அதிமுகவின் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாதென்று அறிவிக்கக் கோரியும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,
அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்தலாம் என்று தீர்ப்பளித்தார். அதன்படி, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி பொதுக்குழுவை நடத்தி, இடைக்காலப் பொதுச் செயலாளரெனக் கூறிவந்தார். அதை எதிர்த்து எதிர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே இரண்டு வாரங்களில் விசாரித்துத் தீர்வு காண உத்தரவிட்ட பின்னர் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்தலாம் என்று தீர்ப்பளித்தார். அதன்படி, ஈபிஎஸ் பொதுக்குழுவை நடத்தி, இடைக்காலப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார். இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே 2 வாரங்களில் விசாரித்து தீர்வு காண உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதி கிருஷணன் ராமசாமியிடம் மீண்டும் பட்டியலிடப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி ஓபிஎஸ், வைரமுத்து ஆகியோர் முறையிட்டனர்.
இதையடுத்து இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ், வைரமுத்து தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஆகஸ்ட் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் விசாரித்தார். இரண்டு நாட்களும், இரு தரப்பும் காரசாரமான வாதங்களை முன்வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டிருந்த வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாக, உயர் நீதிமன்றம் வழக்கில் பட்டியல் உள்ளது தெரிவிக்கின்றன. இதனால், அதிமுக இரு தரப்பினருமே மிகுந்த எதிர்பார்ப்போடு நாளைய தினத்தை எதிர்நோக்கியுள்ளனர். அதிமுகவின் தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எப்படியும், எந்தத் தீர்ப்பு வந்தாலும், எதிர் தரப்பு மீண்டும் மேலே முறையீடு செய்யும் என்பது அனைவரும் அறிந்தாலும் கூட நாளை வரப்போகும் தீர்ப்பு, எதிர்கால விசாரணைகளுக்கான திசைகாட்டியாகும் என்ற சூழ்நிலை காரணமாக சுதந்திர தின விழா ஆளுநர் வழங்கும் விருந்தை புறக்கணிப்பு செய்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மீது அதிருப்தியில் எடப்பாடி கே. பழனிசாமி இருக்கும் காரணம்; ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் கூட்டணியிலிருந்து வெளியேற திட்டம் உள்ளதாக பேசும் எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியில் முக்கியத்துவம் கொடுப்பதால், கோபத்தில் ஆளுனர் விருந்தை புறக்கணித்து விட்டதுடன் அதேநேரத்தில், நீதிமன்றத்தில் அதிமுக கட்சி விவகாரம் தனக்கு சாதகமாக வரும் வரை பொறுத்திருந்து, கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவை எடுக்கலாம் என ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில், சுதந்திர தின விழாவையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளித்தார். இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ், தமாகா ஆகிய கட்சிகளோடு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் பங்கேற்றார். ஆனால், இந்த விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியும், அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள்களும் கலந்துகொள்ளவில்லை.
அவர், சென்னையில் இருந்தும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடப்பட்டதற்காக, தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி விருந்துக்கு ஏற்பாடு செய்தார். ஆனால், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் கவர்னர் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகக் கூறி, இந்த விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது. விருந்தில், எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுமென்றே கலந்துகொண்டார். ஆனால், இந்த விருந்தை அவர் புறக்கணித்துள்ளார். அவரது அரசியல் எதிரணியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். இதற்கு முக்கிய காரணம், கடந்த சில நாட்களாக பாதிய ஜனதா கட்சியின் மீது எடப்பாடி கே பழனிசாமி கடும் அதிருப்தியில் உள்ளதாகத் தெரிகிறது
சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை வரப்போகும் தீர்ப்பு அதிமுக மற்றும் தமிழக அரசியலில் அடுத்த அதிரடி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்