தமிழ் நாட்டில் மின்சாரக் கட்டணம் மாதம் ஒரு முறை கணக்கிட்டு வசூலிக்கபடும் என்ற அறிவிப்பு என்னவாயிற்று
என ஆளும் திமுக வை எதிர்த்து முதல் முறையாகக் கேட்டுள்ளார் வணிகர்சங்கதலைவர் விக்கரமராஜா இவரது மகன் சட்டமன்ற உறுப்பினரும் கூட , மின்சாரக் கட்டணம் என்பது 2 மாதங்களுக்கு ஒருமுறை வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தி, கட்டண நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த வகையில், மக்கள் அந்த 100 ,யூனிட் இலவசமாக வருவது தடுக்கும் வகையான 2 மாதங்களிலும் சேர்த்து ஒரு வீட்டில் 100 யூனிட் மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தால், அந்த 100 யூனிட்டுகளுக்கான மின் கட்டணம் முழுவதும் இலவசம். ஆனால், 100 யூனிட்டுகளுக்கு மேலாக மின் செலவு இருந்தால், 101-வது யூனிட்டில் ஆரம்பித்து 200 யூனிட்டுகள் வரையிலாக உள்ள ஒவ்வொரு யூனிட்டுக்கும் 1 ரூபாய் 50 காசு வசூலிக்கப்பட்டது.
உதாரணமாக, ஒரு வீட்டில் 150 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருந்தால், முதல் 100 யூனிட் மின்சாரத்துக்குக் கட்டணம் கிடையாது. 101-வது யூனிட்டிலிருந்து 150-வது யூனிட் வரையிலான 50 யூனிட்டுகளுக்கு மட்டும் கட்டணம் உண்டு. அதாவது ஒரு யூனிட்டுக்கு 1 ரூபாய் 50 காசு என்ற வகையில், 50 யூனிட்டுக்குமாக மொத்தம் 75 ரூபாய். இதனுடன் நிரந்தரக் கட்டணம் 20 ரூபாயைச் சேர்த்து மொத்தமாக 95 ரூபாயை அம்மாதத்துக்கான மின் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.அடுத்ததாக, இந்தக் கட்டண விதிமுறைகளிலேயே இன்னும் பல பிரிவுகள் இருக்கின்றன. அதாவது, முதல் 100 யூனிட் (0-100) மின்சாரம் இலவசம். 100 யூனிட்டுகளுக்கு மேல் 200 யூனிட்டுகளுக்குள்ளாகப் பயன்படுத்துபவர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 1 ரூபாய் 50 காசு கட்டணம் என்பதையும் ஏற்கெனவே பார்த்தோம். இதற்குமேலாக மின்சாரம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் உள்ள தனித்தனியான கட்டண விதிமுறைகளாக (2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கட்டணங்கள் மீண்டும் 2017-ஆம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்டன. அந்த வகையில், திருத்தியமைக்கப்பட்ட கட்டணங்களைக் காண்போம்)
200 யூனிட்டிலிருந்து 500 யூனிட்டுகளுக்கு உள்ளாகப் பயன்படுத்துபவர்களுக்கு கட்டண விதிமுறைகள் மாறுகின்றன. அதாவது, இவர்களுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம். 101-வது யூனிட்டிலிருந்து 200-வது யூனிட் வரையிலாக ஒவ்வொரு யூனிட்டுக்கும் 2 ரூபாய் கட்டணம். அடுத்து, 201-வது யூனிட்டிலிருந்து 500 யூனிட் வரையிலான ஒவ்வொரு யூனிட்டுக்கும் 3 ரூபாய் கட்டணம். இந்த மொத்தக் கட்டணத்தோடு நிரந்தரக் கட்டணம் 30 ரூபாயும் சேர்த்து வசூலிக்கப்படும்.அடுத்ததாக, 500 யூனிட்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு, முற்றிலும் வேறான கட்டண நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, இவர்களுக்கும் முதல் 100 யூனிட் வரை இலவசம். 101-வது யூனிட்டிலிருந்து 200 யூனிட் வரையிலாக ஒவ்வொரு யூனிட்டுக்கும் 3 ரூபாய் 50 காசு கட்டணம். 201-வது யூனிட்டிலிருந்து 500-வது யூனிட் வரையிலாக ஒவ்வொரு யூனிட்டுக்கும் 4 ரூபாய் 60 காசு கட்டணம். 500 யூனிட்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு யூனிட்டுக்கும் 6 ரூபாய் 60 காசுகள் வசூலிக்கப்படுகின்றன. மேலும் இந்த மொத்தக் கட்டணத்தோடு நிரந்தரக் கட்டணத் தொகையாக 50 ரூபாயும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.
சாதாரணமாக, வீடுகளில் வசூலிக்கப்படும் மின் கட்டண நடைமுறை இதுதான். இது தவிர உள்ளாட்சி அமைப்புகள், வணிக நிறுவனங்கள், கைத்தறி தொழில், ஆன்மிக தலங்கள் என ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியே கட்டண விதிமுறைகள் பின்பற்றப்பட்டுவருகின்றன. இனி, இப்போதைய பிரச்னைக்கு வருவோம். ஒரு வீட்டில் இரண்டு மாதங்களிலும் பயன்படுத்தப்பட்ட மொத்த மின் பயன்பாட்டு அளவு 620 யூனிட் என்று வைத்துக்கொள்வோம். மின் கட்டண விதிமுறைகளின்படி, இந்த 620 யூனிட்களுக்கு மொத்தம் 1,652 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், இது முறையானது அல்ல. எனவே, இப்போது இரண்டு மாதங்களுக்கும் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ள மொத்த மின் அளவினை இரண்டால் வகுத்தால், பயன்படுத்திய மின் அளவு கிடைத்துவிடும். அந்த வகையில், மேற்கண்ட 620 யூனிட்டை இரண்டால் வகுத்தால், ஒரு மாதம் பயன்படுத்திய மின் அளவு என்பது 310 யூனிட்டுகள். அதேபோல், மற்றொரு மாத மின் அளவு 310 யூனிட்டுகள் என்பதாகிவிடுகிறது.இப்போது, ஒரு மாத 310 யூனிட் மின்சாரத்தில் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாகி விடுகிறது. அடுத்ததாக 101-லிருந்து 200 வரையிலான யூனிட்டுகளில் ஒவ்வொரு யூனிட்டுக்கும் 2 ரூபாய் வீதம் கணக்கிட்டால் மொத்தம் 200 ரூபாய். அடுத்து, 201-வது யூனிட்டிலிருந்து 310-வது யூனிட் வரையிலாக ஒவ்வொரு யூனிட்டுக்கும் 3 ரூபாய் வீதம் கணக்கிட்டால் மொத்தம் 330 ரூபாய். ஆக மொத்தம் 530 ரூபாய். இதனோடு நிரந்தரக் கட்டணம் ரூபாய் 30-ஐ சேர்த்தால் மொத்தம் 560 ரூபாய் தான்.
இதேபோல், மற்றொரு மாத மின்சார அளவான 310 யூனிட்டுக்கும் 560 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. ஆக மேற்கண்ட இரண்டு மாதங்களுக்கும் சேர்த்து மொத்தமாக செலுத்தவேண்டிய தொகை என்பது 560 + 560= 1,120 ரூபாய். அவ்வளவு தான். (தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள மின் கட்டண அட்டவணையைப் பார்க்கவும்) இதை தான் தற்போது வணிகர்கள் சங்கம் சார்ந்த விக்ரமராஜா வினாவாக ஏழுப்பியுள்ளார் மாதா மாதம் மின்சாரக் கட்டணம் கணக்கெடுப்பு செய்தால் மக்கள் பாதிப்புகள் குறையும் தற்போது வினா ஏழுந்துள்ள நிலையில் மாநில மின்துறை அமைச்சர் பதில் இதுவரை பதிவாகவில்லை. .
கருத்துகள்