நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவு
மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு. புதிய அமைச்சர்களை அறிமுகம் செய்து வைக்க முயலுகையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தார்.
இந்த வருடம் மறைந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும், மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாநிலங்களவை ஒரு மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் தொடர்ந்து நடைபெற்றது
ஜூலை மாதம் 18- ஆம் தேதியில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது முதல் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை, உறுப்பினர்கள் நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் ஜிஎஸ்டி உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து, பதாகைகளுடன் முழக்கமிட்டு தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டதனால் அவை அலுவல நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 25 ஆம் தேதி காலை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்த விழாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் கலந்துக் கொண்டனர்.
அதையடுத்து, பிற்பகலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும் கூடிய போது, மக்களவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களான ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்ததன் தொடர்ச்சியாக மக்களவை உறுப்பினர்களான ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் ஆகியோரை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன்
ஆகிய நால்வரையும் கூட்டத்தொடர் முழுவதும் நீக்கியிருப்பது எதிர்ட்சிகளின் குரலை முடக்குகிற அப்பட்டமான முயற்சி என காங்கிரஸ் கட்சி கருத்து மேலும்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலையில் கைது செய்யப்பட்டு கிங்ஸ்வே கேம்ப் காவல்நிலைத்தில் அடைக்கப்பட்டு இரவு 8 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.மூன்றாவது நாளாக காங்கிரஸ் சோனியா காந்தியை அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைத்துள்ளது. கடந்த நாட்களில் விசாரணையின் போது நேஷனல் ஹெரால்டு, யங் இந்தியா பரிவர்த்தனைகள் கட்சியின் பொருளாளராக இருந்த மோதிலால் வோராவிற்குத் தான் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
ஆவணங்களின் அடிப்படையில் புலன் விசாரணை செய்யத் தக்க குற்றச்சாட்டில் மீண்டும் மீண்டும் நேரடி விசாரணைக்கு உட்படுத்துவது பழி வாங்கும் நடவடிக்கை என்று கருத வாய்ப்புள்ளதெனவும். மேலும் இப்புகாரில் பல சட்ட நுணுக்கச் சிக்கல்களும் உள்ளன என்றும். 8 ஆண்டுகளுக்கு முன்பு முகாந்திரமில்லை என உயர் நீதிமன்றத்தால் கைவிடப்பட்டப் புகாரை தூசி தட்டி எடுத்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் காலத்தில் பயன்படுத்துகிறது எனவும் அரசியல் காரணுங்களுக்காக மட்டுமே.என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது இது குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் 19 நாடாளுமன்ற உறுப்பினர்களை கனத்த இதயத்துடன் தான் இடைநீக்கம் செய்தோமென பியூஷ் கோயல் தகவல் மேலும்
கருத்துகள்