முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசியக் கொடி சட்டம் புதிய குறியீட்டின் பிரிவு 2 அனைத்து தனியார் குடிமக்களும் தங்கள் வளாகத்தில் கொடியை பறக்கவிடுவதற்கான உரிமை சுதந்திரம்

இந்தியா சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி, 2002 ஆம் ஆண்டில், இந்தியக் கொடி குறியீடு மாற்றியமைக்கப்பட்டதன்படி, இந்தியக் குடிமக்கள் தங்கள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இந்தியக் கொடியை எந்த நாளிலும் ஏற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டனர், அதற்கு முன்னதாக சுதந்திர தினம் மற்றும் குடியரசுத் தினம் போன்ற தேசிய நாட்களில் மட்டுமே கொடியை ஏற்ற வேண்டும் என்ற விதிமுறை இருந்து வந்தது.

தேசியக் கொடியை கல்வி நிறுவனங்களில் (பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு முகாம்கள், சாரணர் முகாம்கள், முதலியன) கொடியின் மரியாதையை ஊக்குவிக்கும் வகையில் ஏற்றலாம். பள்ளிகளில் கொடியேற்றும் நிகழ்ச்சியின் போது உறுதிமொழியும் ஏற்க வேண்டும்.

ஒரு பொது, ஒரு தனியார் அமைப்பு அல்லது ஒரு கல்வி நிறுவனம் தேசியக் கொடியை அனைத்து நாட்களிலும், சந்தர்ப்பங்களிலும் ஏற்றலாம்/காட்சிப்படுத்தலாம், சடங்கு அல்லது தேசியக் கொடியின் கண்ணியம் மற்றும் மரியாதைக்கு இசைவாக இருக்கலாம்.

புதிய குறியீட்டின் பிரிவு 2 அனைத்து தனியார் குடிமக்களும் தங்கள் வளாகத்தில் கொடியை பறக்கவிடுவதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.

தேசிய கொடியை அவமதிக்கும் செயல்கள்:தேசியக்கொடி பறக்கும் கொடி கம்பத்திற்கு மேல் பூக்கள் அல்லது மாலைகள் அல்லது அடையாளச் சின்னங்கள் உள்ளிட்ட எந்தப் பொருளும் பொருத்தப்படக்கூடாது.


தேசியக் கொடியை மாலையாகவோ, பூங்கொத்தாகவோ, அழகுப்படுத்திய பொருளாகவோ அல்லது எந்தவகையான அலங்காரத்திற்கோ பயன்படுத்தக் கூடாது.

தேசியக் கொடி தரையில் விழவோ, தண்ணீரில் மிதக்கவோ விடக்கூடாது.

தேசியக் கொடி எந்தவிதத்திலும் கிழியும் வகையில் காட்சிப்படுத்தப்படக் கூடாது.

தேசியக் கொடி பறக்கவிடப்படும் கம்பத்தின் உச்சியில் ஒரே சமயத்தில் மற்ற கொடி அல்லது கொடிகள் பறக்கவிடப்படக் கூடாது.

உரையாளரின் மேசை மீது விரிப்பாகவோ, உரையாளரின் மேடை மீதோ தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது.

அலங்கார ஆடையின் பகுதியாக அல்லது சீருடையாக அல்லது எந்தவொரு நபரும் இடுப்புக்கு கீழே அணியும் துணியாக தேசியக்கொடி பயன்படுத்தப்படக் கூடாது.


மெத்தைகள், கைக்குட்டைகள், நாப்கின்கள், உள்ளாடைகள் அல்லது மற்ற ஆடைகளில் அச்சிட்டோ அல்லது பின்னலிட்டோ தேசியக்கொடி வடிவத்தை பயன்படுத்தக் கூடாது.

தனியார் இறுதிச்சடங்குகள் உட்பட எந்த நிலையிலும் தேசியக்கொடியை தொங்கவிடக் கூடாது.

தேசியக் கொடியின் மீது எழுத்துக்கள் எதையும் பதிவு செய்யக் கூடாது.

பொருள்களை மடிக்கவோ, வாங்கவோ அல்லது வழங்கவோ தேசியக்கொடியை பயன்படுத்தக் கூடாது.

எந்தவொரு வாகனத்தின் ஓரப்பகுதி, பின்பகுதி, மேற்பகுதி ஆகியவற்றை மூடுவதற்கு தேசியக்கொடியை பயன்படுத்தக் கூடாது.

தேசியக் கொடி அளவு மற்றும் துணி:

இந்தியாவின் கொடி குறித்த சட்டம் 2002-ஆம் ஆண்டில் திருத்தம் செய்து பிறப்பிக்கப்பட்ட 2021  ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் தேதியிட்ட உத்தரவில், பாலியஸ்டர் அல்லது விசைத்தறி துணியால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடி அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது கைத்தறி, விசைத்தறி, பருத்தி, பாலிஸ்டர், கம்பளி, பட்டு, காதி துணியால் தேசியக்கொடி தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கொடி குறித்த சட்டத்தின் பத்தி 1.3 மற்றும் 1.4-ன்படி தேசியக்கொடி செவ்வக வடிவில் இருக்க வேண்டும். இந்தக் கொடி எந்த அளவினதாகவும் இருக்கலாம். ஆனால், தேசியக் கொடியின் நீளம், அகலத்தின் விகிதம் 3:2 என்பதாக இருக்க வேண்டும்.

தேசியக்கொடியை அரை கம்பத்தில் பறக்க விடும் முறை:

இந்திய அரசின் உத்தரவு இல்லாமல் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கப்படக்கூடாது. அரைக் கம்பத்தில் பறக்க வேண்டிய போது முதலில் கம்பத்தின் உச்சிவரை ஏற்றப்பட்டு அதன் பிறகு அரை கம்பம் வரையில் இறக்கப்பட வேண்டும். அதேபோல தேசியக் கொடியை இறக்கும்போதும், உச்சிவரை ஏற்றப்பட்டு பின்பு முழுவதும் இறக்கப்பட வேண்டும்.

தேசியக்கொடியை எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும்?

இந்திய கொடி குறியீட்டின் 2.2 பத்தியில் குறிப்பிட்டுள்ளவாறு, தேசியக்கொடியின் கண்ணியத்தை கருத்தில் கொண்டு அதை எரித்தோ, அல்லது வேறு வழியிலோ தனிமையில் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

காகித கொடி பொதுமக்களால் அசைக்கப்பட்ட பிறகு அவற்றை தரையில் போடக்கூடாது. தேசியக்கொடியின் கண்ணியத்தைக் காப்பாற்றும் வகையில் தனிமையில் அவை அப்புறப்படுத்தப்பட வேண்டும். 75வது ஆண்டு சுதந்திர தினத்தை நம் வீடுகளில் கொடிகள் ஏற்றியும், அதற்கு உரிய மரியாதையை அளித்தும் ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்...

தேசியக் கொடி செவ்வகமாகவும்,அதன் நீள அகலம் 3:2 என்னும் விகிதத்திலும்,கொடியில் மூன்று வர்ணங்களில் காவி மேல்புறத்திலும் , பச்சை கீழ் புறத்திலும்,இவற்றிற்கு இடையே வெள்ளை நிறமும்,அதில் நீல நிறத்தில் தர்ம சக்கரம் அமையும்படியாக இருக்கும். 1947,ஜூலை 22 இல் நடந்த அரசியல் சாசன நிர்ணய சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்திய தேசியக் கொடி அங்கீகாரம் பெற்றது.இக்கொடி முதன் முதலாக சுதந்திர இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 இல் ஜவஹர்லால் நேருவால் ஏற்றப்பட்டது.

தேசியக் கொடியானது கரும்காவி,கரும்பச்சை,மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களைக் கொண்டது,மூன்று வர்ணப் பகுதிகளும் அளவில் சமமானவை.வெண்பட்டையின் நடுவே கடல் நீல வண்ணம் கொண்ட 24 ஆரங்களை உடைய அசோகச் சக்கரம் ஒன்று உள்ளது.காவி நிறமானது தைரியம் மற்றும் தியாகத்தையும்,வெண்மை நிறம் உண்மை மற்றும் அமைதியையும் ,பச்சை நிறம் நம்பிக்கை,பசுமை,விவசாய செழிப்பு போன்றவற்றை குறிப்பதாக கற்பிக்கப்படுகிறது. நடுவில் இடம் பெற்றுள்ள அசோகச் சக்கரம் வாழ்க்கைச் சுழற்சியை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

கொடியைக் கையாளும் விதிமுறைகள்:

கொடி தயாரிப்பிற்கு என்று பல விதிமுறைகள் உண்டு.சர்வதேச அளவு முறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறை 1968 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 முதல் கொடியின் நீள,அகலம்,நிறங்களின் அளவு,அடர்த்தி,பளபளப்பு,துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத் தன்மையையும் பற்றியும் விவரிக்கின்றது.கொடித்தயாரிப்பில் விகிதாசாரங்கள் மீறுவது மிகப் பெரிய குற்றமாகும்.கொடித்துணியானது காதி என்கின்ற கைத்தறித் துணியில் மட்டுமே இருக்க வேண்டும்.பருத்தி,பட்டு மற்றும் கம்பளி இவற்றில் ஒன்றால் கையினால் நெய்யப்பட்ட கைத்தறித் துணியாகத்தான் இருக்க வேண்டும்.


தேசியக் கொடியை கையாளவும், அதற்கு உரிய மரியாதை செய்யவும் இந்திய தேசியக் கொடி சட்டம் (FlagCode Of India) 2002 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.


இதில் பல்வேறு விதிமுறைகள் உள்ளன.தேசியக் கொடியை எந்த விளம்பரத்திற்கும் பயன்படுத்தக் கூடாது.பொது இடங்களில் தேசியக் கொடியினை கிழித்தல்,எரித்தல், அவமதித்தல் போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும். தேசியக் கொடியை அணியும் உடை,பயன்படுத்தும் கைத்துண்டுகள், கைக்குட்டைகளில் பயன்படுத்தக் கூடாது. தேசியக் கொடி மண்,தரை,தண்ணீரில் படும்படியாக பறக்கவிடக் கூடாது. கொடி கிழிந்த நிலையிலோ.நிறம் மங்கிய நிலையிலோ ஏற்றக்கூடாது.

சூரிய உதயத்திற்கு பின்புதான் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும்.அதே போல சூரிய அஸ்தமனத்திற்குள் இறக்கி வைக்கப்பட வேண்டும்.தலைவர்கள் மறைவின் போது தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும்.தேசியக் கொடிக்கு எந்த வகையிலும் அவதூறு,அவமரியாதை ஏற்படாத வகையில் கையாள வேண்டும்,ஏற்ற வேண்டும்.

தேசியக் கொடியை தங்கள் இஷ்டத்திற்கு ஏற்ற முடியாத நிலை 2002 ஆம் ஆண்டு வரை இருந்தது.இதற்குப் பின்னர் பொது மக்கள் எங்கு வேண்டுமானாலும் தேசியக்கொடியை ஏற்றி மகிழலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இதன் மூலம் இந்தியக் குடிமக்களுக்கு தேசியக் கொடியை தங்கள் வீடுகளில் பறக்கவிடலாம் என்கின்ற உரிமையும் கிடைத்துள்ளது.சுதந்திரம் மற்றும் குடியரசுதினங்களில் கொடி ஏற்றுவதிலுள்ள வேறுபாடுகள்

 முதலாவது:-

ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தில் கொடி  ஏற்றும் போது கொடி கீழிருந்து மேலே கயிற்றால்  இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும் அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு "கொடியேற்றம்" அதாவது Flag hoisting என்றழைக்கப்படும்.,




ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று

கொடிக் கம்பத்தின் உச்சியிலே கட்டப்பட்டிருக்கும். அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு அதாவது கொடி  திறக்கப்பட்டு பறக்கவிடப்படும்  இதை கொடியை பறக்கவிடுதல்  அதாவது (flag unfurling) என்பார்கள்.




இரண்டாவது:-

சுதந்திரம் கிடைத்த போது அரசியல் அமைப்புச் சட்டம் அமுலுக்கு வரவில்லை. அப்போது பிரதமர் தான் நாட்டில் முதல் மனிதராகக் (political head) கருதப்பட்டார். குடியரசு தலைவர் ஒரு (constitutional monarchy), அவர் அப்போது பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளாததால் சுதந்திர தினத்தில் பிரதமர்  கொடி ஏற்றுகிறார். குடியரசுத் தலைவர் மாலையில் வானொலி, தொலைக்காட்சி மூலமாக உரையாற்றுவார்.



குடியரசு தினத்தன்று அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தபடியால்  அரசியல் சட்டத்தின் தலைவர் மற்றும் பாதுகாவலர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் கொடியைப் பறக்கவிடுவார்.


மூன்றாவதாக:-

சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றபடுகிறது

குடியரசு தினத்தன்று டில்லி ராஜ்  பாத்தில் கொடி பறக்கவிடப்படுகிறது. மேலும் சில விபரங்களைப் பார்க்கலாம் இந்தியாவின்  பவளவிழா ஆண்டான 2022 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றுவதற்கான விதிமுறைகளில் தளர்வளித்து ஆகஸ்ட் மாதம்-13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் "20 கோடி இல்லங்களில் மூவர்ணக்கொடியேற்ற வேண்டும்" எனும் திட்டத்தின் படி "வீடுகள் தோறும் தேசியக்கொடி"  ஏற்ற வேண்டுமென பிரதமர் நரேந்திரமோடி விடுத்த அழைப்பு காரணமாக வீடுகள், வணிக நிறுவனங்கள், பொது இடங்கள் மட்டுமின்றி இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் நடைபாதை கடைகள் குப்பைகள் அள்ளும் டிராக்டர் பொதுக் கட்டணக் கழிப்பிடங்களில் உள்ள காண்ட்ராக்ட்டர்கள் வரை என கோட்டை முதல் குடிசை வரை எங்கெங்கு நோக்கினும் அதற்கான செயல்பாடுகள் கடந்த சில தினங்களாக  முன்னெடுக்கப்பட்டன.










ஆனால் தேசியக்கொடிக்கான மரியாதை, அதற்கான உரிய கெளரவம் அளிக்கப்பட்டதா..? என்றால் அது கேள்விக்குறி தான் என்பது ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரியும். மந்திரிகள் வாகனங்களில் பறக்கும் தேசிய கொடி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வாகனங்களில் ஏற்றமுடியாது அது குறித்து விதிமுறைகள் உள்ளன. ஆனால் தற்போது நிலை வேறு இதில் ஒரு உதாரணம் காண்பதென்றால் ஒரு நாட்டின் இராஜா அணியும் உடையை குடிபடைகளும் அணிந்தால் ராஜா யார் கோமாளி யார் என்பதை  கண்டுபிடிக்க முடியாது என கிராம பழமொழி உண்டு.  ஆனால் கடந்த ஆண்டு ராஜா உடைபோல இருந்து இந் ஆண்டு தற்போது எல்லோரும் கையில் வீட்டில் எனக் கலைகட்டியது விதிமுறைகள் மீறி சாய்வாக கொடி கட்டிய பலர். ஆண்டு தோறும் கொடி ஏற்றும் போது சல்யூட் செய்து பழக்கப்பட்ட நமக்கு வீதிக்கு வீதி 50 கொடிகள் வந்த பிறகு என்ன செய்வது என தடுமாற்றம் வந்த நிலையில். தேசிய உணர்வு பெறுகியதா அல்லது கடமைக்கு கட்டப்பட்டதா என்பதே இங்கு எழு வினா.?

ஏனெனில் கைத்தறியில் நெசவு செய்யப்பட்ட காதியின் தேசியக்கொடிகளையே இதுவரை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது தேசபக்தியை வளர்க்கிறோம் என கைத்தறியையும் காதியையும் தவிர்த்து, தேசபக்தி என்கிற பெயரில் யாரையோ திருப்திபடுத்த தேசியக்கொடியை பாலியஸ்டரில் அச்சிட்டு விநியோகம் செய்யும் பணிகளைச் செய்திருப்பதும், தேசியக்கொடிக்கு என்று குறிப்பிட்ட அளவுகள் இருக்கும் போது அது கடைபிடிக்கப்படாமல் ஒவ்வொரு அளவில் தேசியக்கொடி அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டிருப்பதும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளும் விஷயம் தானா.?

அடுத்ததாக 20 கோடி இல்லங்களில் ஆகஸ்ட் 13, 14, மற்றும் 15 ஆம் தேதிகளில் தேசியக்கொடி ஏற்றுங்கள் என பிரதமர் அழைத்ததும் ஓடோடி வந்த "திடீர் தேசபக்தர்கள்" தேசியக்கொடியை கட்சிக் கொடியைப் போல் அவரவர் விருப்பம் போல் பயன்படுத்தி ஏற்றியது தேசியக்கொடி மீதிருந்த மரியாதையை சீர்குலைப்பதாகவே இருந்தது. அது பல் வேறு புகைப்படத்தை நாம் பார்க்க நேர்ந்தது மனதில் உறுத்தல்.

மேலும் நம் தேசத்தின் மூவர்ணக்கொடியை அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடிகளுக்கு அருகிலோ, சாய்வாகவோ பறக்க விடக்கூடாது அப்படி செய்தால் அது கண்டிப்பாக தேசியக்கொடியை அவமதிப்பதாகும் என்கிற விதி அமலில் இருந்தும் கூட பல்வேறு வீடுகளிலும், வணிக நிறுவனங்கள் மற்றும் வாகனங்களிலும் கட்சி கொடி போல் சாய்வாகவே பறக்க விடப்பட்டிருந்ததும், அதனை யாரும் கண்டு கொள்ளாமல் இருந்ததும் வேதனையிலும் வேதனை.

அதற்கு உதாரணமாக இன்று கண்டு (16.08.2022) காலையில் சென்னை சர்மா நகர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் (இது தமிழ்நாடு ஆந்திரப் பிரதேசம் செல்லும் பிரதானச்சாலை, எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலை) நடுவில் வரிசையாக உள்ள மின்விளக்குக் கம்பங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) கொடிகளுக்குக் கீழே தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளதை கண்ட போது பலருக்கு மனம் வலிக்கவே செய்தது. ஆனால் அவ்வழியே காவல்துறையினரின் வாகனங்கள் பலமுறை ரோந்து சென்றும் கூட நடவடிக்கை இல்லை 

மஹாத்மா என்று அழைக்கப்படும் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பன்டிதர் ஜவகர்லால் நேரு, ஜான்சி ராணி லக்ஷ்மி பாய்,பாலகங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே,வ.உ.சிதம்பரம் பிள்ளை, பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர், மகாகவி சுப்பிரமணிய பாரதி, மாமன்னர் பூலித்தேவர் பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன்,  மன்னர் பிரதானிகள் மருதுபாண்டியர்கள் வீரமங்கை வேலுநாச்சியார் என எண்ணிலடங்கா நம்  முன்னோர்கள் இரத்தம் சிந்தி மிதவாதத்தாலும், தீவிரவாதத்தாலும் பெற்றுத் தந்த சுதந்திரத்தை வெறும் ஒரு நாள் விளம்பர வெளிச்சத்திற்காக பயன்படுத்தப்படுவது தான்கொடி வணக்கப் பாடல் தான் நம் நினைவுக்கு வந்தது நாம் பள்ளியில் படித்த போது பாடிய வரிகளில் கூட பல திருத்தங்கள் இருந்தபோதும் நம் நினைவுக்கு இன்னும் வரும் பாடல் தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டில்-மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடலிது.                    சரணம்:-               "தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத்

தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

பல்லவி:-

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன்

உச்சியின் மேல் வந்தே மாதர மென்றே

பாங்கி னேழுதித் திகழும் -செய்ய

பட்டொளி வீசிப் பறந்தது பாரிர்!

பட்டுத் துகிலென லாமோ?-அதிற்

பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று

மட்டு மிகுந்தடித்தாலும் -அதை

மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம்(தாயின்)

இந்திரன் வச்சிர மோர்பால்-அதில்

எங்கள் துருக்க ரிளம்பிறை யோர்பால் (தாயின்)

மந்திர நடுவுறத் தோன்றும் -அதன்

மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?(தாயின்)

கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர் -எங்கும்

காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்

நம்பற் குரியரவ் வீரர்-தங்கள்

நால்லுயி ரீந்துங் கொடியினைக் காப்பார்.(தாயின்

அணியணி யாயவர் நிற்கும்-இந்த

ஆரியக் காட்சியோ ரானந்த மன்றோ?

பணிகள் பொருந்திய மார்பும் -வீறற்

பைந்திரு வோங்கும் வடிவமுங் காணீர்!(தாயின்)

செந்தழ்நாட்டுப் பொருநர் -கொடுந்

தீக்கண் மறவர்கள் , சேரன்றன் வீரர்

சிந்தை துணிந்த தெலுங்கர் -தாயின்

சேவடிக் கேபணி செய்துடு துளுவர் .(தாயின்)

கன்னட ரொட்டியரோடு -போரிற்

காலனு மஞ்சக் கலக்கு மராட்டர்

பொன்னகர்த் தேவர்க் கொளப்ப- நிற்கும்

பொற்புடை யாரிந்து ஸ்தானது மல்லர். (தாயின்)

பூதல முற்றிடும் வரையும் -அறப்

போர்விறல் யாவும் மரப்புறும் வரையும்

மாதர்கள் கற்புள்ள வரையும் -பாரில்

மறைவரும் கீர்த்திகொள் ராஜபுத்ர வீரர் (தாயின்)

பஞ்ச நததுப் பிறந்தோர் -முன்னைப்

பார்த்தன் முதற்பலர் வாழ்ந்த நன் னாட்டார்

துஞ்சும்பொழுதினுந் தாயின் -பதத்

தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும் (தாயின்)

சேர்ந்ததைக் காப்பது காணீர் - அவர்

சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!

தேர்ந்தவர் போற்றும் பரத -நிலத்

தேவி துவஜம் சிறப்புற வாழ்க (தாயின்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த