நல்லாட்சி நடத்துவதற்கு, குடிமக்கள், தொழில்முனைவோர் மற்றும் அரசாங்கம் இடையே நெருக்கத்தை உருவாக்க மாநாடு
பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்“நல்லாட்சி நடத்துவதற்கு, குடிமக்கள், தொழில்முனைவோர் மற்றும் அரசாங்கம் இடையே நெருக்கத்தை ஏற்படுத்துதல்“ என்று தலைப்பிலான இரண்டு நாள் மண்டல மாநாடு, பெங்களூருவில் நடைபெறுகிறது
“நல்லாட்சி நடத்துவதற்கு, குடிமக்கள், தொழில்முனைவோர் மற்றும் அரசாங்கம் இடையே நெருக்கத்தை ஏற்படுத்துதல்“ என்று தலைப்பிலான இரண்டு நாள் மண்டல மாநாடு, பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த மண்டல மாநாட்டிற்கு, மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத்துறை, கர்நாடக அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியங்கள் மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், கர்நாடக முதலமைச்சர் திரு.பசவராஜ் பொம்மை ஆகியோர், 12-ந் தேதியன்று இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
மத்திய, மாநில, மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் நிர்வாக சீர்திருத்தங்கள் வாயிலாக, அரசுக்கும் மக்களுக்கும் இடையே மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இம்மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம், அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களைத் தொடருதல் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுடன், “குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச ஆளுகை“ என்ற கொள்கைக் குறிக்கோளுடன், செயல்படுவதற்கு, இந்த நெருக்கம் வழிவகுக்கும்.
சாதி, இன, மதம் அல்லது வாக்கு ஆதாயம் கருதாமல், அவசியம் தேவைப்படும் அனைவருக்கும் அல்லது கடைசி வரிசையில் காத்துநிற்கும் கடைசி நபர் வரை அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் ஏழைகளுக்கான திட்டங்களை வடிவமைக்கக் கூடிய புதிய பணிக் கலாச்சாரத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியிருப்பதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்
சாதி, இன, மதம் அல்லது வாக்கு ஆதாயம் கருதாமல், அவசியம் தேவைப்படும் அனைவருக்கும் அல்லது கடைசி வரிசையில் காத்துநிற்கும் கடைசி நபர் வரை அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் ஏழைகளுக்கான திட்டங்களை வடிவமைக்கக் கூடிய புதிய பணிக் கலாச்சாரத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியிருப்பதாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். அதேபோன்று, நவீன இந்தியாவுக்கான புதிதாக உருவாகும் சூழல்களைக் கருத்திற்கொண்டு, சொந்த வாழ்வாதாரத்திற்கு வருவாய் ஈட்டும் திறன் உடையவர்களின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை, பிரதமர் தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ஜிதேந்திர சிங், கடந்த காலங்களில் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத இடங்களில், தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமே அளவுகோலாகக் கொண்டு செயல்படுவதுடன், கடந்த காலங்களில் நீதி மறுக்கப்பட்ட இடங்களில் நீதி வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார். அரசுத் திட்டங்களின் பலன் கிடைக்கச் செய்வதில், வாக்கு வங்கி அரசியல் மட்டுமே, குறிக்கோளாக இருந்த முந்தைய காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி ஆட்சிகளின் கடந்தகால நடைமுறையிலிருந்து, தற்போது பின்பற்றப்படும் நடைமுறை முற்றிலும் மாறுபட்டது என்றும் அவர் தெரிவித்தார். வாக்கு வங்கி அரசியலுக்கு அப்பாற்பட்டு, அனைவருக்கும் நீதி கிடைக்கச் செய்து, அதன் மூலம் யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடக்கூடிய மக்கள் சேவை முறையை, பிரதமர் மோடி வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் நலன் சார்ந்த, பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், உஜ்வாலா திட்டம், நவீன கழிவறை கட்டுதல் போன்ற திட்டங்கள், இதுவரை இந்த வசதிகள் கிடைக்கப்பெறாத அனைத்துக் குடும்பங்களையும் சென்றடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். முந்தைய ஆட்சிக் காலங்களைப் போல் இல்லாமல், சாதி, இனம், மத பாகுபாடின்றி, அனைத்து தரப்பினருக்கும் நலத் திட்டங்களால் பலன் அடைந்தவர்களை, பத்திரிகையாளர்களே காணலாம் என்றும் மத்திய அமைச்சர் திரு.ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
கருத்துகள்