தமிழக சட்டசபையில் இன்று (அக்டோபர்.,18) முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சமர்பித்த அறிக்கை
தாக்கல் செய்யப்பட்டதில் கூறப்பட்டுள்ள தகவல் சுருக்கம்:
2012 ஆம் ஆண்டு முதல் ஜெ. ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை. 22.9.2016 அன்று ஜெ.ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு தாமதமின்றி அழைத்து சென்றுள்ளனர். அதன் பிந்தைய நிகழ்வுகள் இரகசியமாக்கப்பட்டன.
ஜெ.ஜெயலலிதா வீட்டிலிருந்து மருத்துவமனையில் அனுமதித்த நபர்களிடம் அசாதாரணமான செயல் எதுவும் கண்டறியப்படவில்லை.
ஜெ.ஜெயலலிதாவிற்கு உயிர் காக்கும் இதய அறுவை சிகிச்சை செய்ய அமெரிக்க மருத்துவர் பரிந்துரை செய்துள்ளார்.
ஜெ. ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ, அறுவை சிகிச்சைக்கு வெளிநாட்டு மருத்துவர்கள் பரிந்துரை செய்தும் ஏன் கடைசி வரை நடக்கவில்லை?
ஆனால் 2 மாதத்திற்குப் பின்னர் மருத்துவ ரீதியாக ஜெ.ஜெயலலிதாவை பரிசோதிக்காமல் இதய அறுவை சிகிச்சை தேவையில்லை என இங்கிலாந்து மருத்துவர் முடிவு செய்துள்ளார்.
இறந்த நாளில் முரண்பாடு ஜெ.ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது வெளியான மருத்துவ அறிக்கைகளில் பல்வேறு முரண்பாடுகள் இருந்துள்ளன.
ஜெ.ஜெயலலிதாவுக்கு வெஜிடேசன், குடல்நோய் அறிகுறி உபாதைகள் உள்ளிட்டவை குறித்து மருத்துவ அறிக்கையில் குறிப்பிடவில்லை.சசிகலா நடராஜன், டாக்டர் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
ஜெ.ஜெயலலிதா இறந்த நாள் குறித்த முரண்பாடான தகவல்கள் உள்ளன.
ஜெ.ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர்.,5 இரவு 11:30 மணி என மருத்துவமனை கூறும் நிலையில், சாட்சியங்கள் டிசம்பர்.,4 ஆம் தேதியில் மதியம் 3 மணியிலிருந்து 3:50 மணிக்குள் எனக் கூறுகின்றனர்.
ஆணையத்தின் பார்வையில், ஜெ.ஜெயலலிதா டிசம்பர்.,4, 2016 ஆம் தேதியில் பிற்பகல் 3:50 மணிக்கு காலமானார். சி.பி.ஆர் (CPR) மற்றும் ஸ்டெர்னோடமி பயனற்றவை என்பதுடன், அவரது மரணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தாமத்திற்கான காரணமாக தந்திரமாக பயன்படுத்தப்பட்டன.
ஜெ.ஜெயலலிதா ஆஞ்சியோ சிகிச்சை தேவைப்பட்டும் அளிக்கப்படவில்லை.
மருத்துவக் கருவிகள் சுத்தம் செய்யும் மூன்று பேரை கொண்டு சிபிஆர் சிகிச்சை
எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை மருத்துவமனைக்கு வந்தும் சிகிச்சை அளிக்கப்படவில்லை.
ஜெ.ஜெயலலிதாவுக்கு 3.50 மணிக்கு இதயம் செயலிழந்த நிலையில் 4.20 மணிக்கு சிபிஆர் சிகிச்சை
உடலில் மின்முறை ரத்த ஓட்டம் நின்ற பிறகு சிபிஆர் சிகிச்சை அளித்தது வியப்பாக உள்ளது
உயிரிழந்ததை தாமதமாக அறிவிக்க தந்திரமாக செயல்பட்டுள்ளனர்.
சிபிஆர் ஸடெர்னோடமி சிகிச்சையை காரணமாகக் கொண்ட தந்திரமாக செயல்பட்டுள்ளனர்.
ஜெ.ஜெயலலிதா போயஸ் கார்டனில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டது.
வீட்டின் குளியல் அறையில் இருந்து திரும்பி படுக்கையை அடைந்த போது ஜெயலலிதா மயங்கி விழுந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐசியு.,வுக்கு மாற்றப்பட்ட போது ஜெயலலிதாவுக்கு சுயநினைவு வந்தது.
20.09.2016 அன்று காவிரி நதிநீர் கூட்டத்தில் தலைமை செயலாளர்களால் ஜெ.ஜெயலலிதா புகைப்படம் எடுக்க அனுமதி கோரப்பட்டது. புகைப்படக் கலைஞருக்காக காத்திருந்த நிலையில், ஜெ.ஜெயலலிதாவின் பிஎஸ்ஓ பெருமாள்சாமி, பேட்டோ எடுக்க அனுமதி மறுத்தார்.
அப்பல்லோ டாக்டர் பாபு ஆபிரகாம் அக்டோபர் மாதம் .,11 ஆம் தேதி அன்று அமெரிக்க டாக்டர் ஸ்டூவர்ட் ரஸ்சலை தொடர்பு கொண்டார்.
ஜெ.ஜெயலலிதாவுக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பது அமெரிக்க டாக்டர்களின் கருத்தாக இருந்தது.
புத்திசாலி பெண்மணியான ஜெ.ஜெயலலிதா, அறுவைச் சிகிச்சையின் முக்கியத்துவத்தை கருதி உடனே ஏற்று கொண்டார்.
முன்மொழியப்பட்ட சிகிச்சைக்கு சுயநினைவுடன் இருந்த ஜெ.ஜெயலலிதா ஒப்புதல் அளித்தார்
ஜெ.ஜெயலலிதா சுய நினைவுடன் இருந்த நிலையில், அவருடன் அமெரிக்க மருத்துவர் சிகிச்சை குறித்த விவாதித்தார்
1.10.2016 அன்று டாக்டர் ரிச்சர்ட் பீலேவால் செப்சிஸ் மற்றும் வெஜிடேசன் உறுதிப்படுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவரது இதுயத்தில் வெஜிடேசன் மற்றும் பெர்பொரேசனும் இருப்பதாக டாக்டர்கள் கண்டறிந்தனர்.
ஜெ.ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிறுநீர் தொற்று காரணமாக செப்சிஸ் ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் .10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நாள் தோறும் முறையே, 1200 மி.பி., 1070 மி.லி.,1040 மி.லி., நுரையீரலில் இருந்து திரவம் வெளியேற்றப்பட்டது.
11.10.2016 ல் அமெரிக்க மருத்துவரான டாக்டர் ஸ்டூவர்ட் ரஸ்ஸல் பரிந்துரைத்த ஆஞ்சியோ செய்யப்படவில்லை.
2 மாதங்களுக்குப் பின் இங்கிலாந்தில் இருந்து வந்த டாக்டரின் கருத்துப்படி அறுவை சிகிச்சை அவசியம் இல்லை என முடிவு செய்யப்பட்டது.
ஆனால் மருத்துவ ரீதியாக ஜெ.ஜெயலலிதாவை பரிசோதிக்காத டாக்டர், எழுத்துப்பூர்வமாக இல்லாமல் வாய்மொழியாக கருத்து தெரிவித்தார்
வீட்டில் இருந்த நபர்களின் செயல்பாட்டில் அசாதாரண நடவடிக்கை எதையும் ஆணையம் கண்டறியவில்லை. என்பதாக அமைந்துள்ளது. அடுத்ததாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டதில், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் 17 காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி போராட்டம் நடந்த போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் 133 பக்க பரிந்துரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்தது.
அதில் முக்கிய விவரங்கள்:-
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது போலீசார் வரம்பு மீறி நடவடிக்கை எடுத்துள்ளது
துப்பாக்கிச்சூடு தொடர்பாக அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
இறந்தவர்களின் உறவினர்கள், சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
காவலர் சுடலைக்கண்ணு மட்டும் 17 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அவரை அடியால் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது பூங்காவில் மறைந்திருந்து காவலர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். என்பதாக அமைகின்றன .இதில் பொது நீதி யாதெனில் பின்னால் பிரச்சினைகளே வராத அளவுக்கு ஒழுங்காக ஒரு உயிலை முன்னால் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவுக்கு எழுதி வைக்க தெரியவில்லை.
அவர் பிறந்த சமூகத்தில் நம்பிக்கைக்குரிய ஒரு இரத்த சம்பந்தத்தை கொண்ட உறவு கூட கிட்ட சேர்த்து வைக்கிற அளவுக்கு ஒருத்தரையும் அவர் நம்பவில்லை..
என்ன இரும்புப் பெண்மணியோ?
சசிகலா - ஜெயலலிதா இருவரிடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாமென ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் தகவல் .
அப்புறம் இறந்த நேரமும் தேதியுமே மாறுபடுகின்றன. என்ற கருத்து அதிகமாக இனி விவாதங்கள் நடக்கும், காரணம் சசிக்கலா சர்வ வல்லமை படைத்த அதிகாரம் கொண்ட பதவிகள் இல்லாத நிலையில் இவை சார்தியமா என்பதே இன்னும் எழு வினா. அதற்கு விடை தெரியும் போது தான் சகலமும் நமக்கு புரியும்.
கருத்துகள்