அக்னிபத் திட்டம் குறித்து திராவிட முன்னேற்றக் கழகம் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா தனது முகநூல் மூலம் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், "நான் ஏன் அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கிறேன் என்றால், நாம் அமைதியாக வாழ உயிரைப் பணயம் வைத்து வாழும் ஒருவனுக்கு குறைந்தபட்ச பணிப் பாதுகாப்பு கூட இல்லாது 'கான்டிராக்ட் லேபர்' போல நடத்துவது அநீதி" எனத் தெரிவித்துள்ளார் "அக்னிபத் திட்டத்திற்கு வட மாநிலங்களில் பற்றி எரிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒன்றுமே எதிர்ப்பில்லையே, ஏனென்றால், அவர்களது குறைந்தபட்ச பள்ளிப் படிப்பிற்கு கிடைக்கும் அரசு வேலையாக ராணுவப் பணிகளையே நம்பியுள்ளனர்" என தி.மு.க எம்.பி எம்.எம்.அப்துல்லா எனவும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு பீகார், உத்தர பிரதேசம், தெலுங்கானா மாநிலங்கள் போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. ரயில் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு வந்த போது தமிழ்நாடு கொதித்தது, ஆனால் வடக்கு மாநிலங்களில் சலசலப்பில்லை, இப்போது அவர்களது பணி ஆதாரமான ராணுவத்தில் கை வைத்துள்ளதால் வடக்கு மாநிலங்கள் கொதிக்கிறது" என மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா கூறியுள்ளார். மத்திய பாரதிய ஜனதா கட்சியின் அரசு புதிதாக அக்னிபத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இராணுவத்தில் ஆட்களை சேர்க்கும் மத்திய அரசின் நான்கு ஆண்டு திட்டத்திற்கு வடக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. 17.5 வயது முதல் 21 வயது வரை ராணுவத்தில் இணைந்து பணியாற்றலாம், 4 ஆண்டுகளுக்குப் பிறகு 25 சதவீத இளைஞர்கள் மட்டுமே நிரந்தரம் ஆக்கப்படுவார்கள் என்ற மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்துள்ள வடக்கு மாநிலத்தினர்,
இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியதன் அடிப்படையில் தற்போது வயது வரம்பை மாற்றம் செய்யப்பட்டது. இருந்த போதிலும் அவர்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
கருத்துகள்