ஃபாக்ஸ்கான் தலைவர் திரு யங் லியூவுடன் பிரதமர் சந்திப்பு
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஃபாக்ஸ்கான் தலைவர் திரு யங் லியூவை சந்தித்தார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“ஃபாக்ஸ்கான் தலைவர் திரு யங் லியூவை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. செமிகண்டக்டர்கள் உட்பட, இந்தியாவில் மின்னணு சாதன உற்பத்தி திறனை விரிவுபடுத்துவது என்ற அவர்களது திட்டத்தை நான் வரவேற்கிறேன். கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத நிலையை உருவாக்குவது என்ற நமது நிலைப்பாட்டிற்கு ஏற்ப, மின்சார வாகனங்கள் உற்பத்திக்கு நாம் ஊக்கமளிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள்