களிறு என்பது ஆண் யானை,
பிடி என்றால் பெண் யானை
'அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லை போம் போகாத் துயரம் போம் நல்ல
குணமதிகமாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியைக் கைதொழுதற் கால்'......
முதல்முதலாக மனக்குள விநாயகர் ஆலயம் புதுச்சேரிக்கு கேரளாவிலிருந்து 1996 ஆம் ஆண்டு நன்கொடையாக யானை இலட்சுமி வந்தது. அப்போதைய முதல்வர் ஜானகிராமன்," இலட்சுமி" எனப் பெயர் வைத்தார். மனக்குள விநாயகர் ஆலயத்தில் அதன் பங்கு சிறப்பானது .புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி, ஈஸ்வரன் கோயிலிலுள்ள தனது தங்கும் கொட்டடியிலிருந்து காலை 6 மணிக்கு தினமும் நடைப்பயிற்சி வருவது வழக்கம். போல இன்றும் அதிகாலையில் யானை லட்சுமி தனது பாகனுடன் வந்துள்ளது.
அப்போது மிஷன் வீதி கலவை கல்லூரியருகே காலை 6:30 மணிக்கு திடீரென சாலையில் சுருண்டு விழுந்து பின் இறந்தது. அப்படி மயங்கி விழுந்தபோது அதனருகில் நின்ற காரின் மீது விழுந்து சாலையில் சாய்ந்துள்ளது. இதில் காரும் சேதமானது.
புதுச்சேரிக்கு 1998 ஆம் ஆண்டு ஐந்து வயதில் அழைத்துவரப்பட்ட யானை லட்சுமிக்கு தற்போது 33 வயதாகியுள்ளது. இறந்த யானையைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள் இதய அடைப்பு ஏற்பட்டு திடீரென இருந்திருக்கலாம் எனக் கூறினர். பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் யானை தினமும் காலை மாலை இருவேளைகளில் கோவிலில் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கி அழகு சேர்த்து வந்தது.
கோவில் யானை திடீரென இறந்த சம்பவம் புதுச்சேரி மற்றும் தமிழ் நாடு வாழ் பக்தர்களையும் வெளிநாட்டில் வசிக்கும் பக்தர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. யானை இறந்த பகுதிக்கு புதுச்சேரியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர். இந்நிலையில் யானை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுமென ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்
புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது காமாட்சி அம்மன் கோயில் வீதியில் நடை பயிற்சி மேற்கொண்ட போது மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி உயிரிழந்ததன் காரணமாக மணக்குள விநாயகர் கோவில் நடை சாத்தப்பட்டது. யானை லட்சுமியின் மறைவை தாளாமல் புதுச்சேரி மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இறுதி யாத்திரையின் போது வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தமிழ் நாட்டிலிருந்து கால்நடைப் பேராசிரியர்கள் குழு மற்றும் வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் 18 பேர் உடற்கூறு அறுவைக்கான சாதனங்களுடன் வந்ததைத் தொடர்ந்து யானை லட்சுமிக்கு உடல் கூறு பரிசோதனைகள் இரண்டு மணி நேரம் நடந்த போது யானையின் தந்தங்கள் எடுக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதையடுத்து யானை லட்சுமி உடல் குழியில் இறக்கப்பட்டதில் 50 சிப்பம் உப்பு, விபூதி மஞ்சள் உள்ளிட்டவை தூவப்ப்பட்டன. நிகழ்வுகள் அனைத்தும் இரவு 8 மணி அளவில் நிறைவடைந்ததில் ஏராளமான பொதுமக்களுடன் மாநில அமைச்சர்களில் சிலர் பங்கேற்றனர்.
'கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்'.
கருத்துகள்