பொருளாதார ரீதியில் இலங்கையின் தற்போதைய நிலைமை
மிகவும் கவலைக்கிடமானது . மிக மோசமான ஒரு பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியிருக்கின்றது. இப்போதுள்ள நிலைமை எப்போதும் ஏற்றுக்கொள்ள கூடிய நிலைமையாக தென்படவில்லை.
இலங்கையின் நிலைமை தற்போது திவால் ஆகியிருக்க தான் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாது மட்டுமல்ல, அந்த கடன்களுக்கான வட்டியைக்கூட செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அது பற்றிய அறிவிப்புகள் வந்தது. இப்போது வழங்கப்பட்டுள்ள அந்த கருணைக் காலம் முடிவடைந்திருக்கின்றது. ஆகவே இலங்கை முழுமையாகவே திவாலான நிலைமையில் உள்ளது என்றே சொல்லலாம்.
எல்லாவற்றுக்கும் காரணமாக அமைவது இந்த டாலர் பற்றாக்குறை தீராத பட்சத்திலே இந்த நிலைமை இன்னும் மோசமாகக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆனால் புதிதாக பதவியேற்றிருக்கின்ற பிரதமர், அவருக்கு இருக்கக்கூடிய தொடர்புகள் மற்றும் சர்வதேச உறவுகளை பயன்படுத்தி, இந்த நிலைமையிலிருந்து வெளிவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிகின்றது. பணத்தை அச்சிட்டால் பொருளாதார பிரச்னை முடிந்துவிடுமா?
ரணில் விக்ரமசிங்கவின் வருகையின் அடுத்த நாள், இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்திருந்தது. பங்கு சந்தை ஒரு வளர்ச்சியை எட்டியிருந்தது.
இந்த நிலைமை, மத்திய வங்கியின் ஒரு சுற்றறிக்கை மூலமாக ஏற்பட்டது ஏனென்றால், மத்திய வங்கி நாணய மாற்று விகிதத்தை சந்தைக்கு தீர்மானிக்க விட்ட நிலையிலே, அது பல மடங்கு அதிகரித்து செல்லக்கூடிய ஒரு நிலைமை ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டு வர வேண்டுமானால், டாலருக்கு பரிமாறக்கூடிய ரூபாயின் வீழ்ச்சியினை தீர்மானிக்க வேண்டிய ஒரு நிலைமை இருந்தது. எனவே அந்த நிலைமையினை குறிப்பிட்ட ஒரு வீழ்ச்சிக்குள்ளேதான் ரூபாயின் பெறுமதி இருக்க வேண்டும். இதை மத்திய வங்கி உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.இந்தச் சுற்றறிக்கையைப் படிக்கும் போது மக்கள் கவலையடையும் நிலையில், இலங்கையின் அனைத்து அபிவிருத்திகளும் முற்றுப் புள்ளியில் நிற்கும் என்று அங்கு யாரும் எதிர்பார்க்கவே இல்லை.
கடந்த காலங்களில் ஆசியாவிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருந்த இலங்கை தற்போது மற்ற நாடுகளுக்கு பொருளாதாரத்தில் மோசமான முன்னுதாரணமாக மாறியுள்ளது.
தலைவர்களால் தவறான முடிவுகள் எடுக்கப்படும் போது, ஜனநாயகம் மட்டும் தோல்வியடைந்தால், நாடும் கூட அதை எதிர்த்து குரல் கொடுக்காமல் இருப்பது அனைத்து அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் ஒரு பெரிய பாடம். அந்த அறிவிப்பு ஒரு முக்கியமான காரணம், டாலரின் பெறுமதி இந்த வீழ்ச்சிக்குள்ளே வர வேண்டும் என்பது. எனவே தான் 365 ரூபாயாக ஓர் இரவிலேயே டாலர் வீழ்ச்சி அடைந்தது . இப்போது அது இன்னும் குறைவடைந்திருக்கின்றது. காரணம் ஏற்றுமதி செய்கின்ற நபர்கள், தங்களுடைய வருவாய்களை, வங்கித்துறை வழியில் அனுப்ப வேண்டும் என கடப்பாடு கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றது.
அதேபோல இறக்குமதி செய்பவர்கள் வங்கி துறையின் வழியாக மட்டுமே அந்த கடனை செய்ய வேண்டும் என்ற வகையிலான ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இது முன்னவே செய்யப்பட்டிருக்குமானால், இந்தளவு டாலர் உயர வாய்ப்பில்லை. எனினும், சந்தைக்கு முழுமையாக அடிபணிந்த நிலையிலேயே இந்த டாலரின் பெறுமதி சென்றது.
ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற காலம், அடுத்த நாள் இந்த சுற்றறிக்கையும் செயற்பட ஆரம்பித்தமையினால் இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இலங்கையினுடைய பங்கு சந்தை தொடர்ந்து அரசியல் மாற்றங்களுக்கு அல்லது நகர்வுகளுக்கு ஏற்ற வகையில் இருக்கும். அந்த சந்தையை பொருத்த மட்டிலே, பிரதமரின் வருகையின் மூலம் அந்த நம்பகத்தன்மை அதிகரித்திருப்பதாக யாரும் நினைக்கலாம். தனிநபர் ஒருவர் 10000 டாலர்களை மாத்திரமே வைத்துக்கொள்ள முடியும் என்ற ஒரு அறிவிப்பு நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. 15000 டாலரிலிருந்து 10000 டாலர் வரை குறைக்கப்பட்டிருக்கின்றது.
பலர் இப்போது டாலர்களை பதுக்கி வைத்திருக்கின்றார்கள் இன்னும் விலை அதிகரிக்கும் என்ற நோக்கிலே. அந்த பதுக்கலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதும் ஒரு நோக்கம். ரூபாவில் தங்களுடைய வைப்புகளை வைத்திருப்பதை விட, டாலர்களில் அதனை பதுக்கி வைப்பதன் மூலம் கள்ளச் சந்தையிலே அதை கூடிய விலைக்கு விற்பனை செய்யலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கின்றது. இந்த எதிர்பார்ப்பை முறியடிக்கும் வகையிலேயே தனிநபர்கள் வைத்திருக்கக்கூடிய அந்த அளவினைக் கட்டுப்டுத்துகின்ற ஒரு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். டாலர் நிரம்பலை சந்தையில் அதிகரிக்கக்கூடிய ஒரு வழி வகையாகவே இதனைப் பார்க்க முடியும்.
வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படுகின்ற பணம், வங்கிகளில் இருக்கும் போது, அந்த பணத்திற்கும் இவ்வாறான கட்டுப்பாடுகள் தேவை தான்.
வங்கிகளிலே வைப்பு செய்யப்படுகின்ற பணம், பொதுவான என்.எப்.ஆர்.சி என்ற வெளிநாட்டு கணக்கிலேயே வைக்கப்பட வேண்டும். குறிப்பாக டாலரிலே வைக்கப்பட வேண்டும். அவ்வாறு வைக்கப்படுகின்ற போது, பணத்தை மீள பெறும் போது, அந்த பணம் ரூபாவில் பெறக்கூடியதாக இருக்கும். இந்த பணம் உரிமையாளர்களின் அனுமதி இல்லாமல், மத்திய வங்கியினால் மாறற்ப்பட்டது என்ற ஒரு வதந்தி நிலவியது. ஆனால் அது அவ்வாறு இல்லை என மத்திய வங்கி கூறியிருக்கின்றது. டாலர் கணக்குகளிலே தங்களுடைய வைப்புகளை வைத்திருப்பவர்கள், அந்த டாலர் என்ற கணக்கிலேயே தங்களுடைய கணக்கை பாதுகாக்கலாம்.
கருத்துகள்