மகளிருக்கான பளு தூக்கும் போட்டியின் கேலோ இந்தியா தேசிய தரவரிசை இரண்டாம் கட்டத்தில் ஒலிம்பிக் மேடை இலக்கு திட்ட வீராங்கனைகளான பிந்தியாராணி, ஹர்ஷதா, சவுமியா, அகாங்க்ஷா பங்கேற்க உள்ளனர்
காசியாபாதிலும் நொய்டாவிலும் அக்டோபர் 27 தொடங்கி நவம்பர் 2-ல் நிறைவடையவிருக்கும் மகளிருக்கான ஜூனியர் மற்றும் சீனியர் பளு தூக்கும் போட்டியின் கேலோ இந்தியா தேசிய தரவரிசை இரண்டாம் கட்டத்தில், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2022-ன் வெள்ளிப்பதக்க வீராங்கனை பிந்தியாராணி, ஹர்ஷதா, சவுமியா, அகாங்க்ஷா ஆகியோர் பங்கேற்பவர்களில் சிலராவர். இவர்கள் அனைவரும் ஒலிம்பிக் மேடை இலக்கு திட்ட வீராங்கனைகள் ஆவர்.
மத்திய விளையாட்டு துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் இந்திய பளுதூக்கும் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போட்டிகள் சீனியர், ஜூனியர் உள்ளிட்ட 3 பிரிவுகளாக நடைபெறுகின்றன. ஏற்கனவே நடைபெற்ற முதலாம் கட்ட போட்டிகளில் 55 கிலோ எடை பிரிவில், பிந்தியாராணி தேவியும், 45 கிலோ எடை பிரிவில் ஹர்ஷதாவும், தங்கப்பதக்கம் வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்