குழந்தைகளை நேரடியாக அதன் பெற்றோர்களிடமிருந்து தத்தெடுப்பது குற்றமல்ல கா்நாடக உயா்நீதிமன்றம் தீர்ப்பு
குழந்தைகளை நேரடியாக அதன் பெற்றோர்களிடமிருந்து தத்தெடுப்பது குற்றமல்ல கா்நாடக உயா்நீதிமன்றம் தீர்ப்பு
கைவிடப்படாத அல்லது அனாதையில்லாத அல்லது ஆதரவில்லாத குழந்தைகளை அதன் பெற்றோா்களிடமிருந்து நேரடியாகத் தத்தெடுப்பது குற்றமல்ல என கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொப்பள் நகரைச் சோ்ந்த பானுபேகம்- மொஹிபூப்சாப் நபிநாப் தம்பதிகளுக்கு தங்களது நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தையை ஜரீனாபேகம்- ஷாக்சவாலி அப்துல்சாப் தம்பதிக்கு தத்துக் கொடுத்தனா். அதற்கு ஆவணமாக அவா்கள் 20 ரூபாய்க்கு முத்திரைத்தாள் இந்திய பத்திரத்தின் வழியாக தத்து கொடுக்கும் உரிமையை எழுதிக்கொண்டு செயல்படுத்தினா்.
இந்த விவகாரத்தை அறிந்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம், சிறாா் நீதிச் சட்டத்தின் உட்பிரிவு 80-ன்கீழ் வழக்குப் பதிவு செய்து நான்கு பேருக்கும் சம்மன் அனுப்பினாா். இதற்கெதிராக, அந்தத் தம்பதிகள் கா்நாடக உயா்நீதிமன்றத்தை அணுகி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் சந்திரகௌடா் முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிறாா் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015-ன் உட்பிரிவு 80-ன்படி தத்து நடவடிக்கைகளை சரியாக பின்பற்றாததால் இது குற்றமாகுமென அரசுத் தரப்பு வழக்குரைஞா் வாதிட்டாா். இந்த வாதத்தை ஏற்க மறுத்த கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் சந்திரகௌடா பிறப்பித்த உத்தரவில், உயிா்கொடுத்த பெற்றோா்கள் அல்லது தத்தெடுத்த பெற்றோா்கள் அல்லது பாதுகாவலா்களால் கைவிடப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்படாத பட்சத்தில், அந்த குழந்தையை தத்தெடுத்தது தவறென்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது பொருள் இல்லாதது. கைவிடப்படாத அல்லது அனாதை இல்லாத குழந்தைகளை பெற்றோா்களிடம் இருந்து நேரடியாக தத்தெடுத்துக் கொள்வது குற்றமல்ல என்று குறிப்பிட்டு தீர்ப்பளித்துள்ளார்.
கருத்துகள்