சென்னை விமான நிலையத்தில் ரூ.16.49 லட்சம் மதிப்புள்ள 345 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்
துபாயிலிருந்து வந்த இந்திய ஆண் பயணி ஒருவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவர்கள் நூதனமுறையில் மறைத்து எடுத்து வந்த ரூ.16.49 லட்சம் மதிப்பிலான 345 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இத்தகவலை சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறையின் முதன்மை ஆணையர் திரு எம் மேத்யூ ஜாலி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்