2022-23 ஆம் ஆண்டில் பள்ளிகளில் 10,000 தரநிலைக் கழகங்களைத் தொடங்க இந்தியத் தர நிர்ணய அமைவனம் இலக்கு
இந்திய தர நிர்ணய அமைவனம், தரநியமங்களை உருவாக்குதல் மற்றும் தரசான்றிதழின் முக்கிய செயல்பாடுகள் மூலம் நாட்டில் வலுவான தரமான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க இந்திய அரசால் அறிவுத்தப்பட்டது. இந்த ஆணையையடுத்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தரநிலைகள் கழகங்களை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முதல் ஆண்டான 2021-22-லேயே நாடு முழுவதும் 1,037 தரநிலைக் கழகங்கள் தொடங்கப்பட்டன. இந்த முயற்சியின் முக்கியத்துவம் மற்றும் வெற்றியை உணர்ந்து, 2022-23 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 10,000 தரநிலைக் கழகங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் மூலம் 9 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள அறிவியல் மாணவர்கள், தரம் மற்றும் தரப்படுத்தல் பற்றிய கருத்துகளை வெளிப்படுத்துவது நோக்கமாகும். குழந்தைகள் வெளிப்படுத்தும் மதிப்புகள், வளரும் ஆண்டுகளில் அவர்களின் இளம் மனதில் பதிந்து, தேசத்தின் எதிர்காலத்தை மாற்றும் திறன் கொண்ட ஒரு பெருஞ்சக்தியாக மாற்ற வேண்டுவதும் இதன் நோக்கமாகும்.
ஒவ்வொரு தரநிலைக் கழகமும் அதன் வழிகாட்டியாக ஒரு அறிவியல் ஆசிரியர் மற்றும் உறுப்பினர்களாக குறைந்தபட்சம் 15 மாணவர்களைக் கொண்டுள்ளது. தரநிலைக் கழகங்களின் வழிகாட்டிகளுக்கு இரண்டு நாள் உறைவிடப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதுவரை 1000 வழிகாட்டிகள் பயிற்சி பெற்றுள்ளனர்.
2022-23-ஆம் ஆண்டில் 10,000 தரநிலைக் கழகங்களைத் திறப்பது என்ற தற்போதைய இலக்குக்கு இணங்க, இந்திய தர நிர்ணய அமைவனம்,பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் தரநிலைக் கழகங்களை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாகப் பணியாற்றிவருகின்றது. ஏற்கனவே 1755 க்கும் மேற்பட்ட கழகங்கள் ஒப்புதலின் முந்திய நிலைகளில் உள்ளன. இன்றுவரை 43,000 மாணவர்கள் இந்த தரநிலைக் கழகங்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்திய தர நிர்ணய அமைவனத்தின் துணை இயக்குநர் (சந்தை மற்றும் நுகர்வோர் நலன்) திரு எச் அஜய் கன்னா வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.2022-23 ஆம் ஆண்டில் பள்ளிகளில் 10,000 தரநிலைக் கழகங்களைத் தொடங்க இந்தியத் தர நிர்ணய அமைவனம் இலக்கு
இந்திய தர நிர்ணய அமைவனம், தரநியமங்களை உருவாக்குதல் மற்றும் தரசான்றிதழின் முக்கிய செயல்பாடுகள் மூலம் நாட்டில் வலுவான தரமான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க இந்திய அரசால் அறிவுத்தப்பட்டது. இந்த ஆணையையடுத்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தரநிலைகள் கழகங்களை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முதல் ஆண்டான 2021-22-லேயே நாடு முழுவதும் 1,037 தரநிலைக் கழகங்கள் தொடங்கப்பட்டன. இந்த முயற்சியின் முக்கியத்துவம் மற்றும் வெற்றியை உணர்ந்து, 2022-23 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 10,000 தரநிலைக் கழகங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் மூலம் 9 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள அறிவியல் மாணவர்கள், தரம் மற்றும் தரப்படுத்தல் பற்றிய கருத்துகளை வெளிப்படுத்துவது நோக்கமாகும். குழந்தைகள் வெளிப்படுத்தும் மதிப்புகள், வளரும் ஆண்டுகளில் அவர்களின் இளம் மனதில் பதிந்து, தேசத்தின் எதிர்காலத்தை மாற்றும் திறன் கொண்ட ஒரு பெருஞ்சக்தியாக மாற்ற வேண்டுவதும் இதன் நோக்கமாகும்.
ஒவ்வொரு தரநிலைக் கழகமும் அதன் வழிகாட்டியாக ஒரு அறிவியல் ஆசிரியர் மற்றும் உறுப்பினர்களாக குறைந்தபட்சம் 15 மாணவர்களைக் கொண்டுள்ளது. தரநிலைக் கழகங்களின் வழிகாட்டிகளுக்கு இரண்டு நாள் உறைவிடப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதுவரை 1000 வழிகாட்டிகள் பயிற்சி பெற்றுள்ளனர்.
2022-23-ஆம் ஆண்டில் 10,000 தரநிலைக் கழகங்களைத் திறப்பது என்ற தற்போதைய இலக்குக்கு இணங்க, இந்திய தர நிர்ணய அமைவனம்,பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் தரநிலைக் கழகங்களை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாகப் பணியாற்றிவருகின்றது. ஏற்கனவே 1755 க்கும் மேற்பட்ட கழகங்கள் ஒப்புதலின் முந்திய நிலைகளில் உள்ளன. இன்றுவரை 43,000 மாணவர்கள் இந்த தரநிலைக் கழகங்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்திய தர நிர்ணய அமைவனத்தின் துணை இயக்குநர் (சந்தை மற்றும் நுகர்வோர் நலன்) திரு எச் அஜய் கன்னா வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். தொடர்பு எண் 9366719530
கருத்துகள்