போட்டி போட்டு கட்சியின் நிர்வாகிகள் நீக்கம் செய்து அதிமுகவின் இரு குரூப் தீவிரம் சட்ட மீறல்களாகவே பார்க்க முடியும்
இடைக்கால பொதுச்செயலாளராக புதிய பதவியை எடப்பாடி கே.பழனிச்சாமி குறிப்பிட்ட கடிதம் மூலம் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களான 5 மாவட்ட செயலாளர்கள் கொண்ட 18 பேரைக் அவர் ஆதரவு கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.
ஓ.பன்னிர்செல்வத்தின் மகனான அ.தி.மு.க வுக்கு உள்ள ஒரே நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், மற்றொரு மகன் ஜெயபிரதீப், மற்றும் புதுச்சேரி மேற்கு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர், அம்மன் வைரமுத்து, சென்னை புறநகர் மாவட்டத் துணை செயலாளர், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, மருது அழகுராஜ், கோவை செல்வராஜ் ஆகியோர் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்ட தாகவும் ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்ட தாகவும் கட்சிக்கு துணை பொதுச் செயலாளர்கள், தலைமை செயலாளர், அமைப்பு செயலாளர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளை எடப்பாடி கேபழனிசாமி நியமித்தார். அ.தி.மு.க. விலிருந்து ஓ.பி.எஸ்., மகன்களான, ரவீந்திரநாத் உள்பட 5 மாவட்ட செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்களை நீக்கம் செய்து எடப்பாடி கே. பழனிச்சாமி கடிதம் அதில்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்- எஸ்.ஏ. அசோகன்.
திருச்சிராப்பள்ளி - வெல்லமண்டி நடராஜன்.
தேனிமாவட்டம் - சையதுகான்.
பெரம்பலூர் -ஆர்.டி. ராமச்சந்திரன்
தஞ்சாவூர் வடக்கு - எம்.ஜி.எம். சுப்பிரமணியன்
ஆகிய மாவட்டச் செயலாளர்களும்,
அ.தி.மு.க, எடப்பாடி கே.பழனிச்சாமி ஆதரவு கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ள 18 பேர் அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கப்பட்டுள்ளதாக வந்த கடிதம் ஒருபக்கம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உள்ள அதிமுக சார்பில் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் 'நீக்கப் பட்டியல்' வெளியிடப்பட்டதில்
பொள்ளாச்சி ஜெயராமன், சி. விஜயபாஸ்கர், பாலகங்கா உள்ளிட்ட நிர்வாகிகள் உள்பட 44 பேரை நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கை குறித்து இறுதியில் இருவரும் நீக்கி நியமனம் செரீப் பின்னர் கட்சி மூன்றாவதாக முதலில் பொதுச்செயலாளர் தேர்வான சசிக்கலா நடராஜன் தரப்பில் வேறு வகையில் இணைப்பு வேளைகள் நடந்து வருகிறது. ஆக மூன்று அணிகள் உள்ளன இதில் இறுதியில் வெல்வது யார் என்பதே இப்போது உள்ள மக்கள் மத்தியில் பேச்சாகும் நிலையில் முன்னால் சட்ட அமைச்சர் பொன்னையன் பேசிய ஆடியோ மத்தியில் பலரும் கே.பி.முனுசாமி குறித்து பலவிதமான பேச்சு உலா வரும் நிலையில்
முன்னர் உள்ளாட்சித்துறை அமைச்சராக கே.பி.முனுசாமி, இருந்த காலத்தில் நகராட்சிப் பகுதிகளில் தெரு விளக்கு அமைக்க, உதிரி பாகங்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் மெகா முறைகேடு நடந்தது. இதில் அரசுக்கு ரூ.3/ கோடி இழப்பு ஏற்பட்டது.
முதல்வராக இருந்த மறைந்த செல்வி.ஜெ. ஜெயலலிதாவுக்கு வந்த புகாரின் அடிப்படையில் தெரு விளக்கு அமைக்க உதிரி பாகங்கள் கொள்முதலில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரணை செய்ய
உத்தரவிட்டு அப்போது நகராட்சி நிர்வாகத்துறையின் தலைமை பொறியாளராக இருந்த வெங்கடாசலம் அனைத்து மண்டல துணை இயக்குனர்களுக்கும் கடிதம் எழுதினார்.
இது தொடர்பான விசாரணையில் அமைச்சராக இருந்த கே.பி.முனுசாமிக்கு உதவியாளர் சேகர் மூலம் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்தது உறுதியானது. இதனால் அரசுக்கு ரூபாய் 3 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது, விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கே.பி முனுசாமி உதிரி பாகங்கள் கொள்முதல் ஊழல் கோப்புகள் முதல்வரின் செயலாளராக இருந்த இராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் மூலம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் மறைத்து விட்டார் என
உளவுத்துறை அதிகாரிகள் முதல்வரின் உயிர் தோழியாக இருந்த சசிகலா நடராஜனிடம் கே.பி.முனுசாமியின் தெருவிளக்கு அமைக்க, உதிரிபாகங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்த விவரங்களை கூறினார்கள் சசிகலா நடராஜன் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு போக, முதலில் கே.பி.முனுசாமியின் உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவி அப்போது பறிக்கப்பட்டது. பிறகு அமைச்சர் பதவியே பறிபோனது தான் கடந்த கால வரலாறு. தற்போது அவர் வேறு ஒரு நபரின் மூளையாக செயல் பட்டு கட்சியின் எடப்பாடி கே.பழனிச்சாமி ஊழல் மற்றும் கொலை கொள்ளை வழக்கில் தீவிரமடையும் நிலையில் கட்சியை கைபற்றி விடுவார் என்பதே தற்போது அந்த கட்சியில் உள்ள பல தொண்டுகள் மத்தியில் விவாதமாக நடக்கின்றன என்பதை நாம் உற்றுநோக்குவது அவசியமாகும்.
கருத்துகள்