இங்கிலாந்தில் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையை உயர்த்தத் திட்டம், மினி நிதிநிலை அறிக்கை சர்ச்சை உள்ளிட்ட காரணங்களால் பிரதமர் லிஸ் டிரஸ் அக்டோபர் 20 ஆம் தேதி தன் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து
ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டு புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கிய
போட்டியில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் ரிஷி சுனக்கிற்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் 100 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்ததையடுத்து, பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக் களமிறங்கினார்.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு சில மணிநேரத்திற்கு முன்னர் , போட்டியிலிருந்து விலகும் முடிவை போரிஸ் ஜான்சன் வெளியிட்டார். பிரதமர் பதவி மற்றும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவிக்கு ரிஷி சுனக் போட்டியிட்டார்.பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு ரிஷி சுனக்கிற்கு இருந்ததால் அவர் பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வாகியுள்ளார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட நாடாளுமன்ற மக்கள் சபையின் தலைவர் பென்னி மார்டண்டுக்கு போதிய ஆதரவில்லை. ரிஷி சுனக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவராவார்.ரிஷி சுனாக் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய வம்சாவளியானவர், ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றவர், 'இன்போசிஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷ்தா மூர்த்தியின் கணவராவார். 2015 ஆம் ஆண்டில் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக பிரிட்டன் பாராளுமன்றத்திற்குத் தேர்வானவர், 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பிரிட்டன் நிதி அமைச்சரானார்.
அங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சி என்பது ஆங்கிலேயர்கள் ஆங்கிலேயர்களாக ஆட்சி செய்தது.
ஆனால் தற்போதைய பிரதமர் இங்கிலாந்தின் குடியுரிமை பெற்ற குடிமகன்.
இதில் இந்தியர்களுக்கு என்ன பெருமை சிலர் அதில் பெருமை கொள்ளக் காரணம் பல.
கருத்துகள்