முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாமன்னர் காத்தப்ப பூலித்தேவரின் வீரமும் நினைவும் போற்றப்படும்.

1715 ஆம் ஆண்டு பிறந்த மாமன்னர் காத்தப்ப பூலித்தேவரின்


  வீரமும் நினைவும் போற்றப்படும். 



வேலூர் சிப்பாய் கலகம் அல்லது புரட்சி ஜூலை மாதம் 1806 ஆம் ஆண்டு. அதில் 200 ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனியின் போர் வீரர்களும் 600 தென் இந்திய சமஸ்தான சிப்பாய்களும் கொல்லப்பட்டனர்.

ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிரான முதல் முழக்கம் ஒலித்தது பூலித்தேவர் கோட்டையிலே என்பது தான் நம் இந்தியா நாட்டின் சுதந்திர போராட்ட வரலாறு. சங்கரநயினார் கோமதி அம்மாளின் ஆசியோடு, ஆதிசிவனின் துணையோடு வெள்ளையனுக்கு எமனாக தன் இறுதி மூச்சுவரை வாள் வீசிய மறப்புலி. துரோகம் சூழாதிருந்தால், காலம் கைகூடி அவர் வென்றிருந்தால், மதுரையை மீட்ட ரெண்டாம் சுந்தரபாண்டிய தேவர் என பெரும்புகழோடு இருந்திருப்பார் இந்த வரகுணன் மைந்தன், கயல்கொடி வேந்தன், பூலி மாறனான "ஆபத்துகாத்தான் காத்தப்ப பூலித்துரை பாண்டியன்".

திருக்குற்றாலநாதர் ஈசன் கோவிலில் உள்ள கல்வெட்டு விவரப்படி பிற்கால தென்காசி பாண்டியனான "இறந்த காலம் எடுத்த" அழகன் பெருமாள் சீவல வரகுணராம பாண்டிய குலசேகர தேவரின் காலம் என்பது சக வருடம் 1675 இது கிபி 1753க்கு சமமான ஆண்டு. நான்காம் வரகுண காத்தப்ப பூலித் தேவரின் காலம் கிபி 1715-1767 திருநெல்வேலி சீமையில் 1750களில் வாழ்ந்த இப்பாண்டியர்களை மறைத்து, மறந்து எல்லா சாதியும் பாண்டிய மன்னனுக்கு சாதி சர்டிபிகேட் கொடுத்து கதை எழுதி வருவது வேடிக்கையாக உள்ளது. 

1750களில் அவரவர் நிலையை அறிந்து வரலாறு பேசினாலே போலி வரலாறு அடிபட்டு விடும். இவர் "மதுரையை மீட்க முயன்ற ரெண்டாம் சுந்தர பாண்டிய தேவர்"
Source:- 
பாண்டியர் வரலாறு (முதல் பாகம்)



ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ராணுவ தளபதி, மெட்ராஸ் மாகாண கவர்னர் பெண்டிங் பிரபு  இலண்டன் உத்தரவு திருப்பி அழைக்கப்பட்டனர்.  சிப்பாய்க் கலகத்திற்கு (1857) ஒரு நூற்றாண்டிற்கு முன்பே அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப் போராட்டம் தென் தமிழகத்தில் தொடங்கி விட்டது. அந்த வரிசையில் இந்திய மண்ணின் முதல் சுதந்திரப் போர் வீரர்: மாமன்னர் காத்தப்ப இராஜா பூலித்தேவர் 

தாமிரபரணிக் கரையின் நெல்லைப் பகுதியில் சங்கரன் கோவில் பகுதியில் நெற்கட்டான்செவலை தலைமை இடமாகக் கொண்டு பரம்பரையாக ஆண்டு வந்த பாளையக்காரர்.  மன்னர்            காத்தப்ப பூலித்தேவரின்  திறமை கண்டு பன்னிரண்டாவது வயதிலேயே பட்டம் சூட்டி மன்னராக்கினர் பெற்றோர்.






      "… மிளையும் கிடங்கும் வளைவிற் பொறியும்

கருவிர லூகமும்கல்லிமிழ் கவணும்

பரிவுறு வெந்நெயும்பாகடு குநிசியும்,

காய்பொன் னுலையும் கல்லிடு கூடையும்

தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும்

கவையும் கழுவும் புதையும் புழையும்

ஐயவித் துலாமும் கைபெய ருசியும்

சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்

எழுவும் சீப்பும் முழுவிறற் கணையமும்

கோலும் குந்தமும் வேலும் பிறவும்...”

—ஆதிகால காதை - மதுரைக் காண்டம்

—சிலப்பதிகாரம் (வரி 207- 217) கள் கூறும் பாடல் அவருக்கே பொருந்தும். 






101 - "மாற்றவர் மறப்படை மலைந்துமதில் பற்றின்

நூற்றுவரைக் கொல்லியொடு நூக்கியெறி பொறியுந்

தோற்றமுறு பேய்களிறு துற்றுபெரும் பாம்புங்

கூற்றமன கழுகுதொடர் குந்தமொடு கோண்மா.

102 - விற்பொறிகள் வெய்யவிடு குதிரைதொட ரயில்வாள்

கற்பொறிகள் பாவையனம் மாடமடு செந்தீக்

கொற்புனைசெய் கொள்ளிபெருங் கொக்கெழில்செய்கூகை

நற்றலைக டிருக்கும்வலி நெருக்குமர நிலையே.

103 - செம்புருகு வெங்களிக ளுமிழ்வதிரிந் தெங்கும்

வெம்புருகு வட்டுமிழ்வ வெந்நெய்முகந் துமிழ்வ

வம்புமிழ்வ வேலுமிழ்வ கல்லுமிழ்வ வாகித்

தம்புலங்க ளால்யவனர் தாட்படுத்த பொறியே.

104 - கரும்பொனியல் பன்றிகத நாகம்விடு சகடங்

குரங்குபொரு தகரினொடு கூர்ந்தரிவ நுண்ணூல்

பரந்தபசும் பொற்கொடிப தாகையொடு கொழிக்குந்

திருந்துமதி றெவ்வர்தலை பனிப்பத்திருந் தின்றே.— — → (சீவக சிந்தாமணி - நாமகள் இலம்பகம் - 101- 104)........ஆகியன நம் தமிழக பழங்கால வீரம் உணர்த்தும்.







இந்தியத் திரு நாட்டின் சிறப்பு வாய்ந்த சமஸ்தானம் நெற்கட்டான்செவல் பாளையம் விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதல்முதலாக 1750 ஆம் ஆண்டில் வீர முழக்கமும் யுத்த பிரகடனம் செய்தவர். ஜாதிபாரா நீதி பரிபாலனம் செய்த மன்னர்கள் வரிசையில் இடமுண்டு. இவரது தளபதிகள் சின்னக்காலாடி, பெரியகாலாடி, உள்ளிட்ட பலரையும் நினைவுகூர்வோம் இன்று. 


ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனியாருக்கு எதிராக முதல் குரல் மாத்திரமல்ல முதல் யுத்தமும் செய்த தென்னகத்து மன்னர் வீரசிவாஜி போல இவரும் வரலாறு படைத்த மன்னர் தான். நெல்லைச் சீமையிலிருந்து இவர் மூலமே எழுந்தது


1750 ஆம் ஆண்டு முதல் 1767 ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 17 ஆண்டுகளில் பலமுறை வெள்ளைக்காரர்களோடு பூலித்தேவர் யுத்தம் செய்திருக்கிறார். 1750 ஆம் ஆண்டில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி கவர்னர் இராபர்ட் கிளைவ் திருச்சிராப்பள்ளிக்கு வந்து பிரிட்டிஷ் கொடியை ஏற்றிவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை வந்து சந்தித்துப் பேட்டி காண வேண்டுமென்ற அறிவிப்பைக் கொடுத்ததனால் வெகுண்ட மன்னர் பூலித்தேவர் திருச்சிராப்பள்ளிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்து வெற்றிபெற்றாரென 'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது. ஆங்கில இராபர்ட் கிளைவுடன் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்வும் கருதப்படுகிறது.



1755 ஆம் ஆண்டு கர்னல் கீரோன் (கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான்) தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட கட்டாயப்படுத்தியபோது தன்னுடைய நிலப்பகுதியில் வரி வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து வெற்றி கண்டதுடன், களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காட்டு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார்.



1756 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் திருநெல்வேலியில் மாபஸ்கானுடன் புலித்தேவர் நடத்திய போரில் புலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவை ஆங்கிலேயர்கள் துண்டு துண்டாக வெட்டியதால் மனமுடைந்த புலித்தேவர் போரை நிறுத்தித் திரும்பினார். அதனால் மாபஸ்கான் திருநெல்வேலியை தன்வசப்படுத்தினான். 1765 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வாசுதேவநல்லூர் கோட்டையைத் தாக்கிய காப்டன் பெரிட்சனும் மன்னர் புலித்தேவரிடம் தோற்றார்.



1760 ஆம் ஆண்டு யூசுபுகான் நெற்கட்டும் செவல் கோட்டையைத் தாக்கிய போதும், 1766 ஆம் ஆண்டு கேப்டன் பௌட்சன் வாசுதேவநல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் அதை முறியடித்து வெற்றி கண்டார். 1766 ஆம் ஆண்டு தொடர்ந்து ஆங்கிலேயரிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், கொடூரமான போர்முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய மதுரை பணையூரைச் சேர்ந்த மருதநாயகம் பிள்ளை மதம் மாறிய ஆங்கிலேயருக்கு இந்தியர்களைக் காட்டிக்கொடுத்த முதல் துரோகி கான்சாகிப்பால் மன்னர் பூலித்தேவரை ஆரம்பத்தில் வெல்ல முடியாமல் சுமார் 10 ஆண்டுகள் போரிட்டு பீரங்கிகளை வரவழைத்தததன் பின்னர் தான் பூலித்தேவர் தோல்வியடைந்தார்.


அதன்பின்பு தான் சங்கரன் கோவில் ஆலயத்தில் சென்று  மறைந்தது வரலாறு.  பரப்பளவில் ஒரு சிறிய பாளையத்திற்கு மட்டும் மன்னரானாலும் பூலித்தேவரால் இராபர்ட் கிளைவ் போன்ற இராணுவ பலம் கொண்ட ஆங்கிலேயக் கிழக்கிந்தியர்களையும், மருதநாயகம் பிள்ளை என்ற கான்சாகிப் போன்ற கைக்கூலிப்படைகளையும் எதிர்த்துப் பன்னிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து போர் புரிய முடிந்தது தான் வீரம். 



 முதலில் ஆதரவான திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மனும் மற்றும் பாளையக்காரர்களும் மன்னரைக் கைவிட்டு பிரிட்டிஷாரோடு இணைந்து விட்டார்கள், நம்பிக்கையான தளபதி வெண்ணிக் காலடி, முடேமியா என்ற பட்டாணியத் தலைவன் போன்றோர் மாவீரன் மன்னர் பூலித்தேவருக்காக தங்கள் உயிரையே கொடுத்தது தான் வரலாறு.மன்னர் பூலித்தேவரின் செப்பேடு கூறும் செய்தி:-

மன்னர் பூலித்தேவர் அளித்த கொடைச் செய்தி எழுதப்பட்ட செப்பேடு ஒன்றை, திருச்செங்கோடு நாணயவியல் ஆய்வாளர் விஜயகுமார் கண்டுபிடித்து புலவர் செ.ராசு என்பவரால் வெளியிடப்பட்டது.. அந்தச் செப்பேடு 27 செ.மீட்டர் நீளம், 15 செ.மீட்டர் அகலம் உடையது. ஒரு கிலோ எடையுள்ள அந்தச் செப்பேட்டில், ஒரு பக்கத்தில் மட்டும் 40 வரிகள் மட்டும் எழுதப்பட்டுள்ளன.  

பிறக்குடையா குடும்பன்  சமூகத்தைச் சேர்ந்தவருக்குப் பயிரிடத் தானமாக நிலமும், குளத்தில் மீன்பிடி வருவாயும் வரிநீக்கம் செய்து தரப்பட்டதாகும். 

மன்னர் பூலித்தேவர் கொடையில் வெட்டிய சங்கரன்கோயில் பாம்பாட்டி சித்தர் சமாதி மடம் அருகிலுள்ள கோவிந்தப்பேரி தெப்பக்குளம்.


மன்னர் பூலித்தேவரின் சீரமைக்கப்பட்ட அரண்மனை தர்பார் மண்டபம். ( பழைய அரண்மனை தர்பார் மிகவும் பெரியது. அது டாக்டர் கலைஞர் ஆட்சியில் முனைவர் டாக்டர் ம.ந மூலம் கூடுதல் நிதி கொண்டு இடிபாடுகள் நீக்கி சுருக்கமாக உள் முற்றம் போல கட்டப்பட்டது)


நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனியருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ முன் வந்த டச்சுக்காரர்கள் மற்றும் உதவியையும் மன்னர் பூலித்தேவர் மறுத்துவிட்டார்.                                      மன்னர் பூலித்தேவரின் மரணம் குறித்து  இரு வேறு கருத்துக்கள் நிலவும் நிலையில். மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிளேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர்.


ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு மன்னர் பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டாரென்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயில் கோமதி அம்மன் சங்கரநாராயணர் ஆலயத்தில் இறைவனை வழிபட வேண்டுமென்று மன்னர் பூலித்தேவர் விரும்பியதாகவும்,

அதன்படி பிரிட்டிஷ் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் , அப்போது பெரிய புகை மண்டலமும் ஜோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ ஜோதியில் கலந்தாரென்றும், பூலித்தேவர் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் “பூலிசிவஞானம்” ஆனார் என்றும் நாட்டுப்டபுறப் பாடல்கள் கூறுகின்றன.மற்றோது கருத்து மன்னர் பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால்

ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச் செய்திருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.(என்னைப் பொருத்தவரை இது தான் உண்மையாக இருக்கலாமெனத்தோன்றுகிறது காரணம் நேதாஜியையும் இப்படித்தான் செய்திருப்பார்கள் லண்டன் வெடிகுண்டு விசயத்தில் ஒரு மாணவனை விசாரணையின்றி சுட்டுக்கொண்றிக்கிரார்கள் கொஞ்சமும் ஈவிரக்கமின்றி) அவர் எப்படி மறைந்தாலும் ஒன்று மட்டும் நிச்சயம். அவர் இறுதி வரை அன்னியருடன் சமரசம் செய்யாது போராடியே மன்னர் மாண்டார்.



இந்திய விடுதலைப் போரின் முதல் வீரரான மன்னர் பூலித்தேவர் அன்று மன்னர்களிடையே இருந்த பிரிவின் காரணமாக இறுதிவரை தனியொருவராகப் போராடி மக்கள் மனதில் சுதந்திரத் தீயை தன்னுயிர் கொடுத்து வளர்த்தார். அது மக்களின் தேசிய எழுச்சிப் போராட்டங்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமானது என்பதை யாரும் மறுக்க முடியாத விடுதலை இயக்கச் சரித்திரம் படைத்தார்.

1767 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்க் கிழக்கிந்தியக் கம்பனியின் படை இவரது படையை பீரங்கிகளைக் கொண்டு நாசம் செய்து அவரை கைது செய்தனர்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணம் எப்படி உறுதிப்படுத்த இயலாத நிலை உள்ளதோ அதேபோல் தான் மாமன்னர் காத்தப்ப பூலித்தேவர் மரணம் 

இன்றும்  சங்கரன்கோவிலுக்குள் சித்தராக இவரது தனி அறை அமைந்துள்ளது. தற்போது பூலித்தேவர் விழா துவக்கம் என்பது வரலாறு மறையாது.  அதைக் காப்பாற்ற காலம்சென்ற முனைவர் ம.நடராஜன் அவர்களால் நெற்கட்டான்செவல் அரண்மனையில்  துவங்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த