தமிழ் திரைப்பட நடிகை மீனாவின் கணவர் காலமானார்.
2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெங்களூர் மென் பொறியாளர் வித்யாசாகரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளனர்.
நடிகை மீனா கணவருடன் பெங்களூருவில் வசித்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அவரது கணவர் வித்யாசாகர் கொரானாவில் பாதித்தவர் அதிலிருந்து மீண்டாலும் அதன் பக்கவிளைவுகள் வித்யாசாகரின் நுரையீரலில் ஏற்பட்டு அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தவர்.
நுரையீரல் பாதிப்பு மற்றும் நெஞ்சுவலி காரணமாக எம்.ஜி.எம் மருத்துவமனையில் கடந்த சில தினங்காள சிகிச்சை பெற்றுவந்தவர் பலனின்றி இன்று காலமனார். மருத்துவமனையின் தகவல் படி‘‘ஏற்கெனவே நுரையீரல் பாதிப்பு அவருக்கு இருந்தது. அது இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்குப் பாதிப்பை உண்டாக்கக் கூடிய பிரச்னை. அதாவது புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கிற போது உண்டாகக் கூடிய நோய். பெங்களூருவுல அவருடைய வீட்டுக்குப் பக்கத்தில நிறைய புறாக்கள் வளர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. அதனால் அலர்ஜி ஏற்பட்டு அவருக்கு சுவாசப் பிரச்னை வந்ததாகவும். ஏற்கெனவே இந்தப் பாதிப்பிருந்த நிலையில் கோவிட் சூழலும் சேர்ந்துகொள்ள அதுக்குப் பிறகுதான் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானதாகவும்.
இந்தப் புத்தாண்டு நேரத்துல மீனா குடும்பத்துல எல்லோருக்குமே கொரோனா தொற்று ஏற்பட்டுச்சு. தொற்று உடனே சரியானாலும், நுரையீரல் பிரச்னை அவருக்குத் தீரவே இல்லை. சென்னை ஆழ்வார்பேட்டையிலிருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்த பின்னர் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்த நிலையில். மூளைச்சாவு அடைந்தவர்களின் நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம். அதற்கான காத்திருப்பு நேரத்துல, அறுவை சிகிச்சை இல்லாமலே குணப்படுத்திடலாம்னு முயற்சி செய்திருக்காங்க.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நாளுக்கு நாள் உடல்நிலை மோசமடைந்து இன்று இறந்ததாக" தகவல்கள் கிடைத்தன. வித்யாசாகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது முன்னாள் மருத்துவத் துறைச் செயலாளரும் தற்போது உணவு மற்றும் கூட்டுறவு தன் துறை செயலாளருமான டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன் மருத்துவமனை சென்று அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்துக் கேட்டு வந்தார். இந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு திரைத் துறையில் உள்ள பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்