கடற்படைக்குரிய கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டு மயமாக்கல் நிறுவன 'ஸ்வாவ்லம்பான்" (தற்சார்பு) கருத்தரங்கம்
கடற்படைக்குரிய கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டு மயமாக்கல் நிறுவன 'ஸ்வாவ்லம்பான்" (தற்சார்பு) கருத்தரங்கத்தில் பிரதமர ஆற்றிய உரையின் தமிழாக்கம்
மத்திய அமைச்சரவையின் எனது சகாக்களான திரு.ராஜ்நாத் சிங் அவர்களே, திரு.அஜய் பட் அவர்களே, கடற்படை தலைவர், கடற்படை துணைத்தலைவர், பாதுகாப்பு செயலாளர், இந்திய பாதுகாப்புத் தளவாட உற்பத்தியாளர்களின் சங்க தலைவர் அவர்களே, மற்றும் கல்வித்துறை மற்றும் தொழில்துறையுடன் தொடர்புடைய எனது சகாக்களே, பிற உயரதிகாரிகளே, சகோதர, சகோதரிகளே,
ஆயுதப் படையில் தன்னிறைவை அடைவது என்பது, 21-ம் நூற்றாண்டின் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கடற்படையில் தன்னிறைவை அடைவது 'ஸ்வாவ்லம்பன்' (தற்சார்பு) கருத்தரங்கம் முக்கியமான நடவடிக்கையாகும். இந்த கருத்தரங்கை கூட்டியதற்காக உங்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
நண்பர்களே,
ராணுவத் தயார் நிலைக்கான கூட்டுப் பயிற்சிகள், குறிப்பாக கடற்படையில் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்த கருத்தரங்கமும் ஒருவகையில் கூட்டுப் பயிற்சிதான். தன்னம்பிக்கைக்கான இந்த கூட்டுப் பயிற்சியில், கடற்படை, தொழில்துறை, சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் மற்றும் உலகெங்கும் உள்ள மக்கள், அரசு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ஒன்றாக இணைவது பற்றி சிந்திக்கின்றனர். இந்த கூட்டுப் பயிற்சியின் முக்கியக் குறிக்கோள், பங்கேற்பாளர்கள் அனைவருக்குமான அதிகபட்ச வெளிப்பாடு, பரஸ்பர புரிதல் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஏற்று கொள்வது. எனவே இந்த கூட்டுப் பயிற்சியின் குறிக்கோள் மிகவும் முக்கியமானது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் இந்தியக் கடற்படைக்கு 75 உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குவது என்பது மிகப்பெரிய படியாகும்.
நண்பர்களே,
நமது கடல்களும், கடலோர எல்லைகளும் நம் பொருளாதார தன்னம்பிக்கையின் பெரும் பாதுகாவலர்கள் மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கின்றன. எனவே இந்திய கடற்படையின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடற்படை தனது துறைக்காக மட்டுமின்றி, நாட்டின் வளர்ந்து வரும் தேவைகளுக்காகவும் தற்சார்புடன் இருப்பது மிக அவசியமாகும். இந்த கருத்தரங்கின் உள்ளடக்கம், நமது படைகள் தன்னிறைவு பெறுவதற்கு மிகவும் உதவும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
பாதுகாப்புத் துறையில் தற்சார்பு குறித்து விவாதிக்கும் இந்த நேரத்தில், கடந்த காலங்களில் நடந்தவைகளிலிருந்து நாம் பாடங்களை கற்று கொள்வதும் மிகவும் அவசியம். இது எதிர்காலத்துக்கு வழிவகுக்கும். வளமான கடல்சார் பாரம்பரியத்தை நாம் கொண்டிருப்பதை பார்க்கிறோம். இந்தியாவின் வளமான வணிகம் இந்த பாரம்பரியத்தின் ஒருபகுதியாக இருந்து வருகிறது. நமது மூதாதையர்கள் கடலில் ஆதிக்கம் செலுத்த முடிந்ததற்கு காரணம், அவர்கள் காற்றின் திசை மற்றும் விண்வெளி அறிவியலை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தனர். வெவ்வேறு பருவநிலைகளில் காற்றி வீசும் திசைகள் பற்றியும், அதனை பயன்படுத்தி இலக்கை அடைவது குறித்தும் நமது முன்னோர்கள் சிறந்த அறிவு பெற்றிருந்தனர்.கடற்படை புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தற்சார்பு அமைப்பின் ‘ஸ்வாவ்லம்பன்’ கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்
இந்திய கடற்படையில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் ‘ஸ்பிரிண்ட் சேலஞ்சஸ்’ திட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்தார்
21-ம் நூற்றாண்டில் இந்திய பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு கொள்கை மிக முக்கியமானது
“புதுமை கண்டுபிடிப்புகள் முக்கியமானதாக உள்ள நிலையில், அது உள்நாட்டில் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான ஆதாரங்களாக இருக்க முடியாது”
“உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் முதலாவது விமானந்தாங்கி கப்பல் வெகுவிரைவில் பயன்பாட்டிற்கு வருவதற்காக காத்திருக்கவும்”
“தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் பரவியுள்ளது மற்றும் போர்முறைகளிலும் கூட மாற்றம் ஏற்பட்டுள்ளது”
“சர்வதேச அளவில் இந்தியா பெருமை பெற்றுள்ள நிலையில், தொடர்ந்து உண்மைக்கு புறம்பான தகவல்கள் மூலம் தாக்குதலுக்கு உள்ளாகிறது”
“உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ இந்தியாவின் நலன்களுக்கு கேடு விளைவிக்கும் சக்திகள் முறியடிக்கப்பட வேண்டும்”
“தற்சார்பு இந்தியாவுக்கான 'முழு அரசாங்க' அணுகுமுறையைப் போலவே, 'தேசத்தின் முழு' அணுகுமுறையும் தேசத்தின் பாதுகாப்பு
பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் நடைபெற்ற கடற்படை புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தற்சார்பு அமைப்பின் ‘ஸ்வாவ்லம்பன்’ கருத்தரங்கில் இன்று உரையாற்றினார்.
இந்திய கடற்படையில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் ‘ஸ்பிரிண்ட் சேலஞ்சஸ்’ திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், 21-ம் நூற்றாண்டில் இந்திய பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு கொள்கை மிக முக்கியமானது என்று கூறினார்.
புதுமை கண்டுபிடிப்புகள் முக்கியமானதாக உள்ள நிலையில், அது உள்நாட்டில் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான ஆதாரங்களாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் பரவியுள்ள நிலையில், போர்முறைகளிலும் கூட மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார். சர்வதேச அளவில் இந்தியா அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில், தவறான தகவல்கள் மூலம் தாக்குதலுக்கு உள்ளாகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ இந்தியாவின் நலன்களுக்கு கேடு விளைவிக்கும் சக்திகள் முறியடிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், தற்சார்பு இந்தியாவுக்கான முழு அரசாங்க அணுகுமுறையைப் போலவே, தேசத்தின் முழு அணுகுமுறையும் தேசத்தின் பாதுகாப்பிற்கான காலத்தின் தேவையாகும் என்றார்.
இந்திய கடற்படைக்கு உள்நாட்டிலேயே 75 புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், விரைவில் அது நிறைவேற்றப்படும் என்று தாம் நம்புவதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், வாங்குபவர் என்ற நிலையிலிருந்து, கட்டமைப்பவர் என்ற நிலைக்கு இந்திய கடற்படை மாற்றம் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
விடுதலைப் பெருவிழாவை நாடு கொண்டாடிவரும் வேளையில், சுதந்திரம் என்ற இலக்கணத்திற்கு தற்சார்பு என்ற புதிய பரிமாணம் இணைந்துள்ளதாகத் தெரிவித்தார். உணவு தானியங்களில் நாம் தன்னிறைவை மட்டும் அடையாமல், மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக விளங்குவதாகவும் அவர் கூறினார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உலகம் முழுவதும் பல்வேறு மக்களின் உயிரை பாதுகாத்ததாகத் தெரிவித்தார். மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்களையும், நமது விண்வெளி மையம் செலுத்துவதாக அவர் கூறினார்.
பல்வேறு துறைகளில் தற்சார்பை அடைந்தது என்ற நிலையோடு, மற்ற நாடுகளின் தேவைகளையும் இந்தியா நிறைவேற்றி வருவதாக திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு அஜய் பட், பாதுகாப்புத் துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார், கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஆர் ஹரிகுமார், கடற்படை துணை தளபதி வைஸ் அட்மிரல் எஸ் என் கோர்மேட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இரண்டு நாட்களுக்கு இந்தக் கருத்தரங்கு நடைபெறுகிறது.
கருத்துகள்