இராஜஸ்தான் மற்றும் குஜராத் எல்லையில் இருந்து, சந்தல்பூர் வரையிலான கட்டுப்படுத்தப்பட்ட 6 வழி பசுமை சாலைத் திட்டம்
இராஜஸ்தான் மற்றும் குஜராத் எல்லையில் இருந்து, சந்தல்பூர் வரையிலான
கட்டுப்படுத்தப்பட்ட 6 வழி பசுமை சாலைத் திட்டம் தேசிய நெடுஞ்சாலை 754ஏ-வின்கீழ், ரூ.2,030 கோடி செலவில் நடைபெறுகிறது
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி, ராஜஸ்தான்/குஜராத் எல்லையில் இருந்து, சந்தல்பூர் வரையிலான கட்டுப்படுத்தப்பட்ட 6 வழி பசுமை சாலைத் திட்டம், தேசிய நெடுஞ்சாலை 754ஏ-வின்கீழ், ரூ.2,030 கோடி செலவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
பாரத்மாலா - பரியோஜனா திட்டத்தில் முதல்கட்டத்தின்கீழ், குஜராத்தில் உள்ள அமிர்தசரஸ் - ஜாம்நகர் பொருளாதார வழித்தடத்தின் ஒருபகுதியான இந்த சாலை ரூ.2,030 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த திட்டம் நிறைவடைந்தால், இந்த பகுதியிடையேயான பயண நேரம் 2 மணி நேரமும், பயண தூரம் 60 கிலோ மீட்டராகவும் குறையும்.
மாசு அளவை குறைப்பது, சாலையின் நடுவே சுற்றுச்சூழலை வளப்படுத்துவதுடன், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு இது உதவும் என நிதின் கட்கரி தெரிவித்தார்.
பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையின்கீழ், இந்தியாவை உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மையமாக மாற்றுவது, சிறந்த இணைப்பு மற்றும் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மூலம் இந்தியாவை மேம்படுத்துவதில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் கட்கரி கூறினார்.
கருத்துகள்