முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகளாவிய செய்தி அமைப்பு 2022 ல் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் உரை

நெருக்கடி காலத்தில் தொலைக்காட்சி செய்தி உண்மையானதாகவும் நம்பிக்கை உடையதாகவும் இருக்க வேண்டும்,மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன்


உலகளாவிய செய்தி அமைப்பு 2022 ல் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் முக்கிய உரை நிகழ்த்தினார்

புதுதில்லியில் நடைபெறும் உலகளாவிய செய்தி அமைப்பு 2022ல் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் இன்று முக்கிய உரை நிகழ்த்தினார்.  ஆசியா பசிஃபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த பல்வேறு செய்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் முருகன்,  புனிதமான நவராத்திரி நாளில் இந்த நிகழ்வு நடப்பதை சுட்டிக்காட்டினார்.  நெருக்கடியான காலத்தில் அனைவரும் பின்பற்றும்வகையில் தொலைக்காட்சி செய்தி அலை வரிசைகள் கவனமாகவும் உண்மையானதாகவும் நம்பிக்கை உடையதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.  "நெருக்கடியான காலத்தில் உண்மை மற்றும் நம்பகத்தன்மை" என்ற உலகளாவிய செய்தி அமைப்பின் மையப்பொருள் மிகவும் பொருத்தமானது என்றும் கொவிட்- 19 பெருந்தொற்று காலத்தில் தகவல் தொற்று என்று குறிப்பிடும் அளவுக்கு நிலைமை இருந்த நிலையில் இதன் முக்கியத்துவம் பல மடங்கு அதிகரித்து உள்ளது என்றும் அவர் கூறினார்.

 கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள இந்த அமைப்பு மிகச் சிறந்ததாக உள்ளது என்று டாக்டர் முருகன் மேலும் தெரிவித்தார்.  ஜனநாயகத்தில் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகம் முதன்மை முக்கியத்துவத்தை பெற்றுள்ளது என்று கோடிட்டு காட்டிய டாக்டர் முருகன்,  பெருந்தொற்று காலத்தில் தவறான தகவல்களுக்கு மாறாக சரியான தகவலை அளிப்பதில் பிரசார் பாரதி முக்கிய பங்கு வகித்ததாக தெரிவித்தார்.  நெருக்கடியான காலத்தில் போலியான செய்திகளும் தவறான தகவல்களும் பரவிக் கொண்டிருந்ததை எடுத்துரைத்த அவர் மறுபக்கத்தில் இந்த மோசமான நிலைமைக்கு எதிராக விழிப்புணர்வை உருவாக்குவது சம அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்றார்.

ஆசியா பசிஃபிக் ஒலிபரப்பு  சங்கத்தின் தலைமைச் செயலாளர் திரு ஜவாத் முத்தாகி பேசுகையில்,  இந்த ஒலிபரப்பு சங்கம் மிகப்பெரியது என்றும் 70 நாடுகளைச் சேர்ந்த 250 உறுப்பினர்கள் இதில் உள்ளனர் என்றும் மூன்று பில்லியனுக்கும் அதிகமான மக்களைச்  சென்றுசேரும் திறனை கொண்டுள்ளது என்றும் கூறினார். சிறிய மற்றும் பெரிய நாடுகளையும், பல்வேறு கலாச்சாரங்களையும், பொருளாதார நிலைமைகளையும், நிர்வாக முறைகளையும் கொண்ட பன்முகத்தன்மையுடன் ஆசியா பசிஃபிக் பிராந்தியம் இருப்பதை சுட்டிக்காட்டிய திரு முத்தாகி இருப்பினும் பன்முகத்தன்மை  அச்சுறுத்தல் அல்ல ஒரு வாய்ப்பு என்றார்.  இந்த சங்கம் அதன் பொதுத்தன்மைகளில் கவனம் செலுத்துவதாகவும் பன்முகத்தன்மையை மதிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 பிரசார் பாரதியின் நிர்வாக அதிகாரி திரு மயங்க் அகர்வால் பேசுகையில்,  இந்த பிராந்தியத்தில் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பாளர்கள் இடையே ஒத்துழைப்பை ஊக்கப்படுத்துவதில், கூட்டான ஆர்வத்தை மேம்படுத்துவதில் இந்த ஏ பி யு சிறந்த பங்கு வகிக்கிறது என்றும்  இதனை பிரசாத் பாரதி பாராட்டுகிறது என்றும் கூறினார்.  துருக்கியின் இஸ்தான்புலில் 2019ல் நடைபெற்ற 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டம் நேரடியாக நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆசியா பசிஃபிக் ஒளிபரப்பு சங்கம் பற்றி

ஆசியா பசிஃபிக் ஒலிபரப்பு சங்கம் லாப நோக்கம் இல்லாமல், அரசு சாராமல், அரசியல் சாராமல்,  தொழில்முனையினர் சங்கமாக 1964 இல் உருவாக்கப்பட்டது. தற்போது மலேசியாவின் கோலாலம்பூரில் தலைமை இடமாகக் கொண்டுள்ள இந்த சங்கம் ஒலிபரப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்கு உதவி செய்வதை நோக்கமாகக் கொண்டது.  பசிஃபிக் பிராந்தியம், ஆசியா (தென்கிழக்கு, வடக்கு, தெற்கு, மத்திய),  மத்திய கிழக்கு,  ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா ஆகியவற்றைச் சேர்ந்த 67 நாடுகளின் 153 உறுப்பினர்களை கொண்டுள்ள இது இரண்டு பில்லியன் மக்களிடம் சென்று சேரும் திறன் கொண்டது.  தூர்தர்ஷனும்  அகில இந்திய வானொலியும் இந்த சங்கத்தின் முழுமையான உறுப்பினர்களாக உள்ளன.  1964ல் இந்த சங்கத்தின் நிர்வாக உறுப்பினராக அகில இந்திய வானொலி இருந்த நிலையில் தூர்தர்ஷன் 1976 ஆம் ஆண்டு சங்கத்தில் இணைந்தது.  தற்போது நடைபெற்று வரும் உலகளாவிய செய்தி அமைப்பு 2022ன் 3 நாள் நிகழ்வு நாளை (அக்டோபர் 5)  நிறைவடைய உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...