அனுபவத்தின் மூலம் (ஐடிஐ படிக்காமல்) மின்சாரத் திட்ட பணி செய்கின்ற மின் பணியாளர்களுக்கு ஒரு வாய்ப்பு
மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் ஹெல்ப்பர் தேர்வு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி மற்றும் 25 ஆம் தேதிகளில் தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் அனுபவ மின் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் H எனும் தேர்வு நடைபெற உள்ளது .அதனை பயன்படுத்தி தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்று மின் உரிமம் வழங்கும் வாரியத்தின் எச் என்னும் உரிமம் (லைசன்ஸ்) பெற்று மீண்டும் ஐந்தாண்டுகள் கழித்து H to B எனும் உரிமம் பெற்றால்
ஐடிஐ படித்தவர்களுக்குச் சமமான B தகுதிச் சான்றிதழைப் பெறலாம் .
அதை வைத்து மின் உரிமம் வழங்கும் வாரியத்தின் மூலம் இபி லைசென்ஸ் எனும் மின் ஒப்பந்தக்காரர் உரிமம் பெறுதல் எளிதாக அமையும்
ஆதலால் தகுதியான நபர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் பயன் படுத்த அனுபவம் பெற்ற மின் பணியாளர்கள் சங்கத்தின் மூலம் தொடர்பு விவரங்களை பெறலாம் .
என தமிழ்நாடு மின் ஒப்பந்தக்காரர்கள் மின் இணைப்பாளர்கள் மத்திய சங்கம் தகவல் தெரிவித்துள்ளது
கருத்துகள்