முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோகுலாஷ்டமிக்கும் கிருஷ்ண ஜெயந்திக்கு மான் வேறுபாடுகள்

ஜென்மாஷ்டமியன்று மக்களுக்கு பிரதமர் வாழ்த்துகளை தெரிவித்தார் 


ஜென்மாஷ்டமியையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்

பிரதமர் பதிவிட்ட டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

"நாட்டு மக்கள் அனைவருக்கும் மங்கலகரமான ஜென்மாஷ்டமியை முன்னிட்டு இனிய நல்வாழ்த்துக்கள். இந்த பக்தி மற்றும் உற்சாகத்திருவிழா அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரட்டும். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!" என் பதிவிட்ட நிலையில் நாடுமுழுவதும் கிருஷ்ணன் ஜெயந்தி விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி என்று கண்ணன் பிறந்த விழா கிருஷ்ண ஜன்மாஷ்டமி  ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி திதி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் நடக்கிறது. கிரெகொரியன் நாட்காட்டியில் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். அதை கோகுலாஷ்டமி என தென்னிந்தியாவில் கொண்டாடப்படுகிறது.இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. 1982 ஆம் ஆண்டு முதல் தமிழ்க் அரசு பொது விடுமுறை அளித்துள்ளது.

வட இந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி  இராச லீலா மற்றும் தகி அண்டி (தயிர்க் கலசம்) என வட இந்தியாவில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ராசலீலா என்பது கிருட்டிணனின் இளமைக்கால வாழ்வை, கோகுலத்தில் கோபியர்கள் எனப்படும் இளம்பெண்களுடன் விளையாட்டுக்களை நடிப்பதாகும். மகாராட்டிரத்தில் பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணைத்தாழியை சிறுவர்கள் உறியடித் திருவிழா (கோவிந்தாக்கள்) நாற்கூம்பு (பிரமிடு)அமைத்து மேலேறி அதனை உடைப்பதாகும். அரசியல்கட்சிகளும், வணிக நிறுவனங்களும் புரவல் நல்கும் இவ்விழாக்களில் வெண்ணைத்தாழியை அடைந்தவர்களுக்கு பெரும் நிதிப் பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறு கோவிந்தாக்கள் கூம்பின் மேலேறும் போது, தண்ணீர் பீய்ச்சி அடித்து, அவர்களை ஏறவிடாது தடுப்பதும் விளையாட்டை ஆர்வமிக்கதாக ஆக்குகிறது.கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன? இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பது குறித்து அறியலாம். 

கோகுலாஷ்டமி, கிருஷ்ணருடைய பிறந்தநாள். உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பக்தர்கள் கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். இதில் இரண்டு விதமான விஷயங்களை முதலில் நாம் பார்த்துவிடலாம்.

ஆவணி மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி இரவு தங்கி இருந்தால் அது கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. இன்னொன்று அதே தேய்பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் ரிஷப லக்னமும் சேர்ந்து வருவது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும். சிவன் சம்பந்தமான வழிபாட்டை பிரதானமாக கொண்டவர்கள் கோகுலாஷ்டமி என்றும் - பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்றும் கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்டாடுவார்கள்.

இரு விதமான ஆகமங்களில் பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்களுக்கு 2 ஆகமங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்று வைகானச ஆகமம், இன்னொன்று பாஞ்சராத்ர ஆகமம். வைகானஸ ஆகமத்திற்கு அஷ்டமி பிரதானமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பாஞ்சராத்ர ஆகமம் அஷ்டமியினுடைய மிச்சமும் ரோகினி நக்ஷத்ரத்தினுடைய மிச்சமும் - முக்கியமாக சூரிய உதயம் கழிந்து 2 நாழிகைகள் மேற்சொன்ன அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரமும் இருந்தால் அதை பாஞ்சராத்திர ஆகம கிருஷ்ண ஜெயந்தியாக எடுத்துக் கொள்வார்கள். ஸ்ரீ வைஷ்ணவ ஜெயந்தி அதாவது வைஷ்ணவ கிருஷ்ண ஜெயந்தி என்று சொல்லப்படுவதும் பாஞ்சராத்திர ஜெயந்தி தான்.

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கொண்டாடும் இடங்கள் பிருந்தாவனம், மதுரா, கோகுலம், துவாரகை, குருவாயூர், உடுப்பி, பூரி ஜெகன்நாத், பண்டரிபுரம் மற்றும் ஏனைய பெருமாள் ஆலயங்களில் மிகவும் விசேஷமாக விண்ணும் மண்ணும் வியக்கும் வண்ணம் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த கிருஷ்ண ஜெயந்தியில் வழுக்குமரம் ஏறுவதையும் உறியடி திருநாளாக உறியடி அடிப்பதையும் மக்கள் கிருஷ்ணருடைய விளையாட்டாகக் கொண்டு விளையாடுகிறார்கள். இந்த கண்ணன் பிறந்தநாள் வீடுகளில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை. அன்றைய தினம் வீட்டினை சுத்தமாக்கி மலர்களினால் அலங்கரித்து, கோலமிட்டு, கையில் வெண்ணெயுடன் தவழும் குழந்தை கண்ணனுடைய படத்தை வைத்து அலங்கரித்து, வாசல் முதல் சுவாமி வரை உள்ள இடம் வரை சிறுசிறு பாதங்கள் வரைவது வழக்கம்.

அரிசி மாவினால்  பாதம் போடுவது வழக்கம்  அதற்கு காரணம் உண்டு. கோகுலத்தில் கண்ணன் தோழர்களுடன் கோபியர் வீடுகளில் வெண்ணை திருடும் போது அவசரத்தில் கீழே சிதறிய வெண்ணையில் கண்ணனின் மலர் பாதங்கள் வீடு முழுவதும் வெண்ணெய் ஆனது. அதனால் தான் அந்த காலத்தில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் மக்கள் வெண்ணெயினால் பாதங்கள் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அந்த காரணத்தினாலேயே பின்னாட்களில் அரிசி மாவினால் கோலம் அதாவது பாதம் போடுவதை வழக்கமாக்கி இருக்கிறார்கள்.

இன்று பஜனை பாடல்கள் பாடுவது மிகச்சிறப்பு

ஒவ்வொருவர் வீட்டிலும் கண்ணன் பிறந்ததாகவே தோன்றும் வண்ணம் தோற்றமளிக்கும் படி சிறப்பாக கொண்டாடப்படுவதை நாம் காணலாம். இந்த கிருஷ்ண ஜென்மாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி) அன்று கிருஷ்ணர் அஷ்டோத்திரம் - விஷ்ணுசஹஸ்ரநாமம் இதையெல்லாம் பாராயணம் செய்வது நன்மை தரும். பஜனை பாட்டு என்று வாத்தியங்களுடன் இன்னிசை பாடல்கள் பாடுவதும் மிகச்சிறப்பு. சிறு குழந்தைகளுக்கு பிரசாதம் கொடுப்பதும் வந்திருக்கக்கூடிய விருந்தினர்களுக்கு தாம்பூலம் கொடுப்பது மிக விசேஷமானதாகும்.

கோகுலாஷ்டமி பற்றி புராணக் கதை

இப்போது நாம் கோகுலாஷ்டமி பற்றி புராணக் கதைகளை பார்க்கலாம். ஒருமுறை நாரத முனிவர் உலக நன்மைக்காக சத்தியலோகம் சென்று பிரம்மதேவரிடம், ”பிரம்ம பிதாவே ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று விரதம் அனுசரிக்கும் முறையையும் விரதத்தை ஏற்றி செய்தவர்களின் பலன்களையும் விரத மகிமையையும் மகத்துவத்தையும் பற்றி நான் அறிய விரும்புகிறேன். தயவுகூர்ந்து இதைத் தாங்கள் சொல்ல வேண்டும்” என்றார்.

அதற்கு பிரம்மதேவர் தன் குழந்தையாகிய நாரதரிடம் இந்த பூஜையை பற்றி சொல்ல ஆரம்பித்தார். இந்த பூஜையானது சிவ-விஷ்ணு பக்தர்களும், பெண்களும், ராஜாக்களும் ஜாதி மத பேதமின்றி அனுஷ்டித்து பகவானுடைய அருளுக்கு பாத்திரமாக தோடு பாவங்கள் விலகி முடிவில் வைகுண்ட பதவியை அடைவார்கள் என்பதாகும். இந்த விரதம் கலியுகத்தில் ஜனங்களுக்கு நேரடியான எல்லா பாவங்களையும் அழிக்கக்கூடியது. நன்மைகளையும் கொடுக்கக்கூடியது.

கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை  நினைத்த அளவில் 7 ஜென்மங்களில் செய்த பாவங்கள் நாசமடையும். ஜெயந்தி தினத்தில் விரதம் ஏற்று உபவாசமிருந்து பூஜை செய்தபின் மகா பாவங்கள் நீங்குவதோடு அஸ்வமேத யாகமும் கீர்த்தனங்கள் செய்த பலனும் ஆயிரம் காராம் பசுக்கள் ஆயிரக்கணக்கான குதிரைகள் யானைகள் செய்த தானங்களை செய்த பலனும் அளவற்ற ஆபரணங்கள் குருஷேத்திரத்தில் தானம் கொடுத்த பலனும் கோடி கோதானம் தன் எஜமானனுக்கு சந்தேகத்தால் செய்த தொண்டுகள் ஏற்படும் 

பவுர்ணமி அமாவாசை தினங்களில் பெரியவர்களை உத்தேசித்து செய்த புண்ணிய நதியில் நீராடியது மற்றும் தர்ப்பணங்கள் செய்த புண்ணியம் கிடைக்கும்.  இந்த விரதத்தின் மூலமாக நமது எல்லா கோரிக்கைகளும் நிறைவேறும். ஆகையால் கிருஷ்ண பெருமான் முன் பக்தியோடு மூன்றே முக்கால் நாழிகை பூஜை செய்ய அவர்களுடைய பாவங்களெல்லாம் விலகும்.

அதிலும் ஆவணி மாதம் அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திரத்தில் இந்த விரதத்தை ஏற்றுச் செய்தால் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலகி போகும். மேலும் தர்ம அர்த்த காம மோக்ஷம் எனும் நான்கு வித புருஷார்த்த பலன்கள் நமக்கு கைகூடிவரும்” என்று பிரம்ம பிரான் கூறுகிறார்.

கிருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று காலை வீட்டினை தூய நீரினால் அலம்பி விட வேண்டும்.  சுத்தம் செய்தபின் வீட்டில் வண்ண கோலங்கள் இட்டு நம்மால் முடிந்த கிருஷ்ணருடைய சிலை தங்கம் அல்லது வெள்ளி அல்லது பஞ்சலோகத்தால் ஆன  கிருஷ்ணர் விக்ரகத்தை வைத்து அல்லது கிருஷ்ணனுடைய படத்தை வைத்து அதற்கு அலங்காரம் செய்து ஆவாகனம் செய்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

குழந்தையில்லாதவர்கள் இந்த பூஜை செய்தால் கிருஷ்ணரே பிறப்பார் என்பது நம்பிக்கை

பலவிதமான பக்ஷணங்கள் - வெண்ணை அனைத்து விதமான பழங்கள் இவையெல்லாம் நிவேதனம் செய்து இரவு பஜனை பாட்டு வாத்தியங்களுடன் நாம் பூஜிக்கவேண்டும். மறுநாள் காலையில் சுத்தமாக நீராடி அந்த பூஜையை நாம் முடித்து விட்டு நம்மால் முடிந்த பிரசாதங்களை அருகில் இருக்கக்கூடிய சிறுவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டும். இந்த கிருஷ்ண ஜெயந்தியை பொறுத்தவரை சந்தான கோபால ஹோமம் செய்வது ரொம்ப ரொம்ப விசேஷம். அதுவும் முக்கியமாக குழந்தையில்லாதவர்கள் இந்த ஹோமத்தை செய்தால் கண்டிப்பாக கிருஷ்ணரே வந்து பிறப்பார் என்பது ஒரு நம்பிக்கை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

பதிவு செய்யும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் கட்டாயம் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை

ஆவணங்கள் பதிவு செய்யும் போது எழுதிய பத்திரங்களின் கடைசி பக்கத்தில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால் பதிவு செய்த பத்திரப் பதிவு செல்லாது      அதோடு தற்போது அவரது புகைப்படம் இணைப்பு வேண்டும். கடைபிடிக்காத ஆவண எழுத்தர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை   பத்திர பதிவுத்துறைமின் சுற்றறிக்கை முழு விபரம்‌ பத்திரப் பதிவு செய்யும் ஆவணங்களில் பதிவு ஆவண எழுத்தர் பெயர், உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால், அந்த பத்திரப்பதிவு செல்லாது. தமிழகத்தில் போலியான பத்திரங்கள் பதிவாவதைத் தடுக்க மாநில பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அதில், ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வழக்குறைஞர் பார் கவுன்சில் பதிவு எண் பெயர் மற்றும் உரிமம் எண் உடன் புகைப்படம் இணைத்து பதிவு செய்ய வேண்டும். ஆவண எழுத்தரின் புகைப்படமும் அதன் கீழ் அவரது கையொப்பமும் வேண்டும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ள இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் மாதிரிப் படிவம் ஒன