மைகவ் குஜராத்- 18வது மைகவ் மாநில தளம் இன்று தொடங்கப்பட்டது
MyGov குஜராத் தளம் 18-வது MyGov மாநில பிரிவு இன்று தொடங்கப்பட்டது. குடிமக்களை மையப்படுத்தும் இந்த தளம் பின்வரும் 4 முக்கிய நோக்கங்களுடன் தொடங்கப்பட்டுள்ளது -
மழைநீரைச் சேமிப்பது மற்றும் நீர் சேமிப்புக் குறிப்புகளைப் பகிர்வது குறித்த விவாத அரங்கம்.
மின் ஆளுமை மூலம் வாழ்க்கையை எளிதாக்குதல் பற்றிய விவாத அரங்கம்.
தூய்மை இயக்கம் பற்றிய கருத்துக்கணிப்பு.
டிஜிட்டல் சேவா சேது பற்றிய வலைப்பதிவுகள்.
MyGov குஜராத் தளம் தேசக்கட்டமைப்பில் மேலும் கூடுதலான பங்களிப்பை அளிக்கும் வகையில் 6.67 கோடி குஜராத் மக்களுக்கு அதிகாரமளிக்கும்.
உலகின் மிகப் பெரிய குடிமக்கள் பங்கேற்கும் தளமான MyGov, அரசை சாமானியர்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவரும் யோசனையுடன் 2014, ஜூலை 26 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. MyGov. குடிமக்கள் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்கும், பங்கேற்பு நிர்வாகத்தை யதார்த்தமாக்குவதற்குமான ஒரு தளமாக உருவாகியுள்ளது.
இந்த தளத்தில் 2.5 கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர்.
கருத்துகள்