ரூ.1.05 கோடி மதிப்பிலான 2.42 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், அபுதாபியிலிருந்து சென்னை வந்த விமானத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் வந்த ஆண் பயணி ஒருவர், கார் சுத்தம் செய்யும் கருவியின் மோட்டரில் மறைத்து வைத்திருந்த 24 காரட் 2.42 கிலோ எடையிலான ரூ.1.05 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் திரு மேத்யூ ஜாலி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்