முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சேலம் - உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை புறவழிச்சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக விரிவாக்கம்

சேலம் - உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை



அடுத்த எட்டு மாதங்களில் புறவழிச்சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக விரிவாக்கம் செய்யப்படும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவிப்பு,

சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள  புறவழிச்சாலைகளில் முதற்கட்டமாக ஆறு புறவழிச்சாலைகள் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள்ளாகவும், மற்றுமுள்ள இரு புறவழிச்சாலைகள் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள்ளாகவும் நான்கு  வழிச்சாலைகளாக விரிவுபடுத்தப்படுமென்று


மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸுக்கு எழுதிய கடிதத்தில் இந்தத் தகவல்களை மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.



சேலம்- உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள புறவழிச்சாலைகளில் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் நடப்பது குறித்தும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க புறவழிச்சாலைகளை நான்கு வழிச் சாலைகளாக விரிவாக்கம் செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தி  செப்டம்பர் மாதம்  2-ஆம் தேதி மத்திய நெடுஞ்சாலை அமைச்சர் நிதின்கட்கரிக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதியிருந்தார்.

‘‘தேசிய நெடுஞ்சாலை எண் 79- ல் சேலம் -உளுந்தூர்பேட்டை இடையிலான 136 கி.மீ பாதையில் நடைபெறும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தச் சாலையில் எட்டிடங்களில் அமைந்துள்ள  புறவழிச் சாலைகளில் நான்கு வழிச்சாலை திடீரென இரு வழிச்சாலையாக மாறி விடும் நிலையில், அதைக் கவனித்து சமாளிக்க முடியாமல் அந்தச் சாலையில் பயணிப்பவர்கள் தடுமாறுகின்றனர். அதனால், அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலை எண் 79-ல் கடந்த 2011 முதல் 2022 வரையிலான 11 ஆண்டுகளில் மட்டும் 1036 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, தேசிய நெடுஞ்சாலை எண் 79-ல் சேலம் - உளுந்தூர்பேட்டை இடையிலான 136 கி.மீ சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் எட்டு இடங்களில் உள்ள இருவழி புறவழிச்சாலைகளையும் நான்கு வழிச்சாலைகளாக மாற்றும் பணிகளை உடனடியாகத் தொடங்க வேன்டுமென்று மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் என்ற முறையில் தாங்கள் ஆணையிட வேண்டும்’’ என அந்தக் கடிதத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கோரியிருந்தார்.

அதற்கு பதிலளித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எழுதியுள்ள நவம்பர் 2-ஆம் தேதியிட்ட  கடிதத்தில், ‘‘ சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள புறவழிச்சாலைகளை நான்கு வழிச் சாலைகளாக மாற்ற வேண்டும் என்று நீங்கள் எழுதிய கடிதம் குறித்து ஆய்வு செய்தோம். அதனடிப்படையில்,  சேலம் & உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலைக்காக பணி ஒப்பந்தத்தின்படி அந்த நெடுஞ்சாலையில் உள்ள எட்டு புறவழிச்சாலைகளும், அதில் உள்ள கட்டமைப்புகளும் அந்த தேசிய நெடுஞ்சாலையை அமைத்த நிறுவனத்தால் நான்கு வழிச்சாலைகளாக விரிவாக்கப்பட வேண்டும் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தேசிய நெடுஞ்சாலை திட்ட பணி ஒப்பந்தத்தின் 11-ஆவது ஆண்டு நிறைவுக்குள் புறவழிச்சாலைகளை  நான்கு  வழிச்சாலைகளாக்கும் பணிகள் திருப்திகரமாக முடிக்கப்பட வேண்டும். அதன்படி 6 புறவழிச்சாலைகளை  விரிவாக்கும் பணிகள் 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்; மீதமுள்ள இரு புறவழிச்சாலைகளை விரிவாக்கும் பணிகள் 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.

இதுதவிர, சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, சாலை அறிவிப்புப் பலகைகள், பிரதிபலிப்பான்கள், சாலையோர தடுப்புத் தூண்கள்,  சாலைகள் சந்திக்கும் மற்றும் பிரியும்  இடங்களில் அதற்கான குறியீட்டுக் கோடுகள், முக்கிய சந்திப்புகளில் உயர்கோபுர மின் விளக்குகள்,  சாலையோர விளக்குகள் போன்றவை சாலையை அமைத்து பராமரிக்கும் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளன. சாலை பாதுகாப்புக்காக வேறு ஏதேனும் நடவடிக்கைகள் தேவை என்றால் அவை குறித்து பாதுகாப்பு ஆலோசனை வழங்கும் நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு ஒப்பந்த நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது தனியாகவோ அத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சேலம்-உளுந்தூர்பேட்டை இடையிலான 136 கி.மீ நீள சாலை கிட்டத்தட்ட மரணப்பாதை என்று அழைக்கப்படும் அளவுக்கு அதிக விபத்துகளும், உயிரிழப்புகளும் நடைபெறும் சாலையாக இருந்தது. அந்த சாலையில் உள்ள புறவழிச்சாலைகள் எப்போது நான்குவழிச்சாலையாக மாற்றப்படும் என்று லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் எதிர்பார்த்திருந்தனர். புறவழிச்சாலைகளை நான்கு வழிப் பாதையாக மாற்ற  மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக சேலம் & உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எட்டு புறவழிச்சாலைகளும் குறிப்பிட்ட காலவரையறைக்குள்  நான்கு  வழிச்சாலைகளாக மாற்றப்பட உள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...