ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறையால், ஓய்வூதியம் பெறுபவர்களின் “வாழ்க்கை வசதி”க்காக, ஒருங்கிணைந்த ஓய்வூதியதாரர்களுக்கான இணையதளம் தொடக்கம்
இந்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை செயலாளர் திரு.வி.சீனிவாசன் தலைமையில், வங்கியாளர்களுக்கான இரண்டுநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று அமிர்தசரசில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. வி. சீனிவாசன், ஓய்வூதியதாரர்களுக்கு தடையின்றி ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்தார். இதற்காக ஓய்வூதியதாரர்களுக்கான இணையப்பக்கம் செயல்பட்டு வருவதாகவும், இந்த இணையப்பக்கம் பல்வேறு வங்கிகளின் ஓய்வூதிய இணையப்பக்கங்களை ஒருங்கிணைப்பதாகவும், ஓய்வூதியம் பெறுவோர், அரசு மற்றும் வங்கிகளிடையே தடையற்ற தொடர்புகளை ஏற்படுத்த செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கருத்துகள்