சந்திரன் ஆகிய மதி சூரியன் ஆகிய ஆதி இரண்டும் ஒரே இராசியில் கூடுவதே அமாவாசை இதில் ஆடி மாதம் துவக்கம்,
தட்சிணாயன புண்ய காலமென்று போற்றுவர். நவகிரகங்களின் நாயகரான சூரிய பகவான், மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குச் செல்கிறார். அதாவது பித்ரு காரகனான சூரிய பகவான், மாத்ரு காரகனான சந்திரனின் வீட்டில் அமர்கிற காலம். ஆக, இந்த மாதத்தில் வரும் ஆடி அமாவாசை முன்னோர்கள் வழிபாட்டுக்கு உகந்த நாளாகும்.
தேவகணங்களுக்கு அதிக பிராதான்யம் உள்ள நாள்களாக உத்தராயனமும், பித்ருக்களுக்கு அதிக பிராதான்யம் உள்ள நாள்களாக தட்சிணாயனம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு விசேஷ நாள்
அமாவாசை அதிகாலையில் எழுந்து, வழிபாடுகளையெல்லாம் செய்து முன்னோர் வழிபாட்டில் ஈடுபடுதல் சிறப்பு. ராகுகாலம், யம கண்டம் ஆகியவற்றை தர்ப்பணத்துக்கு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தர்ப்பணம் கொடுக்க மதிய வேளை மிகவும் சிறந்ததாகும். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்குத் திரும்பி வந்து, மறைந்த முன்னோர்களுக்கு அவரவர் வழக்கப் படி படையலிட்டு வழிபடலாம். அன்று கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுக்களுக்குத் தானமாக்குவத சிறப்பு .ராமேஸ்வரம், கங்கை, காவிரி, பவானி மற்றும் நீர் கூடும் துறை முதலான நீர் நிலைகளுக்கருகில் வசிப்பவர்கள், சென்று நீராடி, புனிதத் தலங்களுக்குச் சென்று வழிபடலாம். இந்த நாளில் நம் முன்னோர்களுக்கான கடனைச் செய்து அவர்களைத் திருப்திப்படுத்தினால், நமக்கு மட்டுமின்றி நம் சந்ததியினருக்கும் மிகப் பெரிய நன்மைகளும் பலமும் கிடைக்கும்.ஆடி அமாவாசை நாளில் பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள் என்பதை வடமொழியில் திலம் என்று கூறுவார்கள். விஷ்ணுவிலிருந்து விஷ்ணு பகவானின் அம்சமாக தோன்றியது எள். இதைத் தானமாகக் கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடும் என்கின்றன புராணங்கள். ஆக, இந்த எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, ஆடி அமாவாசை தினத்தில் பித்ருக்களை - மறைந்துவிட்ட நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் அருளாசிகளைப் பெற்று ஆனந்தமடைவீர்கள் .
கருத்துகள்