மும்பை சர்வதேச திரைப்பட விழாவிலிருந்து கோவா இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் பங்கேற்க ஒரு வாய்ப்பு
இந்த ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்துவிட்டதே என்று கவலைப்பட வேண்டாம். 17வது மும்பை சர்வதேச திரைப்பட விழா உங்கள் விடுமுறையை முடிப்பதையோ அல்லது திரைப்படங்களின் கொண்டாட்டத்தை நிறுத்துவதையோ விரும்பவில்லை.
உங்கள் வார்த்தைகள் உங்களை கோவாவிற்கு ஒரு பயணமாக அழைத்துச் செல்லும்.
சுற்றுலா அமைச்சகம், மேற்கு மண்டல அலுவலகம், மும்பை மற்றும் திரைப்படப் பிரிவு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆகியவை திரைப்பட ஆர்வலர் மற்றும் எழுத்தாளருக்கு வெகுமதி அளித்து ஊக்குவிக்கவுள்ளன. நீங்கள் நல்ல திரைப்படங்களைக் கொண்டாடி, திரைப்பட இயக்குநர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று விரும்புபவர்களாக இருந்தால் - இந்தச் சலுகை உங்களுக்கானது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர் மும்பை-கோவா-மும்பை சொகுசு கப்பல் பயணத்திற்கான டிக்கெட்டை பெறுவார்.
இதில் பங்கேற்க, தேசிய மற்றும் சர்வதேச போட்டியின் கீழ் மும்பை சர்வதேச திரைப்படவிழா 2022 இன் போது திரையிடப்பட்ட எந்தவொரு திரைப்படத்தைப் பற்றிய விமர்சனம் மூலம் உங்களது திறமையை வெளிப்படுத்துங்கள். மொத்தம் 119 கதை அம்சம் இல்லாத படங்கள். ஆவணப்படம், குறும்படங்கள் மற்றும் அனிமேஷன் படங்கள், தேசிய மற்றும் சர்வதேச போட்டி பிரிவின் கீழ் திரையிடப்படுகின்றன. இந்தப் படங்களைப் பெரிய திரைகளில் வந்து பார்க்கவும், திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளவும் https://miff.in/ இல் இப்போதே பதிவு செய்யவும்.
கருத்துகள்