ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் இன்று நடைபெற்ற சர்வதேச கீதை கருத்தரங்கில்
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பங்கேற்றார்.
மேலும், ஹரியானா முதலமைச்சரின் சுகாதார ஆய்வுத் திட்டம், அனைத்து பொது போக்குவரத்துகளுக்கும் மின்னணு வழியில் பயணச் சீட்டு பெறும் திட்டம் ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்ததோடு சிர்ஸாவில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையான உணர்வில் உலகளாவிய நூலாக இருக்கிறது என்றும் இது பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மற்ற நூல்களோடு ஒப்பிடுகையில் கீதைக்கு ஏராளமான விளக்க நூல்கள் எழுதப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சுயநலம் இல்லாமல் கடினமாக உழைப்பது வாழ்க்கையின் சரியான பாதை என்பதை கீதை கற்றுத்தந்துள்ளதாக திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார். மகிழ்ச்சியையும், நேரத்தையும், லாபத்தையும், நஷ்டத்தையும் சம உணர்வோடு ஏற்பதும், கௌரவம் அல்லது அகௌரவம் பாதிக்காமல் அனைத்து சூழ்நிலைகளையும் சமச்சீராக பராமரிப்பதும் கீதை வழங்கியுள்ள மிகவும் பயனுள்ள செய்தியாகும் என்று அவர் கூறினார்.
கருத்துகள்