சென்னை தியாகராயநகரில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம்
சென்னை தி.நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சிவஞானம் சாலை, சென்னை 600 017 என்ற முகவரியில் 28.09.2022 அன்று மாலை 4.00 மணியளவில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது புகார்களை கையொப்பமிட்ட கடிதத்தில் கீழ்கண்ட விவரங்களோடு-
பதிவு தபால் (பதிவு செய்யப்பட்ட தேதி), பார்சல், காப்பீடு, மணியார்டர், அனுப்புநர் மற்றும் பெறுநர் முகவரிகள் போன்ற தகவல்களுடன் அனுப்பவும். பொதுமக்கள் சேமிப்பு வங்கி கணக்கு, பணபரிவர்த்தனை சான்றிதழ் தொடர்பான புகார்களும் அனுப்பலாம். புகார்களை கீழ்கண்ட தபால் நிலையங்களுக்கு தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் Email-dochennaicitycentral@indiapost.gov.in மூலமாகவோ அனுப்பலாம்.
1. தி.நகர் தலைமை அஞ்சல் அலுவலகம், சென்னை 600 017
2. மயிலாப்பூர் தலைமை அஞ்சல் அலுவலகம், சென்னை 600 004
3. சூளைமேடு அஞ்சல் அலுவலகம், சென்னை 600 094
4. ராயப்பேட்டை அஞ்சல் அலுவலகம், சென்னை 600 014
5. கிரீம்ஸ் ரோடு அஞ்சல் அலுவலகம், சென்னை 600 006
6. தேனாம்பேட்டை அஞ்சல் அலுவலகம், சென்னை 600 018
7. நுங்கம்பாக்கம் மண்டல வளர்ச்சி அலுவலகம், சென்னை 600 034
8. கோபாலபுரம் அஞ்சல் அலுவலகம், சென்னை 600 086
9. திருவல்லிக்கேணி அஞ்சல் அலுவலகம், சென்னை 600 005
10. தி.நகர் வடக்கு அஞ்சல் அலுவலகம், சென்னை 600 017
11. தி.நகர் தெற்கு அஞ்சல் அலுவலகம், சென்னை 600 017
12. இந்தி பிரச்சார சபா அஞ்சல் அலுவலகம், சென்னை 600 017
13. மந்தவெளி அஞ்சல் அலுவலகம், சென்னை 600 004
14. விவேகானந்தா கல்லூரி அஞ்சல் அலுவலகம், சென்னை 600 004
15. சாஸ்திரி பவன் அஞ்சல் அலுவலகம், சென்னை 600 006
16. டிபிஐ வளாகம் அஞ்சல் அலுவலகம், சென்னை 600 006
17. தேனாம்பேட்டை மேற்கு அஞ்சல் அலுவலகம், சென்னை 600 006
18. நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை சென்னை 600 034
19. லயோலா கல்லூரி, சென்னை 600 034
20. லாயிட்ஸ் எஸ்டேட், சென்னை 600 014
21. முதன்மை கணக்காளர் பொது அஞ்சல் அலுவலகம், சென்னை 600 018
22. சேப்பாக்கம் அஞ்சல் அலுவலகம், சென்னை 600 005
23. சென்னை பல்கலைக்கழகம் அஞ்சல் அலுவலகம் சென்னை 600 005
24.பார்த்தசாரதி கோயில் அஞ்சல் அலுவலகம், சென்னை 600 005
சென்னை மத்திய கோட்டம், முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மேஜர் திவ்யா த. வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள்