் விபரம் -:   ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959 ஆம் ஆண்டில் உள்ள சட்டப்பிரிவு 23 மற்றும் 33 ன் படி ஆணையருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தில் ஒரு குழுவினை அமைத்து அதன் ஒருங்கிணைப்பாளராக என்னை நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவிலை குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வுக்காக ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான வரவு செலவு கணக்குகள், தணிக்கை அறிக்கைகள், 2014 ஆம் ஆண்டு முதல் நாளது தேதி வரை திருப்பணிகள் குறித்த விவரங்கள், தொல்லியல் துறை கருத்துரு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி பெற்ற மற்றும் பெறாத விவரம், மதிப்பீட்டு விவரங்கள், திருக்கோவிலுக்குச் சொந்தமான கட்டளைகள், சொந்தமான சொத்துக்கள், அவற்றிலிருந்து பெறப்படும் வருவாய், மேற்கண்ட சொத்துக்களின் தற்போதைய நிலை.ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டவிதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட சொத்துக்கள் பதிவேடு, மரப்பதிவேடு, திட்டப்பதிவேடு மற்றும் காணிக்கைப் பதிவேடுகள், திருக்கோயிலுக்குச் சொந்தமான நகைகள் மற்றும் விலையுயர்ந்தவைகள் மதிப்பீட்டறிக்கை, படிவம் 27 மற்றும் 28 மற்றும் 29 ,கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் அதன் குத்தகைதாரர்கள் விவரம், கேட்பு வசூல் நிலுவை பதிவேடுகள் ஆகிய ஆவணங்களை தயாராக வைத்திருந்து, குழுவின் ஆய்வுக்கு நடராஜர் (சபாநாயகர்) ஆலயத்தில் பொதுதீட்சிதர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது".

என நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.  சோழர் காலம் முதல் முதன்மையும் சிறப்பும் பெற்ற கோவில் சிதம்பரம் நடராசர் எனும் சபாநாயகர் ஆலயம்.

மன்னர் காலத்தில் மான்யமாகச் சிதம்பரம் கோயிலுக்கு 200 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் உண்டு. தற்போது குத்தகைதாரர் வசம் உள்ளன. குத்தகையை  பொது தீட்சிதர்கள் பெறுகிறார்கள். ஒவ்வொரு தீட்சிதருக்கும் பக்தர்களில் தனி வாடிக்கையாளர் உண்டு; தட்சணையும் உண்டு. தினசரி பூசைக்கும் மற்ற திருவிழாக்களுக்கும் வேண்டிய பொருள்களனைத்தும் கட்டளைதாரர்கள் கொடுத்து விடுகின்றனர். 1923 ஆம் ஆண்டில் ஹிந்து சமய அறநிலையச் சட்டம் நிறைவேறி ஆலயங்களில் முறையான நிருவாக அமைப்பு உருவாகி ஊழல்களின் ஓரளவு குறைந்ததாக கூறினாலும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஊழல் அளவிடமுடியாத அளவில் நடக்கிறது என்பதே உண்மை.

தமிழகத்தின் ஏ கிரேடு பெரிய ஆலயங்களான திருச்செந்தூர் முருகன் கோவில் முதல் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வரை அனைத்தும் அறநிலையத்துறையின் கட்டுக்குள் வந்தது.ஆனால்  சிதம்பரம் சபாபதி கோவில், பொன்னம்பலம் என்று போற்றப் பெறும் நடராசர் கோவில்  ஒரு சிக்கலின் இருப்பிடமாய் சீர்கேட்டின் நிகழ்விடமாய், முடிவு காணமுடியாததாகவே  விளங்கி வருகிறது.

கோவிலில் புரோகிதர்களான பூசாரிகளான, அந்தண தீட்சிதர்கள் மன்னர்களால் திருப்பணி நடத்தப்பட்ட சிதம்பரம் நடராசர் கோவில் எங்களுக்குச் சொந்தம், எவரும் எங்களை எதுவும் கேட்கமுடியாது, எங்கள் கோயில், இது எங்கள் பிரைவேட் லிமிடெட் கம்பெனி என உரிமை கொண்டாடி உச்சநீதி மன்றம் வரை சென்ற காரணமாக நியாய, தர்மங்களுக்குப் புறனாய் விளங்கிற்று.  சென்னை மாநிலத்தில் நீதிக் கட்சியின் ஆட்சி நடந்த பிடரிட்டிஸ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி காலதில் ஹிந்து சமயக்கோவில்கள், அறக்-கட்டளைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் 1923 ஆம் ஆண்டு ஹிந்து சமய அறக்கட்டளைச் சட்டம் வந்தது.

 சிதம்பரம் கோயில் தீட்சதர்கள் சென்னை மாநில ஆங்கிலேய ஆளுநரிடம் ஒரு முறையீட்டு மனுவை கொடுத்து 1923 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட ஹிந்து சமய அறக்கட்டளைகள் சட்டத்-திலிருந்து சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு விலக்கு அளிக்கும் படி கேட்டதீட்சிதர்களின் முறையீட்டு மனு-வைப் பரிசீலித்து ஆளுநர், சட்டத்தின் சில பிரிவுகள் சிதம்பரம் கோவிலையும் கட்டுப்படுத்தும் எனவும், அப்பிரிவுகள் தவிர மற்றபடி சட்டம் சிதம்பரம் கோயிலுக்கு நடைமுறையில் வராது என்ற ஆணையினை 1926 ஆம் ஆண்டில் பிறப்பித்தார். என்னென்ன பிரிவுகள் அச்சட்டத்தின் படி சிதம்பரம் சபாநாயகர் கோவிலைக் கட்டுப்-படுத்துமெனப் பார்த்தால்.

சிதம்பரம் கோயில் பரம்பரை அறங்காவலர்கள் விவகாரம்.

வரவு செலவு கணக்கு, அவற்றை அரசுக்கு அளித்தல்

கோவில் நிருவாகத்தை நடத்துவதற்குத் திட்டம் அதாவது ஸ்கீம் வரைதல்.

கோவில் நிதி தொடர்பானவை. இவற்றிற்கு 1923 ஆம் ஆண்டு ஹிந்து சமய அறநிலையக் கட்டளைச் சட்டப்படி சிதம்பரம் நடராசர் என்ற சபாநாயகர் கோவில் தீட்சிதர்களுக்கு விலக்குக் கிடையாது. என்பதாகும்.

இதற்கிடையில் சிதம்பரம் கோவில் நிர்வாகம் சரியாக நடைபெறவில்லையென பக்தர்கள் 1931 ஆம் ஆண்டு ஹிந்து சமய அறநிலையத் துறை வாரியத்திற்கு (Hindu Religious Endowment Board) விதிமுறைகள் படி  (Hindu Religious and Charitable Endowment Commission) ஒரு திட்டம் ஸ்கீம் வகுக்கும் படி கேட்டுக் கொண்டார்கள். அவ்வாறான பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அறநிலைய வாரியம் ஒரு திட்டம் ஸ்கீம் வகுத்த திட்டத்தில் சில குறைகள் இருப்பதால் கைவிடப்பட்டது.

இரண்டு ஆண்டுகள் கழித்து, 1933 ஆம் ஆண்டு அறநிலைய வாரியம் தனக்குள்ள சட்ட அதிகாரத்தின் அடிப்படையில் தானே ஒரு திட்டத்தை ஸ்கீம் வகுத்தஎத (South Arcot District Civil Court) மூலம் தீட்சிதர்கள் வழக்கு ஒன்றைத் தொடுத்தனர். அதில் 13.3.1937 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி அறநிலையத் துறைக்குக் கோவில் நிருவாகத்தை ஒட்டித் திட்டம் வகுக்க உரிமை உண்டு எனவும், அதே சமயம் அறநிலையத் துறையின் திட்டத்தில் சில மாறுதல்களைச் செய்தது. திட்டத்தில் செய்யப்பட்ட மாறுதல்களைப் பொருத்துக் கொள்ளாத தீட்சதர்கள் அநீதி இழைக்கப்பட்டதாகச் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடும் செய்தனர்.

சிதம்பரம் நடராசர் கோவில் பொதுக் கோவில் அல்ல. அது தனியார் கோயில். அறநிலையத் துறையின் சட்டம் எங்களைக் கட்டுப்படுத்தாது. அப்படியே கோவில் நிருவாகத்திற்காகத் திட்டம் வகுக்க வேண்டுமென்றாலும் நிருவாகத்தில் எந்தக் குறையும் சொல்லப் படாத நிலையில் திட்டம் வகுக்க வேண்டிய தேவையில்லை. என தீட்சிதர்கள் வைத்த வாதம். மேல்முறையீடு வழக்கு எண். 306/1936, நீதியரசர்கள் வெங்கட-ரமணராவ், நீதியரசர் நியூசம் ஆகிய இருவராலும் மூன்று ஆண்டுகளுக்குப் பின் 3.4.1939 ல் தீர்ப்பு வழங்கப்பட்டது‌  தீர்ப்பில் சிதம்பரம் கோவில் பொதுக் கோயில்தான், தனியார் கோவில் அல்ல என்பதை உறுதி செயது1890 ஆம் ஆண்டு நடந்த ஒரு வழக்கிலேயே நீதிபதி முத்துச்சாமி அய்யரும், மற்றொரு ஆங்கிலேய நீதிபதி ஜே.ஜே.ஷெப்பர்டும் சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் என்ற பூசாரிகள் சொந்தச் சொத்து அல்ல, பொதுச்சொத்து தான் மன்னர் திருப்பணிகள் செய்தது என்று தீர்ப்பு வழங்கியதையும் தங்கள் தீர்ப்பில் சுட்டிக் காட்டியதும்,


கோவிலின் நிருவாகத்தில் குளறுபடி இல்லை என்ற போதிலும் கோவிலின் முறையான நிருவாகத்திற்காகத் திட்டம் வகுக்கலாம் என்றார்கள். என்ற போதிலும் அறநிலையத் துறை வகுத்த திட்டத்தில் மாவட்ட நீதிமன்றம் செய்த மாறுதல்களோடு உயர்நீதி மன்றமும் சில மாறுதல்களைச் செய்த நிலையில் தீட்சிதர்களின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கு நிலுவையில் இருந்த காலத்தில் நிர்வாகத்தை அரசு எடுக்க முயன்றது. ஏற்கெனவே திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறையிலிருக்கையில் அரசு நிருவாகத்தை எடுத்துக் கொள்ளும் அறிவிப்பு விரும்பத்தக்கதல்ல எனக் கருதிய நீதிமன்றம் 

கோவில் நிர்வாகம் செய்யும் அறங்காவலர்களை அவர்கள் வகிக்கும் பொறுப்புகளிலிருந்து நீக்கும் அளவுக்கு மிகக் கடுமையான, முறையற்ற நிருவாகம் இருந்தால் ஒழிய நிர்வாகத்தை அரசே எடுத்துக் கொள்ளும் நடைமுறை சர்வசாதாரணமாக இருக்கக் கூடாது என்பது தான் நீதிமன்றத்தின் கருத்து. மோசமாக நிருவாகம் இருந்தால் அரசு கோவிலின் நிருவாகத்தை எடுத்துக் கொள்ள முடியும். (1939 (2) விதியின் படி) கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களுக்கு, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையரும், விசாரணைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதி தற்போது அனுப்பியுள்ள நோட்டீஸ்:ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959ல் உள்ள சட்டப்பிரிவு 23 மற்றும் 33ன் கீழ் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, ஒரு குழுவினை அமைத்து அதன் ஒருங்கிணைப்பாளராக என்னை நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவிலை குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வுக்காக ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.2014 முதல் தற்போது வரையிலான வரவு செலவு கணக்குகள், தணிக்கை அறிக்கைகள்,2014 முதல் நாளது திருப்பணிகள் குறித்த விவரங்கள், தொல்லியல் துறை கருத்துரு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி விவரம், மதிப்பீடு விவரங்கள், திருக்கோவிலுக்குச் சொந்தமான கட்டளைகள், சொந்தமான சொத்துக்கள், அவற்றிலிருந்து பெறப்படும் வருவாய், மேற்கண்ட சொத்துக்களின் தற்போதைய நிலை.ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டவிதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட சொத்து பதிவேடு, மரப்பதிவேடு, திட்டப்பதிவேடு மற்றும் காணிக்கை பதிவேடுகள், திருக்கோயிலுக்குச் சொந்தமான நகைகள் மற்றும் விலையுயர்ந்தவைகள் மதிப்பீட்டறிக்கை, கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் அதன் குத்தகைதாரர்கள் விவரம், கேட்பு வசூல் நிலுவை பதிவேடுகள் ஆகிய ஆவணங்களை தயாராக வைத்திருந்து, குழுவின் ஆய்வுக்கு நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நகைகள், வரவு, செலவு கணக்குகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை இந்து அறநிலையத்துறை ஒருங்கிணைப்பு குழுவினர் ஜூன் மாதம் 7 மற்றும் 8- ஆம் தேதிகளில் ஆய்வு நடத்த உள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிற்றம்பல மேடையில் ( கனகசபையில்) ஏறி சுவாமி தரிசனம் செய்ய கோயில் பொதுதீட்சிதர்கள் தடை விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் ( கனகசபையில்) ஏறி சுவாமி தரிசனம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை தொடர்ந்து காவல்துறை பாதுகாப்புடன் பக்தர்கள் சிற்றம்பல மேடையில் ஏறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.அதில், நடராஜர் (சபாநாயகர்) கோவில்  நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் குறித்தும், கோயில் சட்டவிதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்தும், கோயிலை நேரடியாக ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு கோயில் நிர்வாகத்தை சீரமைப்பது குறித்து உரிய பரிந்துரைகள் வழங்கிட இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959, சட்டப் பிரிவு 23 மற்றும் 33-ன் கீழ் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி ஒரு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் கடலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள துணை ஆணையர் ஜோதி என்பவர் சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.தாராகசுரனை அழிக்க உக்கிரக்காளியாக மாறி பிரம்ம சாமுண்டிஸ்வரி வதைத்தார். அப்போது பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாதரும் இறைவனின் திருநடனத்தை வேண்ட அவரும் ஆடினார். அப்போது தில்லையில் இருந்த காளி தன்னுடன் போட்டி போட்டு ஆட இறைவனை அழைத்தார். நடனப்போட்டியில் இறைவன் காலை தலைக்கு மேல் தூக்கி ஊர்த்தவ தாண்டவம் ஆட , காளி பெண் என்பதால் நாணி தோற்றார். கோபத்துடன் உக்கிரகாளியாக தில்லையின் எல்லையில் அமர்ந்தார். விஷ்ணுவும் பிரம்மனும் தேவர்களும் முனிவர்களும் காளியை சமாதானப்படுத்தி இறைவனுடம் இணையுமாறு வேண்டினர். மனமகிழ்ந்த காளி , சிவாகாமி அம்மையாக இறைவனை அடைந்தார். இது ஆலய ஸ்தல வரலாறு மேலும் இவ்வாலயத்தில் திருப்பணி செய்த  சோழமன்னர் முதலாம் ஆதித்த சோழன் மகன் பராந்தகத் தேவரும் பொது ஆண்டு 871 முதல் 907 வரை ஆண்ட காலத்தில் சிதம்பரம் கோவில் விமானத்தில் பொன்னால் கூரை வேய்ந்தனர் . என திருத்தொண்ட நாயனார் திருவந்தாதி நூலில் நம்பியாண்டார்நம்பி 11 ஆம் நூற்றாண்டில் எழுதியுள்ளார். இந்த பொற்கூரை 21600 தங்கத்தகடுகளால் வேயப்பட்டு 72000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 72000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளையும், ஒருநாளைக்கு மனிதன் சராசரியாக 21600 முறை சுவாசிக்கின்றான் என்பதையும் குறிக்கும்.

இக் கோவிலைச் சோழப் பேரரசர்கள் கட்டியதாக வித்வான் கே. வெள்ளைவாரணன் எழுதிய தில்லைப் பெருங்கோயில் வரலாறு நூல் கூறுகிறது. சிற்றம்பலத்தை சோழர்கள் கட்டி குல தெய்வமாக வழிபட்டு வந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உண்டு ‌ கிழக்கு கோபுரத்தை விக்கிரமசோழனும் மேற்கு கோபுரத்தை பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியரும் தெற்கு கோபுரத்தை காடவர் கோப்பெருஞ்சிங்கனும், வடக்கு கோபுரத்தை விஜயநகர பேரரசின் அரசர் கிருஷ்ணதேவராயரும் கட்டியுள்ளனர் .

முதற் குலோத்துங்க சோழன் ஆட்சியில் சிறந்த சேனைத் தலைவனாக இருந்தவன் “ நரலோக வீரன் தொண்டைமான் ” விக்கிரம சோழன் ஆட்சி முற்பகுதியிலும் இருந்தவன். இவன் சிதம்பரம் கோயிலுக்கு “சித்தலிங்கமடத்தில் சிவனுறையும் கற்றளி ஒன்று கட்டினான்' அதைச் சுற்றிப்பிரகாரமும் ஒரு மண்டபமும் அமைத்தான்." திருப்புலிவன ஈசற்கு விளக்கெரிக்க 12 கழஞ்சு பொன் அளித்தான். "திரிபுவனை ஈசற்கு நிலங்கள், மண்டபம், நந்தவனங்கள் இவற்றை அமைத்தான் " திருப்புகலூரில் நரலோக வீரன் என்ற தன் பெயரால் மண்டபம் ஒன்று கட்டினான்." திருஞான சம்பந்தப் பெருமான் தேவாரத்தை ஓதுவதற்கென்று அழகிய மண்டபம் ஒன்றை அமைத்தான். இந்த நூறு கால் மண்டபம் சிதம்பரம் கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்தத்துக்கு மேற்கில், சிவகாமி அம்மன் சன்னதிக்கு தெற்கில் உள்ள மண்டபத்தைக் கட்டியவன் என்று கல்வெட்டுகள் உள்ளன.

சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கனைத் தோற்கடித்த வீரபாண்டியன் இந்த நூற்றுக்கால் மண்படபத்தில் பட்டாபிஷேகம் செய்து கொண்டதனால் வீரபாண்டியன் திரு மண்டபம் எனப் பெயர் பெற்றது .அதன் பின்னர் அவரது மகன் விக்கிரம பாண்டியரும் அதே மண்டபத்தில் பட்டாபிஷேகம் செய்து கொண்டார். கோவிலுக்கு பல திருப்பணிகளும் செய்தனர்.கோவிலின் முதல் சுற்றுப் பாதை (பிரகாரம்) விக்கிரம சோழ திருமாளிகை என்றும், இரண்டாம் சுற்றுப்பாதை குலோத்துங்க சோழன் திருமாளிகை என்றும் என்றும் மேலகோபுரம் குலோத்துங்க சோழன் திருமாளிகைப் புறவாயில் எனவும் அழைக்கப்படுவதாகத் தென் இந்தியக் கல்வெட்டு ஆய்வு எண் 22 கூறுகிறது.

பிஜப்பூர் சுல்தான்களின் படையெடுப்பிலிருந்து நடராஜரை பாதுகாக்க 1648 ஆம் ஆண்டிலிருந்து 1686 ஆம் ஆண்டு வரை மதுரையிலும் பின்னர் 40 மாதங்கள் புதுக்கோட்டை சமஸ்தானம் குடுமியான் மலையிலும் பாதுகாக்கப்பட்டது. இதன்பின்னர் மராட்டிய வழி வந்த செஞ்சிக் கோட்டை மன்னர் சாம்பாஜியின் ஆணையில் கோபாலத்தாசி என்பவர் கோவிலை திருப்பணிகள் மூலம் சரி செய்து கும்பாபிஷேகம் நடத்தினார்.

1747 ஆம் ஆண்டில் சரவணத் தம்பிரான் கட்டளையை ஏற்படுத்தி நடராஜர் கோவிலை சரிசெய்தார். நீண்ட காலமாக நடராஜர் கோவிலின் நிர்வாகம் சரவண தம்பிரானிடமிருந்தது. பரங்கிப்பேட்டை டச்சுக்காரர்கள் சார்ந்த வணிகர்களின் நிதியுதவியைப் பெற்று ஆயிரம் கால் மண்டபத்தையும் நான்கு கோபுரத்தையும் சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்தினார். கோவிலின் மூன்றாம் சுற்றுப்பாதை தம்பிரான் திருவீதி என்றழைக்கப்படுகிறது.

மைசூர் போர் ,பிரெஞ்சு பிரிட்டிஷ் போரால் சிதைவுற்ற நடராஜர் கோயிலை பச்சையப்ப முதலியாரும் அவரது மனைவியாரும் 40000 வராகன் செலவழித்து கோயிலை செப்பணிட்டு திருக்குடமுழுக்கு நடத்தினர். இதில் காநாடுகாத்தான் திருப்பணிச் செம்மல் வெ.வீர.நாகப்ப செட்டியார் செய்த  கைங்கர்யமும் அடங்கும். அந்த திருப்பணி செய்ய ஏற்படுத்தப்பட்டுள்ள மடம் தான் வெ.சா மடம் ஆகும். இப்படி அந்தணர் உதவி இல்லாமல் கட்டப்பட்ட ஆலயம் அந்தணர்கள் உரிமை கோரும் நிலையில் தான் அரசு சார்பில் அறநிலையத்துறை ஒரு நிரந்தர ஸ்கீம் ஏற்படுத்தும் முயற்சியில் உள்ளது. என்பதே இங்கு பொது நீதி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்