நித்தி ஆயோக், அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு பரமேஸ்வரன் ஐயரை வரவேற்றது
நித்தி ஆயோக், அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு பரமேஸ்வரன் ஐயரை வரவேற்றது.
குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் கொண்ட திரு ஐயர், 550 மில்லியன் மக்களுக்கு பாதுகாப்பான துப்புரவை வெற்றிகரமாக கிடைக்கச் செய்த 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்தியாவின் தூய்மை இந்தியா இயக்க அமலாக்கத்திற்கு தலைமை தாங்கியவர்.
“தற்போது மீண்டும் நாட்டிற்கு சேவை செய்ய நித்தி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக கிடைத்துள்ள வாய்ப்பு கௌரவத்திற்குரியது, மகிழ்ச்சிக்குரியது. மாறிவரும் இந்தியாவை நோக்கிய தமது தலைமையின்கீழ், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி மற்றொரு வாய்ப்பை அளித்திருப்பதற்காக நான் மிகந்த நன்றியை தெரிவிக்கிறேன்” என்று திரு ஐயர் கூறினார்.
1981-ன் உத்தரப்பிரதேச தொகுப்பு ஐஏஎஸ் அதிகாரியான திரு ஐயர், அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றியுள்ளார். இவர், 2016-20 காலத்தில் புதுதில்லியில் மத்திய அரசின் குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்தின் செயலாளராக இருந்தார்.
கருத்துகள்