முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கண்ணங்காரக்குடி தர்ம சாத்தா ஐயனார் ஆலயக் குடமுழுக்கும் தமிழர் வழிபாட்டு பாரம்பரிய வரலாறும்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம்  கண்ணங்காரக்குடியில்


அமைந்துள்ள இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் வழிபட்ட


அவர்கள் பிரித்து  வழங்கிய  புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட தர்மசாஸ்தா அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இதன் குடமுழுக்கு விழா இன்று   மங்கள இசை மற்றும் கணபதி பூஜையுடன் தொடங்கியது கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட சிறப்புப் பூஜைகளும் ஆறு கால யாகசாலைப் பூஜைகளும் நடைபெற்றன.

நான்கு நாட்களாக யாகம்  வளர்க்கப்பட்ட நிலையில்  பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட  நீர் யாகசாலையில் கும்பங்களில் நிறைத்து வைத்து சிவாச்சாரியார்களால் பூஜை செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து மங்கள இசை முழங்க யாகசாலையில் வளர்க்கப்பட்ட புனிதநீர் சிவாச்சாரியார்கள் சுமந்து பின்னர் கோபுரத்தின்  கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. விழாதொடர்ந்து கோயிலில் அமைந்துள்ள பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

கும்பாபிஷேக தரிசனம் பெற விழாவில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த பத்தாயித்திற்க்கும் மேலானோர் குவிந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதங்கள் மற்றும் அன்னதானங்களும் பலதரப்பட்ட சமூகத்தினர்களால்  வழங்கப்பட்டது  திருமயம் காவல் துறையினர் போக்குவரத்து சீர் செய்தனர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை தர்மசாஸ்தா நற்பணி மன்றத்தார், கண்ணங்காரைக்குடி ஊரார், தேவஸ்தான அலுவலர்கள் நாட்டார், நகரத்தார் செய்திருந்தனர்.  அய்யனார்  கிராமத்து மக்களின் காவல் தெய்வமாக போற்றப்படுகிறார்.இவர் பலருக்கும் குல தெய்வமாகவும் இருக்கிறார். அய்யனாருக்கு சிலர் கிடா வெட்டி பொங்கல் வைப்பது வழக்கம். அதே சமயம் சிலர் சைவ முறையிலும் அய்யனாரை வழிபடுகின்றனர். அய்யனாரை எவர் ஒருவர் பூஜித்து வழிபட்டாலும் அவருக்கு வேண்டிய வரத்தை நல்கி எப்போதும் காவலாயிருந்து பார்த்துக்கொள்கிறார். அந்த வகையில் ஐயனார் வழிபாடு பழங்காலம் தொட்டே தமிழர்களிடையே இருக்கிறது. 


தாருகாவனத்திலே மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக வேள்வியை குலைக்க வேண்டியிருந்தது. இதற்காக பரமேசுவரன் பிட்சாடனர் உருவமும், விஷ்ணு மோகினி உருவமும் கொண்டனர். பிட்சாடனர் மகரிஷிகளின் பத்தினிகள் வாழும் வீட்டு தெருக்களிலே சென்று பிச்சை கேட்டார். அவரது தோற்றத்தை கண்டவர்களின் மனதில் தடுமாற்றம் ஏற்பட்டது. மோகினியானவள் ரிஷிகள் வேள்விகள் செய்யும் இடத்திற்கு சென்று அவர்களின் மனதை அலைபாய செய்தார். இதனால் வேள்வி தடைபட்டது.


பிச்சாண்டவராக வந்த சிவபெருமானுக்கும், மோகினியாக வந்த திருமாலுக்கும் ஏற்பட்ட உறவால்  உருவான கடவுள்  ஐயனார்.ஐயனார் ஊருக்குள் விரோதிகள், கள்வர்கள், கொடிய விலங்குகள், தொற்று வியாதிகள் வராமல் பாதுகாப்பார். வயல்களில் விளையும் பயிர்களை காப்பவரும் இவரே.


இவர் குதிரையின் மேல் சவாரி செய்வது போல் இருப்பார். குதிரையின் முன் கால்கள் தூக்கியபடி கம்பீரமாக இருக்கும். யானை மீது அமர்ந்த ஐயனாரும் சில ஊர்களில் காணப்படுகிறார். 

சில ஊர்களில் பெரிய அளவில் செய்யப்பட்ட ஐயனார் சிலை திறந்த வெளியில் வைக்கப்பட்டிருக்கும். இந்த ஐயனார், கிரீடம் அணிந்து பெரிய மீசையுடன் காட்சி தருவார். நெற்றியில் திருநீறு அணிந்திருப்பார். வலது கையில் செங்கோல் அல்லது தண்டம் வைத்திருப்பார். சாட்டை, அரிவாள், வில், அம்பு ஆகியவற்றையும் வைத்திருப்பார். இடது காலை மடித்து வைத்துக்கொண்டு, வலது காலை கீழே தொங்கவிட்டிருப்பார்.


கோவிலின் கருவறையில் உள்ள ஐயனார் தமது மனைவியர்களான பூர்ணா, புஷ்கலா ஆகியோருடன் காட்சி தருகிறார். இவர் ஸ்ரீ பூர்ணா, புஷ்கலா சமேத ஐயனார் என்று அழைக்கப்படுகிறார். சில கோவில்களில் ஐயனார் பூரனை மற்றும் பொற்கலை இன்றி தனித்தும் காணப்படுகிறார்.

பரிவார தெய்வங்கள் இந்திரன், அக்னி, எமதர்மன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானியன் ஆகிய எட்டு திசை தெய்வங்களும், யோகிகள், சித்தர்கள், வித்யாதர்கள், கின்னரர்கள் முதலியோர் ஐயனாரை வணங்கியபடி இருப்பர்.ஐயனார் வழிபாட்டில் கருப்பர் மிகவும் முக்கியமானவராகும். இவர் பக்தர்களான சாமியடிகள் மீது இறங்கி வந்து அருள்பாலிப்பார். சாமியடிகள் மூலம் வலம் வந்து தீயசக்திகளை விரட்டுகிறார் என்ற நம்பிக்கை இன்று வரை கிராம மக்களிடம் இருந்து வருகிறது.

நம்பியவருக்கு காவலன் எதிர்ப்பவர்களுக்கு எமனாக இருக்கும் காவல் தெய்வம் கருப்பசாமி அதை 


தஞ்சாவூரில் 1944 ஆம் ஆண்டில் பிறந்த நெடுஞ்செழியன்  தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழத்தில் பேராசிரியராக பணியாற்றியவர் முனைவர் பட்டம் பெற்றவர், சிறந்த எழுத்தாளரான "ஆசீவகமும் ஐயனார் வரலாறும்", "தமிழ் இலக்கியத்தில் உலகாயிதம்" போன்ற பதினெட்டு நூல்களுக்கும் மேல் எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தை அடிப்படையாக கொண்டு, தமிழ் இலக்கியத்தில் உலகாயுதம் என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டமும் பெற்றார். மேலும் இம்முனைவர் பட்ட ஆய்வில் ஆசீவகம் பற்றிய ஆய்வு தேவைப்பட்டதால், ஆசீவகத்தின் வேர் பற்றி ஆராயத்தொடங்கினார். தொடக்கத்தில் ஆசீவகம் வடநாட்டு சமயம் என்று நினைத்த பேராசிரியர் பின் ஆசீவகம் தமிழரின் வாழ்வியல் என்பதை கண்டுணர்ந்தார். அவர் தற்போது தான்  காலமானார் ஆசீவகத்தைத் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் தோற்றுவித்தவர் மற்கலி கோசலர். இவர் புத்தரின் சமகாலத்தவரும் மகாவீரரின் நண்பர் என நம்பப்படுகிறது. தமிழகமெங்கும் உள்ள ஐயனார் கோவில்களே ஆசீவகத்தின் அடையாளங்கள்.ஆசீவக நெறி(அமணம்>சமணம்) என்று கூறியவுடன்,


பெரும்பான்மையானோருக்கு ஜைன நெறியைத்தான் விளக்கப் போவதாகத்  தோன்றும். ஆனால் இல்லை, ஆசீவக நெறி என்பது தமிழர்கள் ஆதி காலந்தொட்டு பின்பற்றி வந்த நெறியாகும். அந்த நெறியை, கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சிவ நெறி, சமணர் கழுவேற்றத்தின் பொழுது அழித்தது(சிவனும் ஒரு ஆசீவகரே. அதைப் கடந்த எழுபது ஆண்டுகளில் தமிழர் தொடர்புகளுடன் ஆசீவக நெறியைப் பற்றி ஆய்வுகள் எழும் பொழுதெல்லாம் அது இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கிறது. இதன்மூலம், தமிழர்களின் உண்மையான வரலாறு அவர்களுக்கே இதுவரை தெரியாமல் வந்திருக்கிறது.ஆசீவக நெறி(அமணம்) - தமிழரின் அழிக்கப்பட்ட நெறி(ஆசீவகம் / Ajivika)இயற்றிய பிங்கல நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டில் ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவாகக் குறிப்பிடுகிறார்.


“சாவகர் அருகர் சமணர் அமணர்

ஆசீவகர் தாபதர் அத்தவத் தோரே"

- ஐயர் வகை, பிங்கல நிகண்டு.

 ஆய்வுலகில் அமணர் ஜைனர் பற்றிய பொருள் குழப்பம் நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. சமணர் என்ற சொல் அமணர் என்ற தமிழ் வடிவத்தின் திரிபாகும். இச்சொல் வைதீக எதிர்ப்பாளர் என்ற பொருளில் ஆளப்பட்டாலும் தமிழ் இலக்கியங்களில் இச்சொல் ஆசீவகர்களை மட்டுமே குறித்துள்ளது. ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களை அருகர்கள் என்றும் பெரிய புராணம்(பன்னிரெண்டாம் நூற்றாண்டு) இவ்விருவரையும் வேறுபடுத்திக் காட்டுகின்றது. அத்துடன் ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களைச் ஜாதி அமணர் என்றும் பிரித்து அடையாளப் படுத்தும். இப்படிப் பெரிய புராணம் ஆசீவகர்களையும் சைனர்களையும் வேறுபடுத்திக் காட்டுவதை முதன்முதலாக ஆராய்ந்து உரைத்தவர் பேரா. முனைவர் தே. வே. மகாலிங்கம் தமிழ்நாட்டிலுள்ள சங்க காலக் கற்படுக்கைகள் யாவும் ஆசீவகர்களுக்கு உரியன என்பதைச் சான்றுகளோடு நிறுவியவர் அவரே ஆவார். ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வுண்மையை அவர் வெளிப்படுத்தியிருந்த போதிலும் தமிழ் ஆய்வுலகம் அவரை இருட்டடிப்புச் செய்துள்ளது.இந்திய வரலாற்றில் மறைந்து போன சமயங்களில்  ஆசீவகமமும் ஒன்று  சமணத்தை பவுத்தமும், வைதீக சமயமும் அழித்தது நாமறிந்த வரலாறு என்றால், சமணத்தின் ஒரு பிரிவாக ஆசீவகம் பார்க்கப்பட்டதால் சமணமும் சேர்ந்து ஆசீவக வரலாற்றை அழித்தது நாம் அறியாத வரலாறு. 


ஆதிநாதர் முதலான 23 தீர்த்தங்கரர்கள் ஜைனர்கள், ஆசீவகர்கள் - ஆகிய இருவருக்கும் பொது. இதனால்தான் இவர்கள் இருவருமே சமணர்கள்.

ஆனால் ஜைனருக்கு மகாவீரர் 24ஆவது தீர்த்தங்கரர், ஆசீவகர்களுக்கோ மர்கலி 24ஆவது தீர்த்தங்கரர். உண்மையில் ஆசீவகம் ஜைனத்தின் போட்டி சமயம். ஆனால் பின்னர் நலிவடைந்த ஆசீவகத்தை, ஜைனம் கைப்பற்றி சுவடே தெரியாமல் போகுமாறு செய்தது. 

அப்படியாக அழிந்து போயிருந்த ஆசீவக வரலாற்றை அதன் கடைசி சல்லிவேரிலிருந்து மீட்டெடுத்தவர் ஆய்வாளர் பேராசிரியர் காலம்சென்ற க.நெடுஞ்செழியன்


தலைமுடியை தனது கைகளால் அகற்றி (மயிர் பறித்து) மொட்டைத் தலையோடு துறவிகளாகும் ஜைனர்களும், நீண்ட தலைமுடியோடு உள்ள ஆசீவகர்களும் ’சமணர்’ - என்ற பொதுப் பெயரால் அழைக்கப்பட்டனர். ஆனால் இருவருக்கும் வழிபாடுகள் கொள்கைகள் வேறுவேறு. ஜைனர்களும் பௌத்தர்களைப் போல ’வானத்தை பூதமாக ஏற்க இயலாது, மொத்தம் நான்கு  பூதங்களே’ - என்ற போது, ’வானமே முக்கியமானது, மொத்தம் ஐந்து பூதங்கள்’ - என்று சொன்னவர்கள் ஆசீவகர்கள். 

எதையும் விவாதித்து விளக்கும் மரபினர் ஆசீவகர்கள், இவர்கள் வசித்த இடங்களான ‘பள்ளி’கள் மக்களுக்குக் கல்வி கொடுத்ததன் தொடர்ச்சியாகவே பின்னர் கல்வி நிலையங்களுக்கு ‘பள்ளி’ என்ற பெயர் வந்தது. 

மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களாக ஆசீவகர்களைப் பல்வேறு இலக்கியங்கள் குறிக்கின்றன, குறிப்பாக மனநல மருத்துவத்தில் இவர்கள் நிபுணர்களாக இருந்துள்ளனர்.

ஆனால் ‘தீமை என்ற ஒன்று இல்லை, எல்லாம் ஊழ்’ - என்ற வினைக் கோட்பாடு இவர்களை வீழ்தியது. மக்கள் பரிகார லஞ்சங்களோடு வந்த பிற மதங்களின் பக்கம் ஈர்க்கப்பட, அறிவார்ந்த மதமான ஆசீவகம் அழிந்தது.

கி.மு.5 லிருந்து 3 ஆம் நூற்றாண்டுகளில் வட இந்தியா வரை செல்வாக்கோடு இருந்த ஆசீவகம், 13 முதல் 15 ஆம் நூற்றாண்டுகளில் பெரும் தேய்வைச் சந்தித்தது. ஆசீவகம் கடைசி மூச்சை விட்ட இடமும் நமது  தமிழ் தேசம் தான்.

தமிழகத்தில் ‘சமணர் கழுவேற்றம்’ - என்று சொல்லப்படுவது பெரும்பாலும் ஆசீவகர் கழுவேற்றமாகவே இருந்துள்ளது, அதற்கு சடைமுடியோடு ஆசீவகர்கள் கழுவேறும் சிற்பங்களும் ஓவியங்களும் சான்றுகளாகின்றன.

அதுபோல சமணர் ஓவியம் என்று சொல்லப்படும் சித்தன்னவாசல் குகை ஓவியங்களிலும் முடிநீண்ட ஆசீவகர்களே உள்ளனர்.

தமிழகத்தில் ஆசீவகர்கள் சங்ககாலத்தில் இருந்தே வாழ்ந்து வருகின்றனர். கி.மு.5ஆம் நூற்றாண்டு  வரை பழமையானதெனக் கருதப்படும் மாங்குளம் கல்வெட்டில் சமணர் என்ற பெயர் காணப்படுகின்றது. இவர்களின் சான்றுகளைத் திரித்துத் தான், ‘தமிழகத்தில் சங்க காலத்திலிருந்தே ஜைனர்கள் உள்ளனர், வடக்கிலிருந்து தமிழருக்கு எழுத்தை அறிமுகப்படுத்தியவர்களே ஜெயினர்கள்தான்’ - எனும் தகவல்  கட்டமைக்கப்பட்டது.

தங்களுக்கு மொழி இல்லாத காரணத்தால்தான் ஜைனர்கள் சமஸ்கிருதத்தையும் பிராமி எழுத்தையும் எடுத்துக் கொண்டனர் - என்பதுதான் வட இந்திய வரலாறு. ஆனால் எழுத்தே இல்லாதவர்கள் நமக்கு எழுத்து கொடுத்தவர்களாக சித்தரிக்கப்பட்டனர். நாமும் நம்பி வந்தோம்.


அதை உடைத்து, ’சங்க காலத்தில் தமிழகத்தில் இருந்தவர்கள் ஜைனர்கள் அல்ல ஆசீவகர்கள். ஆசீவகம் தமிழரின் அறிவை வடக்குக்கு கொண்டு சென்றது, வடக்கிலிருந்து எழுத்தோ, வானியலோ இங்கு வரவில்லை’  என்பதே உண்மை    நமது ஐயனார் போலவே அவரை வழிபட நன்மை தான் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,