பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022 வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிரதமர் வாழ்த்து
மல்யுத்த வீராங்கனை பூஜா கெலாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு பிரதமர் வாழ்த்து
“பூஜா, உங்களது பதக்கம் கொண்டாடப்பட வேண்டியது, மன்னிப்பு கோரத் தகுந்ததல்ல”
பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தத்தில் தங்கம் வெல்லத் தவறி வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு உணர்ச்சிவசப்பட்டு பேசிய மல்யுத்த வீராங்கனை பூஜா கெலாட்டின் பேட்டியை ட்விட்டர் பதிவாக ஏ.என்.ஐ வெளியிட்டிருந்தது. அதற்கு பதிலளித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, பூஜா கெலாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வாழ்த்து தெரிவித்து, அவரை ஊக்கப்படுத்தினார்.
ட்விட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது:
“பூஜா, உங்கள் பதக்கம் கொண்டாடப்பட வேண்டியது, மன்னிப்பு கோரத் தகுந்ததல்ல. உங்களது வாழ்க்கைப் பயணம் எங்களுக்கு ஊக்கமளிக்கிறது, உங்கள் வெற்றி எங்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது. உங்கள் எதிர்காலம் மிகச் சிறப்பாக உள்ளது... தொடர்ந்து சாதனை புரியுங்கள்.”பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் மதிப்புமிக்க தங்கப் பதக்கம் வென்ற பவினா பட்டேலுக்கு பிரதமர் வாழ்த்து
பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இன் பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் மதிப்புமிக்க தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றிய பவினா பட்டேலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அவர் தெரிவித்ததாவது:
“பாராட்டுக்குரிய பவினா பட்டேல் @BhavinaOfficial, நமக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார். காமன்வெல்த் போட்டிகளில் தமது முதல் பதக்கமாக, பாரா டேபிள் டென்னிஸ் விளையாட்டில் உயரிய தங்கப் பதக்கத்தை அவர் வென்றுள்ளார். அவரது சாதனை, டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்திய இளைஞர்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். பவினாவின் எதிர்கால முயற்சிகளுக்கு என் வாழ்த்துகள்.”குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற ரோஹித் டோகாசிற்கு பிரதமர் வாழ்த்து
பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் ஆடவருக்கான 67 கிலோ குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற ரோஹித் டோகாசிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“ரோஹித் டோகாசின் சாதனையால் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது கடின உழைப்பும், விடாமுயற்சியும், சிறந்த பலன்களை வழங்கியுள்ளன. எதிர்வரும் காலங்களில் மேலும் பல வெற்றிகளை அவர் அடைவார் என்று நம்புகிறேன்.பெண்களுக்கான 76 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பூஜா சிஹாகிற்கு பிரதமர் வாழ்த்து
பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் பெண்களுக்கான 76 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பூஜா சிஹாகிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“திறமையான மல்யுத்த வீரராக பூஜா சிஹாக் முத்திரை பதித்துள்ளார். தமது விடா முயற்சியால் ஏராளமான சவால்களை அவர் எதிர்கொண்டுள்ளார். காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் அவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகள். வருங்காலங்களிலும் இந்தியாவிற்கு அவர் பெருமை தேடித் தருவார் என்று நான் நம்புகிறேன்.ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் 97 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் தீபக் நெஹ்ராவிற்கு பிரதமர் வாழ்த்து
பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் 97 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் தீபக் நெஹ்ராவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“மற்றொரு மல்யுத்த வீரர், இந்தியாவிற்கு கூடுதல் புகழ்! காமன்வெல்த் போட்டிகளில் ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் 97 கிலோ மல்யுத்தப் போட்டியில் தீபக் நெஹ்ரா வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அசாதாரணமான துணிச்சலையும், உறுதித் தன்மையையும் தீபக் வெளிப்படுத்தியுள்ளார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு என் வாழ்த்துகள்புல்வெளி பந்து உருட்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆடவர் அணிக்கு பிரதமர் வாழ்த்து
பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் லான் பவுல்ஸ் எனப்படும் புல்வெளி பந்து உருட்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றதற்காக, இந்திய ஆடவர் அணியின் வீரர்களான சுனில் பகதூர், நவ்நீத் சிங், சந்தன் குமார் சிங் மற்றும் தினேஷ் குமார் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"லான் பவுல்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுனில் பகதூர், நவ்நீத் சிங், சந்தன் குமார் சிங் மற்றும் தினேஷ் குமார் ஆகியோர் குறித்து பெருமிதம் கொள்கிறோம். அவர்களின் குழுப்பணியும் விடாமுயற்சியும் போற்றத்தக்கவை. அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.
கருத்துகள்