புகையிலைப் பொருட்களின் மேல் அட்டையில் புதிய சுகாதார எச்சரிக்கை
சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் (அட்டைப் பெட்டியில் அடைத்தல் மற்றும் லேபிள் ஒட்டுதல்) விதிமுறைகள் 2008-ல் திருத்தங்கள் மேற்கொள்வதன் வாயிலாக அனைத்து வகையான புகையிலை பொருட்கள் மீது இடம்பெற வேண்டிய புதுவகையான சுகாதார எச்சரிக்கைகளை, மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை வெளியிட்டுள்ளது. இந்தத் திருத்த விதிமுறைகள் 01 டிசம்பர் 2022 முதல் நடைமுறைக்கு வரும். இதன்படி, ‘புகையிலை பயன்பாடு வலி மிகுந்த உயிரிழப்பை ஏற்படுத்தும்’ என்ற வாசகத்துடன் கூடிய படம்–1, அது நடைமுறைக்கு வரும் 01 டிசம்பர் 2022 முதல் 12 மாதங்களுக்கு செல்லத்தக்கதாகும்.
படம் – 1-ல் இடம்பெறும் சுகாதார எச்சரிக்கை முடிவடையும் நாளில் இருந்து ‘புகையிலை பயன்படுத்துவோர் சிறுவயதிலேயே உயிரிழக்க நேரிடும்’ என்ற வாசகத்துடன் கூடிய படம்-2 நடைமுறைக்கு வரும். இந்த விதிமுறைகள் மொத்தம் 19 மொழிகளில் www.mohfw.gov.in மற்றும் ntcp.nhp.gov.in வலைதளங்களில் இடம்பெற்றுள்ளன.
கருத்துகள்