பொன்னியின்
செல்வன் சர்ச்சையான விக்ரமின் போஸ்டர்.
முதலில் ஆதித்ய கரிகாலன் ரோலில் நடிக்கும் விக்ரமின் போஸ்டர் வெளியிடப்பட்டது. குதிரை மீது அமர்ந்திருக்கும் போஸ்டர் நடிகர் விக்ரம் நெற்றியில் அணிந்திருந்த நாமம் சர்ச்சையானது. சைவ - வைணவ பிரச்சனையை கிளப்பியது. விபூதியா?
திருமண்ணா? வரலாறு என்ன?
கதைக்கும் வரலாற்றுக்கும் உள்ள இடைவெளியை நாமெல்லாம் பார்க்க அவர்கள் வசூலை குறிவைத்து பார்க்கும் போது வேறு வழி? வரலாறும்
கல்கியின் மூலக்கதை பிழை ஆக கூடாது. கவனம் வேண்டும்.
கண்ணில் பட்ட செய்தி
எம்ஜிஆரும் பொன்னியின் செல்வனும்
கடந்த 1958-ஆம் ஆண்டு, பத்தாயிரம் ரூபாய் கொடுத்து `பொன்னியின் செல்வன்' கதையின் உரிமையைப் பெற்றார் எம்ஜிஆர்.
எம்.ஜி.ஆர் காலத்தில் காசு கொடுத்துக் கதை உரிமை பெறப்பட்டது. நடோடி மன்னன் படத்திற்குப் பின்னர் இதை படமாக்க நினைத்தார்.
அதன்பின், பொன்னியின் செல்வன் நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்ட காரணத்தால் தற்போது யார் வேண்டுமானாலும் அந்தக் கதையை திரைப்படமாக எடுக்கலாம். சட்டப்படி அதில் தவறில்லை. என்றாலும் தர்மப்படி கல்கியின் குடும்பத்திற்கு ஏதாவது கொடுக்கலாம் அல்லது ராயல்டி கொடுக்காமலுமிருக்கலாம்.
பொன்னியின் செல்வனை' படமாக்க முயன்ற எம்.ஜி.ஆர், இந்தப் படத்தில் இரண்டு கேரக்டரில் நடிக்க இருந்தார். ஒன்று வந்தியத்தேவன். மற்றொன்று அருள்மொழிவர்மன். இந்தப் படத்துக்கு முன் நடிகை வைஜயந்திமாலா எம்.ஜி.ஆருடன் ஒரே ஒரு படத்தில்தான் நடித்திருந்தார். அவரை பொன்னியின் செல்வனில் குந்தவை கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தார் எம்.ஜி.ஆர். ஜெமினிகணேசன், பத்மினி, சாவித்ரி, நம்பியார், டி.எஸ்.பாலையா உட்பட பலர் நடிக்க இருந்தனர்.
முதலில் எம்.ஜி.ஆர் தனது எம்ஜியார் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து, இயக்குவதாக இருந்தது. பிறகு தயாரிப்பு மற்றும் நடிப்பை மட்டும் பார்த்துக் கொண்டு வேறொருவர் இயக்குவற்கு முடிவு செய்யப்பட்டது.
அப்போதுதான் ஒரு நாடகத்தில் நடிப்பதற்காக, எம்.ஜி.ஆர் சீர்காழி சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். 6 மாதம் ஓய்வு தேவைப்பட்டது. ஓய்வு முடிந்து குணமடைந்ததும், அவர் நடிப்பில் பாதியில் நின்றபோயிருந்த படங்களை நடித்துக் கொடுத்தார். இதனால் பொன்னியின் செல்வனை அவர் எடுக்க முடியாமல் போனது. அதுபோலவே தற்போது நடிகர் விக்ரம் படம் அறிவிப்பு வந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் இது கடந்த காலத்தில் வரலாறு மற்றும் நிகழ்காலம் உணர்த்தும் வரலாறு வரலாற்று படம் எடுப்பதும் சிவன் கோவில கட்டுவதும் எல்லோருக்கும் கைகூடுவதில்லைபொன்னியின் செல்வன் திரைப்படமாக 2022 ஆம் ஆண்டு திரைக்கு வரவிருக்கும் தமிழ் வரலாற்று நாடகத் திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் இயக்கித், தயாரிக்கின்றார். எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் எனும் புதினத்தை அடிப்படையாகக் கொண்ட இரு பாகங்களின் முதல் பாகமாகும். இளங்கோ குமரவேல், பி.ஜெயமோகன் ஆகியோருடன் இணைந்து ரத்னம் இதற்கான திரைக்கதையை எழுத நடிகர்கள் விக்ரம்,கார்த்திக், ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிசா,விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெட்சுமி, அஸ்வின் ககுமனு, சோபிதா துலிபாலா மற்றும் துணைநிலை நடிகர்கள் சரத்குமார், பார்த்திபன், பிரபு, பிரகாஷ் ராஜ், ரகுமான் ஆகியோர் நடிக்கும் நிலையில். ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார், ரவி வர்மன் ஒளிப்பதிவையும் ஏ. ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுத்தலையும் தோட்டா தரணி கலை தயாரிப்பு வடிவமைப்பையும் கவனிக்க திரைப்பட தயாரிப்பு நடக்கிறது.
கருத்துகள்