பலரால் அறியப்பட்ட கூத்துக்களில் நடிக்கும் கோமாளிகள் அல்லது திரைப் படத்தில் நடிக்கும் நடிகன் மீதான பார்வைக்கும், சமூகத்தில் அறிமுகமில்லாமலே வாழும் அடுத்த வீட்டு மக்களைக் கூட கூட அறியாமல் இருப்பதற்கும்மிடையே ஒரு வேறுபாடு உண்டு
இதில் முதல் ரகத்தை விட இரண்டாம் ரகத்தினரின் வாழ்வியல் சுதந்திரம் அதிகம். சிறு கதா பாத்திரங்களில் நடிக்கும் நகைச்சுவை நடிகன் கூட அவன் படத்தில் வரும் பாத்திரங்களில் வரும் பெயரில் தான் மக்கள் உணர்ந்து அழைக்கும் நிலை நமது மாநிலத்தில் சினிமா வாழ்வியல் மக்களுடன் இரண்டறக் கலந்து விட்டது. அந்த வகையில் தான் தங்கள் பட நாயகி நயன்தாரா திருமணத்தை அவர் எதிர்நோக்குகிறாறோ இல்லையோ, நம் மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த அளவுக்கு சினிமா மக்களின் வாழ்க்கையில் பரவியதும், விரவியும் கிடக்கிறது.
பாலிவுட் நடிகர் சல்மான்கானுடன் நெருக்கமான பழக்கம் முறித்துக் கொண்ட பின்னர் விவேக் ஓபராயுடன் நெருக்கம்..
பின்னர் அதையும் முறித்துக் கொண்டார் அபிஷேக்பச்சனுடன் திருமணம். செய்துகொண்ட நடிகை உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராயை என்றுமே நமது உள்ளூர் கிழவி உள்ளிட்ட யாருமே எப்போதும் குறையாகச் சொன்னது கிடையாது. கேவலமாகவும் பேசியது கிடையாது காரணம். நடிகர்கள் நம் வீட்டில் ஜன்னல் வழியாக உறவுகள் இல்லாத உறவாக வந்த நிலையில். இது தமிழ்நாட்டில் நடக்கவில்லை ஹிந்தி பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் இது பெரிய விஷயமுமில்லை. அங்கு தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சார நிலை இருந்ததில்லை.
நடிகை நயன்தாரா நடிகர் சிலம்பரசனுடன் நெருக்கம். பிறகு ஏற்கனவே திருமணமான நாட்டிய நடிகர் பிரபுதேவாவுடன் நெருக்கம். அதுவும் கடந்து இப்போது விக்னேஷ் சிவனுடன் பல ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, தற்போது முறைப்படியான திருமணம்.
நடிகை நயன்தாராவையும் யாரும் விமர்சிக்கப் போவதில்லை. கேவலமாகப் பேசப்போவதுமில்லை. தமிழ்நாட்டின் மக்கள் வாழ்த்தவே செய்கிறார்கள்.
திரையுலகம் அரசியல் மட்டுமின்றி பல துறைகளைச் சார்ந்த மேல்மட்டத்தில் வாழும் கீழ்மட்டப் பெண்களின் வாழ்க்கை இப்படி "வழக்கத்திற்கு அப்பாற்பட்டதென" நிறைய உண்டு.
தன்னுடைய சொந்த வாழ்க்கையை தன் விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு உரிய அதே உரிமை ஒவ்வொரு நபருக்கும் நடிகைக்கும் உண்டு.
ஆனால் இதே உரிமை கொண்டு ஒரு ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்துப் பெண்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ள விரும்பினால் சமூகம் எவ்வளவு எளிதாக விடாமல் கேவலமாகப் பேசுகிறது. காரணம் நமது பாரம்பரிய கலாச்சார நிலை தான்.
பெண்ணின் வாழ்க்கை கொஞ்சம் தடுமாற்றம் கண்டு சரியாக அமையாமல் போனால் அவரது குடும்பத்தினரே அவரை எவ்வளவு தூரம் பேசுகிறார்கள்.. சலிப்பாகவும் பார்க்கிறார்கள். என்பதற்கு பல உதாரணங்கள் கூறமுடியும்.
எல்லாவற்றிலும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு ஒரு சாபக்கேடு. இப்போது நடிகை நயன்தாரா திருமணத்தை கூத்தாடிகள் வாழ்க்கை முறைப்படி மக்கள் பேசுகின்றனர். ஆனால் அவர்களும் மனித மனம் கொண்ட பலர் அறிந்தவர்கள் என்பது தவிர வேறு இல்லை.சிம்பு என்ற சிலம்பரசனின் 'போடா போடி' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். 2015 ஆம் ஆண்டில் அவர் இயக்கிய நானும் ரவுடி தான் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, அதன் கதாநாயகியாக நடித்த நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்குமிடையே காதலாகி காலம் கடந்து தற்போது இருவருக்கும் ஜூன் 9 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், திருப்பதியில் நடைபெற தீர்மானிக்கப்பட்ட நிலையில் சென்னை அருகே மாமல்லபுரத்திலுள்ள ரிசார்ட்டில் நடத்த முடிவு செய்துள்ளனர்.
அதை உறுதிசெய்யும் வகையில், நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ்சிவன் இருவரும் தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.
ஸ்டாலினை நேரில் சந்தித்து, தங்கள் திருமண அழைப்பிதழை கொடுத்தனர். அப்போது நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார். திருமணத்தில் தென்னிந்திய திரைப்படத் துறையில் பிரபலமான நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். தற்போது திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது. மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் பைவ் ஸ்டார் ஹோட்டலில் ஜுன் மாதம் 9 ஆம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலான முகூர்த்தத்தில் நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடக்கிறது.நயன்தாரா என மக்கள் அறிந்த (வயது 39) டயானா மரியா குரியன் என்ற பெயர் கொண்ட நடிகை கேரளாவில் திருவல்லா பூர்வீகமாகக் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் பிறந்து வளர்ந்து 2003 ஆம் ஆண்டு மனசினகாரே எனும் மலையாளத் திரைப்படம் மூலம் அறிமுகமாகி 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.
கலைமாமணி விருது,நந்தி விருது, தமிழக அரசு திரைப்பட விருதுகள்,பிலிம்பேர் விருதுகள். பெற்றவர்
கருத்துகள்