க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை - 2023 இல் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்க்ஷ சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது
க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை - 2023 இல் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் உலகின் முதல் 1,000 பல்கலைக்கழகங்களில் இடம் பிடித்துள்ளது.
க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை 2023 இல் இந்த ஆண்டு 100 நாடுகளைச் சேர்ந்த 2462 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில் 41 இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் 801-1000 ரேங்க் வரம்பில் இடம்பிடித்துள்ளது.
QS உலக பல்கலைக்கழக தரவரிசையானது கல்வி நற்பெயர், பணியமர்த்துபவர் நற்பெயர், ஆசிரியர் / மாணவர் விகிதம், ஆசிரியர்களுக்கான மேற்கோள்கள், சர்வதேச ஆசிரிய விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் 2020 ஆம் ஆண்டு முதல் உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் பங்கேற்று வருகிறது. 2010 ஆம் ஆண்டு முதல் QS ஆசிய பல்கலைக்கழக தரவரிசை, QS BRICS பல்கலைக்கழக தரவரிசையில் முனைப்புடன் பங்கேற்கிறது.
டைம்ஸ் உயர்கல்வி உலகப் பல்கலைக்கழக தரவரிசை, டைம்ஸ் உயர்கல்வி தாக்கத் தரவரிசை, பொதுநலப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு மற்றும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF), ATAL Innovation Ranking, Outlook-ICARE போன்ற அனைத்து சர்வதேச தரவரிசைகளிலும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் கணிசமான மதிப்பெண்களுடன் தரவரிசையில் பங்கேற்று வருகிறது என பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்