அகலப்பாதை திட்டங்களை முழுமையாக மின்மயமாக்குவதற்கான லட்சிய திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது.
இது சிறந்த எரிபொருள் பயன்பாட்டை ஏற்படுத்துவதுடன், நீடித்த செயல்திறன், குறைந்த எரிபொருள் செலவு மற்றும் அந்நிய செலாவணியையும் மிச்சப்படுத்துகிறது.
2022-23-ஆம் நிதியாண்டின் செப்டம்பர் 2022 வரை, 851 கிலோமீட்டர் வழித்தடங்களை மின்மயமாக்கியுள்ளது. இது 2021-22-ஆம் நிதியாண்டின் இதேகாலகட்டத்தில் 562 கிலோமீட்டர்களுடன் ஒப்பிடும்போது, 51.4 சதவீதம் அதிகம். இந்த நிதியாண்டில் 6500 கிலோமீட்டர் வழித்தடங்களை மின்மயமாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே வரலாற்றில் 2021-22-இல் 6,366 கிலோமீட்டர் வழித்தடம் மின்மயமாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2020-21-இல் 6,015 கிலோமீட்டர் வழித்தடம் மின்மயமாக்கப்பட்டது.
30.09.2022 நிலவரப்படி, இந்திய ரயில்வேயின் அகலப்பாதையில், 65,141 கிலோமீட்டர் வழித்தடத்தில் 53,098 கிலோமீட்டர் வழித்தடம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. இது மொத்த அகலப்பாதை மின்மயமாக்கல் பணியில் 81.51 சதவீதமாகும்.
கருத்துகள்