ஓடும் ரயில் முன் தள்ளி விடப்பட்டு மாணவி கொல்லப்பட்ட செய்தியறிந்த அவரது தந்தை விஷம் குடித்து தற்கொலை.
சென்னை பரங்கிமலை இரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் தள்ளி விடப்பட்டு மாணவி கொல்லப்பட்ட செய்தியறிந்த அவரது தந்தை மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை.
மாரடைப்பால் மாணிக்கம் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்ட நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்.
சென்னை ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 47). அவர் மனைவி வரலட்சுமி (வயது 43). ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுகிறார்,இவர்களது மகள் சத்யா (வயது 20). தியாகராய நகர் தனியார் கல்லூரியில் இளங்கலை வணிகம் இரண்டாமாண்டு படிக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் தயாளன் மகன் சதீஷ் (வயது 23). இவரும் சத்யாவும் பள்ளி படித்த போது காதலித்த நிலையில் சதீஷ் போதை பழக்கம் கொண்டவர் எனத் தெரிந்ததால் அவரை விட்டு சத்யா விலகிய நிலையில் தினமும் கல்லூரிக்கு சத்யா மின்சார இரயிலில் செல்வது வழக்கம். அது போல் நேற்று மதியம் கல்லூரி செல்ல பரங்கிமலை ரயில்நிலையத்திற்கு சத்யா வந்தபோது அங்கு வந்த சதீஷ்,
சத்யாவிடம் பேசியுள்ளார். இதற்கு சத்யா மறுத்துவிட்டார். மீண்டும் மீண்டும் சத்யாவை சதீஷ் தொந்தரவு செய்ததாகத் தெரிகிறது. இவர்களுக்குள் வாக்குவாதமும் நடந்துள்ளது. அந்த சமயம் பார்த்து தாம்பரம் நோக்கி்ச் செல்லும் மின்சார ரயில் வேகமாக வந்து கொண்டிருந்த போது சதீஷ், சத்யாவை தண்டவாளத்தில் தள்ளி விட்டுத் தப்பியோடியதால்
அப்போது சத்யா மீது ரயில் சக்கரங்கள் ஏறி இறங்கியதால் மாணவியின் தலை தனியாகவும் உடல் தனியாகவும் சிதறி இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சத்யா உயிரிழந்தார். தகவலை அறிந்த சத்யாவின் தோழிகள் அழுது கொண்டே ஓடி வந்த நிலையில் அவர்கள் இரயில்நிலைய காவல் நிலையத்தில் கொடுத்த. புகாரின் பேரில் சதீஷை பிடிக்க காவல்துறையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தேடப்பட்ட சதீஷ் துரைப்பாக்கத்திலிருப்பதை அறிந்த தனிப்படையினர் அவரை அதிகாலை கைது செய்தனர். இதனிடையே சத்யா இறந்த சம்பவம் குறித்து அங்கிருந்த அவரது தோழிகள் சத்யாவின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர் அதை கேள்விப்பட்ட மாணிக்கம் தனது மகளை நினைத்து கதறியுள்ளார். நேற்று முழுவதும் மன உளைச்சால் புழுங்கியுள்ளார். இந்த நிலையில் மகளின் இழப்பை ஏற்க முடியாமலும் பிரிவை தாங்கி்க் கொள்ள முடியாமலும் மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஒரு தவறான வளர்ப்பில் வந்த இளைஞர் வெறி்ச் செயலால் கொல்லப்பட்ட மாணவியின் உடலும், மகளின் பிரிவால் தற்கொலை செய்த தந்தையின் உடலும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இரு உயிர்கள் பலியான சம்பவம் ஆதம்பாக்கத்தில் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி உயிரிழப்பு குறித்து அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், அந்த பெண்ணிடம் ஒரு பையன் நீண்ட நேரமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அந்தப் பெண் தி.நகர் செல்ல ரயிலுக்காக காத்திருந்ததாக் தெரிகிறது. அப்போது ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை பிடித்து அந்த இளைஞர் கீழே தள்ளினார். இதனால் பதறியடித்த படி அவரது தோழிகள் காப்பாற்றுவதற்கு ஓடி வந்தனர். அதற்குள் தாம்பரம் நோக்கி வந்த ரயில் அந்த மாணவியின் மீது ஏறியது. உடனே அனைவரும் கூச்சல் போட்டு ரயிலை நிறுத்தினர். அப்போது அந்த பெண்ணின் உடல் துண்டாகிக் கிடந்தது. இதை பார்த்த அந்த பெண்ணின் தோழிகள் கதறினர். அந்த பெண்ணை ரயில் முன்பு தள்ளிவிட்டுவிட்டு அந்த நபர் தப்பியோடிவிட்டார் எனத் தெரிவித்தனர்.
கருத்துகள்