திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த தொகுதிகள் எவை எவை என நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பழனி, கந்தர்வக்கோட்டை, பத்மநாபபுரம், திருவொற்றியூர் மற்றும் கீழ்வேளூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து, வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் சிபிஐஎம் மாநிலக் குழு ஈடுபட்டது. இந்நிலையில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பழனி - என் பாண்டி, கந்தர்வக்கோட்டை - எம். சின்னதுரை, பத்மநாபபுரம் - ஆர். செல்லசுவாமி, திருவொற்றியூர் - எல். சுந்தரராஜன், கீழ்வேளூர் - டி. லதா ஆகியோரை வேட்பாளர்களாக என சிபிஎம் அறிவித்துள்ளது. கந்தர்வகோட்டை தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ ஆக உள்ள சின்னதுரைக்கு அதே தொகுதியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்ற 4 தொகுதிகளிலும் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.அஅதேபோல திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில். தளி, திருத்துறைப்பூண்டி (தனி), ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), திருப்பூர் வடக்கு, பவானிசாகர் (தனி) என ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் இ...
RNI:TNTAM/2013/50347