ஆம்னி பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு!
சேலத்தில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து விபத்து காரணமாக 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சேலத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து பெத்தநாயக்கன்பாளையம் கிராமம் அருகே சென்றது அங்கு சிலரை ஏற்றுவதற்காக சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்றபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஆம்னி பேருந்தில் பின் பக்கம் மோதியதில் லக்கேஜ் ஏற்றிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் திருநாவுக்கரசு (வயது 65), ரவிக்குமார் (வயது 42), செந்தில்வேலன் (வயது 44), சுப்பிரமணி மற்றும் பேருந்தின் கிளீனர் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த விஜயா (வயது 60) என்ற பெண்ணை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மிகுந்த காயங்களுடன் மீட்கப்பட்டவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அரசு மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பாகவே விஜயா உயிரிழந்தார். உயிரிழந்த விஜயா உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ளது. மேலும் காயமடைந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் சேலம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உள்ளிட்டோர் விபத்து நடந்த பெத்தநாயக்கன்பாளையம் கிராமம் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்த இடத்தில் நேரில் சென்று விபத்து குறித்து பார்வையிட்ட நிலையில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சேலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கருத்துகள்